நோய்களை குணப்படுத்தும் சிறுகண்டல் மரம் |
சிறுகண்டல் அலையாத்தி மரங்கள், சராசரியாக மூன்று முதல் ஐந்து மீட்டர் வளரும், இதன் மரங்கள் கட்டுமானப் பணிகளில் பயன் ஆகிறது, அலையாத்தி காடுகள் மீட்பு பணிகளிலும் உதவுகிறது, புற்றுநோய், சக்கரைநோய், போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தக்கூடிய பண்புகள் கொண்டது, சாதாரணமாக காடுகளைவிட 10 மடங்கு கூடுதலான கார்பனை, இந்த சுற்றுச்சூழலில் இருந்து நீக்கி, தனக்குள் சேமித்து வைக்கின்றன..
தாவரவியல் பெயர்:: ரைசோபோரா ஆப்பிகுலேட்டா (RHIZOPORA APICULATA)
பொதுப்பெயர்: டால் ஸ்டில்ட் மேங்ரோவ் (TALL STILT MANGROVE)
பலமொழிப் பெயர்கள்:
கன்னடா: கான்ட்லா (KAANTLA)
மலையாளம்: பீக்கண்டல் (PEEKANDAL)
தமிழ்: கண்டல், சிறு கண்டல்
தெலுங்கு: உப்புப் பொன்னா
தாவரக் குடும்பம்: ரைசோபோரேசி
வளரியல்புகள்:
மரங்கள் சராசரியாக மூன்று முதல் ஐந்து மீட்டர் உயரம் வளரும். ஆனால் 30 முதல் 40 மீட்டர் உயரம் கூட வளரக்கூடியவை இந்த சிறு கண்டல் மரங்கள். இதன் உயரம் மற்றும் வளர்ச்சி அங்கு நிலவும் தட்பவெப்பநிலை மற்றும் மண்
தன்மையைப் பொறுத்து வேறுபடும்.
சிறுகண்டல் அலையாத்தி
மரத்தின் வேர்கள் வித்தியாசமானவை. அவை அடிமரத்திலிருந்து
வளர்ந்து இறங்கும். இந்த பக்கவாட்டு வேர்கள் வில் போல வளைந்து பூமியில் இறங்கும்.
தூரத்தில் இருந்து பார்த்தால், இந்த மரங்களின் அடி மரம் கூட தெரியாது, இந்த பக்கவாட்டு வேர்கள் புதர்போல வளர்ந்து மறைத்தபடி இருக்கும்.
வேறு சில அலையாத்தி மரங்களிலும் இதுபோன்ற வேர் அமைப்பினை பார்க்க
முடியும்.
இலைகள் பார்க்க பச்சை நிற கண் வடிவத்தில் இருக்கும். நீளமான இலைகள் 8
முதல் 15 சென்டிமீட்டர் நீள வடிவத்தில்
பளபளப்பான பசுமை நிறத்தில் அடிபுரத்தில் கருப்பு நிற புள்ளிகள் உடனும் இருக்கும். பூக்கள் நேரடியாக கிளைகளில் ஓட்டி வைத்தது போல இருக்கும். பூவிதழ்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறமாக இருக்கும். பூக்கள் பூத்தவுடன் அதிக நேரம் கிளைகளில் இருக்காது. உடனடியாக உதிர்ந்து போகும்.
இதன் மரங்கள் கட்டுமானப் பணிகளில் பயன் ஆகிறது. உத்திரங்களாக கனவு படகுகள் செய்ய மேஜை நாற்காலி உட்பட வீடுகளுக்கு
தேவைப்படும் மரச்சாமான்கள் அத்தனையும் இதில் செய்யலாம். இதன் மூட்டு வேர்கள் அல்லது தாங்கு வேர்களை நங்கூரம் தயாரிக்க
பயன்படுத்துகிறார்கள். கட்டுமானப் பணிகள் போக
மீதமுள்ள மரங்கள் விறகாக பயனாகிறது. கரிகள் செய்கிறார்கள். அலையாத்தி காடுகள் மீட்பு பணிகளிலும் இதனை பயன்படுத்துகிறார்கள்.
மருத்துவ பயன்கள்
நுண்ணியிர்கள், புற்றுநோய், சக்கரைநோய், வயிற்றுப்போக்கு மற்றும்
இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தக்கூடிய பண்புகள் இந்த சிறுகண்டல் மரத்தில் உள்ளன. அதற்கான தாவர ரசாயனங்கள் (PHYTO-CHEMICALS) இதில் நிரம்ப உள்ளன.
சிறுகண்டல் மரத்தின் இலைகள், பட்டைகள், வேர்கள், ஆகியவற்றில் அனைத்திலும் இந்த மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இதர அலையாத்தி மரங்களை ஒப்பிடும்போது, சிறுகன்றல் மரம் அதிகமான அளவு கார்பனை அதாவது கரியமரவாயுவை இந்த
சுற்றுச்சூழலிலிருந்து நீக்கும் சக்தி உடையது என்கிறார்கள்.
குறிப்பாக மேங்குரோவ் அலையாத்தி மரங்கள் காற்றில் இருக்கும் கார்பனை உறிஞ்சி எடுத்து
தனது வேர்கள் மற்றும் கிளைகளில் சேமித்து வைக்கின்றன. சாதாரணமாக காடுகள் கவர்ந்து இழுக்கும் கார்பன்டை ஆக்சைடை விட
அலையாத்திக் காடுகள் 10 மடங்கு கூடுதலான கார்பனை, இந்த சுற்றுச்சூழலில் இருந்து நீக்கி, தனக்குள் சேமித்து வைக்கின்றன.
சிறுகண்டல் ஒரு ஆண்டு வயதுள்ள ஒரு ஹெக்டர் பரப்பில் உள்ள மரங்களை
வெட்டி எடுத்து, அதில் எவ்வளவு கார்பன்’ஐ தன்னிடத்தில்
வைத்துள்ளது என்று ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். அது 0.363 டன் கார்பனை சேமித்து வைத்துள்ளது என்று கண்டுபிடித்து
இருக்கிறார்கள். மூன்று ஆண்டு வயதுள்ள மரங்களில், அந்த அளவு 5591
டன் என்றும் ஐந்தாண்டு மரங்களில் இது 7,248 டன் என்றும் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி இந்தோனேசியா நாட்டில் களிமந்தன் பகுதியில் 2019 ஆம் ஆண்டு செய்தது.
பரவி இருக்கும் இடங்கள்
ஆஸ்திரேலியா குவாம், இந்தியா, இந்தோனேஷியா, மலேசியா, மைக்ரோநேசியா, நியூகலிடோனியா, பப்புவா நியூகினியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், சாலமன் அய்லாண்ட்ஸ், ஸ்ரீலங்கா, தைவான், மாலத்தீவுகள், தாய்லாந்து, வாநாட்டு மற்றும் வியட்நாம், ஆகிய பகுதிகளில் பரவி
உள்ளது. தமிழ்நாட்டில் கடலூர், மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் இந்த சிறுகண்டல் மரங்கள்
பரவியுள்ளன. இந்தியாவில் தமிழ்நாடு தவிர, கர்நாடகா, கேரளா, ஒரிசா, ஆகிய மாநிலங்களிலும் இந்த சிறுகண்டல்
மரங்கள் பரவியுள்ளன.
சிறுகண்டல் மரம் பற்றி இன்னும் சுவாரஸ்யமான தகவல் ஏதும் உங்களுக்கு
தெரிந்திருந்தால் எனக்கு சொல்லுங்கள் நன்றி வணக்கம்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment