நோய்களை குணப்படுத்தும் இலைக்கள்ளி மரம் |
அகலமான மேஜை கரண்டிகள் போல இருக்கும். பார்க்க அழகாய் இருக்கும் இலைககளைக் கொண்ட இலைக்கள்ளி, இதன் பால் அல்லது இலைச்சாற்றை, காதுவலி சரும நோய்கள், மருக்கள், சொறிநோய், குடற்புண், ரத்தச்சோகை, நீர்கோர்த்திருத்தல், ஆஸ்துமா, சிப்பிலிஸ், பாலியல் நோய், தொழுநோய், சிறுநீரகத்தில் கல், உட்பட பல நோய்களை குணப்படுத்த உதவும் மூலிகைக்கள்ளி என்பது நமக்கு தெரியாது. இதுபற்றிய சில அடிப்படை விவரங்களை கொஞ்சம் தெரிந்து கொள்ளுவோம்.
தாவரவியல் பெயர்: ஈப்பார்பியா நெரிஃபோலியா (EUPHORBIA NERIIFOLIA)
பொதுப் பெயர்கள்: இண்டியன் ஸ்பர்ஜ் ட்ரீ, ஹெட்ஜ்
ஈப்போர்பியா (INDIAN SPURGE TREE,
HEDGE EUPHORBIA)
பலமொழிப் பெயர்கள்:
பெங்காலி: மானசசி(MANASAI)
ஹிந்தி: டண்ட தாவுர்(DANDA
THAUR)
கன்னடா:ஈவ்கள்ளி (EWGALLI)
மலையாளம் எலக்கள்ளி, இலைக்கள்ளி (ELAKALLI, ILAIKALLI)
மராத்தி: மிங்கட் (MINGUT)
ஒரியா: தோர் (THOR)
சமஸ்கிருதம்: குத்தா (GUDHA)
தமிழ்: எலக்கள்ளி,பெரம்புகள்ளி (ELAIKALLI,
PERUMBU KALLI)
தெலுங்கு: அக்குஜெமுடு (AKU JEMUDU)
உருது;துகார் (THUHAR)
மருத்துவ பயன்கள்:
இதன் பால் அல்லது
இலைச்சாற்றை, காது வலி தோல் அல்லது சரும நோய்கள், மருக்கள், சொறிநோய், ஆகியவற்றைக் குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள்.
இலைக்கள்ளியின் இலைகள்
அகலமான மேஜை கரண்டிகள் போல இருக்கும். பார்க்க அழகாய் இருக்கும். கிராமத்து சிறுவர்கள் இதன் இலைகளைப் பறித்து வைத்து
விளையாடுவார்கள். நானும் இதனை விளையாடி இருக்கிறேன்.
இதன் இலைகளை
நெருப்பில் வாட்டி அதனை முறுக்கிப் பிழிந்தால் நிறைய சாறு வடியும். இந்த இந்த சாற்றினை, காது வலி இருப்பவர்களுக்கு, காதில் விட வலி சரியாகும்.
எங்கள் வீட்டில்
இந்த வைத்தியத்தை என் அப்பா நிறைய பேருக்கு செய்துள்ளார். நான் பலமுறை பார்த்திருக்கிறேன். என் அப்பா ஆசிரியராக இருந்தார். சித்த மருத்துவராவும் இருந்தார். ஞாயிற்றுக் கிழமைகளில் எங்கள் வீட்டில் நிறைய பேர் வைத்தியம் செய்து கொள்ள
வந்து போவார்கள். வெளியூரிலிருந்து சில சமயம் இரண்டு, மூன்று பெட்டி
வண்டியில் கூட வசதியானவர்கள் வந்து போவார்கள்.
காரணம் ஒருகாலத்தில் எங்கள் குடும்பம் வைத்தியர் குடும்பம். என் அம்மாவின் அப்பாவும் அவருடைய அப்பாவும், அந்தப் பகுதியில் ஜமீனில் வைத்தியர்களாக இருந்தவர்கள். அவர்களுக்கு சில கிராமங்களில் வரிவசூல் செய்யும் உரிமை
தந்திருந்ததாகக்கூட சொல்லுவார்கள்.
எங்கள் வீட்டில்
அவர்கள் பயன்படுத்திய ஓலைச்சுவடிகள் கட்டு கட்டாக இருந்ததை நான்
பார்த்திருக்கிறேன்.
வளரிடம்
இந்த இலைகள்ளி
மரங்கள் வறண்ட நிலப்பகுதிகள், கல்லாங்கரடுகள், பாறைகள் நிறைந்த மலைப்பகுதிகள், தரிசு நிலங்கள் ஆகியவற்றில் வளரும்..
மூன்று முதல் ஐந்து
மீட்டர் உயரம் வரை வளரும். இதன் கிளைகள் 6 முதல் 15 சென்டிமீட்டர் பருமனாக, பசுமை நிறமாக இருக்கும். நிறைய முட்கள் ஜோடிஜோடியாக இருக்கும். கிளை நுனிகளில் இலைகள் கொத்தாக இருக்கும்.
பரவி இருக்கும்
இடங்கள்
வடக்கு, மத்திய, மற்றும் தென்னிந்தியா முழுக்க, இலைக்கள்ளி பரவியுள்ளது. வறட்சியான, கல்லாங்கரட்டு நிலங்களில், தாழ்வான மலைப்பகுதிகளில், இலைக்கள்ளி மரங்கள் பரவியுள்ளன..
முக்கியமாக பரவி
இருக்கும் மாநிலங்கள் அசாம் மற்றும் மேகாலயா தமிழ்நாட்டில் அதிகம் பரவி இருக்கும்
மாநிலங்கள், அஸ்ஸாம் மற்றும் மேகாலயா.
தமிழ்நாட்டில் அதிகம் பரவியிருக்கும் மாவட்டங்கள் கோயம்புத்தூர் மற்றும் விழுப்புரம்.
யுனானி மருத்துவம்
யுனானி
மருத்துவத்தில், முக்கியமாக மூட்டு வலி குணப்படுத்த
பயன்படுத்துகிறார்கள். இது தவிர பல நோய்களை குணப்படுத்த பல மருந்துகளை தயாரித்து உபயோகப்படுத்துகிறார்கள்.
ஆயுர்வேத
மருத்துவம்
சுவாசம் தொடர்பான
நோய்கள், கட்டிகள், சுயநினைவிழத்தல், மூலம், மண்ணீரல் வீக்கம் போன்றவற்றை, குணப்படுத்த இலைகள்ளியை ஆயுர்வேத மருத்துவம் பயன்படுத்துகிறது. குடற்புண், ரத்தச்சோகை, நீர்கோர்த்திருத்தல், ஆஸ்துமா, சிப்பிலிஸ், பாலியல் நோய், தொழுநோய், சிறுநீரகத்தில் கல், ஆகியவற்றைக் குணப்படுத்த இதில் மருந்துகள் தயார் செய்கிறார்கள்.
.பாம்புக்கடி மற்றும் தேள்கடிக்கு இதன்
வேரிலிருந்து விஷமுறிப்பு மருந்து தயாரித்துக் கொடுக்கிறார்கள்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment