ஆஸ்திரேலியா சிட்னி சிவப்பு பிசின் மரம் |
சிட்னி சிவப்பு பிசின் மரம் கிழக்கு ஆஸ்திரேலியா மரம், பரந்து வளரும், மரம் அழகான ஊதா சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்களில் இருக்கும், இங்கு உள்ள பிரபலமான அழகு மரங்களில் ஒன்று, பல தொழில்களுக்கு பயன்தரும் பிசின் தருவதில் குறிப்பிடும்படியான மரம், இதன் மரக்கட்டைகள் கட்டுமான வேலைகளில் பயனாகிறது.
தாவரவயல் பெயர்
ஆங்கோபோரா கோஸ்டேட்டா (ANGOPHORA COSTATA)
தாவரக் குடும்பம்: மிர்டேசி (MYRTACEAE)
தாயகம்: கிழக்கு ஆஸ்திரேலியா
பொதுப்பெயர்கள்: ஸ்மூத் பார்க்டு ஆப்பிள், ரோஸ் கம், ரோஸ் ஆப்பிள், சிட்னி ரெட்கம், ரஸ்டிகம் (SMOOTH BARKED
APPLE, ROSE GUM, ROSE APPLE, SYDNEY RED GUM, RUSTY GUM)
வளர் இயல்பு
பலவிதமான மண்தன்மைகளில் வளரும், கிளைகள் வளைந்து நெளிந்தபடி இருக்கும், மரக்கட்டைகள் உறுதியாக இருக்கும், ஆனால் நாட்பட உழைக்காது, வேலி அமைக்க, கட்டிடங்களில் தரை பாவவும்,
இந்த ஆங்கோபோரோ
தாவரக் குழுமம் யூகலிப்டஸ் தாவர குழுமத்துடன் நெருங்கிய தொடர்புடைய மரம்.
பரந்து வளரும்
பெரிய மரம், 25 மீட்டர் உயரம் வரை வளரும், மரத்தின் தண்டு பகுதி அழகான ஊதா சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்களில்
இருக்கும். இதன் மரக்கிளைகள் சுலபமாக முறிந்து
விழக்கூடியதாக இருக்கும்.
இது
ஆஸ்திரேலியாவின் பிரபலமான அழகான மரங்களில் ஒன்று பெரிய தோட்டங்களில் சாலைகளில்
அழகுக்காக இந்த மரங்களை நடுகிறார்கள்.
இந்த மரத்தின் தேன், ஏராளமான பூச்சி இனங்களுக்கும் சிலவகை வவ்வால்களுக்கும் உணவாகிறது. கிளிகள் இதன் விதைகளை விரும்பி சாப்பிடுகின்றன.
பயன் தரும்படியான
பிசின் தருவதில் குறிப்பிடும்படியான மரம் என தெரிகிறது அதனால் தான் இதன் பெயர் சிட்னி ரெட்கம்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment