Wednesday, July 19, 2023

SOUTHERN MEXICO FRUIT TO VANIYAMBADI 261.வாணியம்பாடியில் என்னைத் தேடிவந்த முட்டைப்பழம்

 

என்னைத் தேடிவந்த
முட்டைப்பழம் 

முட்டைப்பழ மரம்


தாவரவியல் பெயர்
: பௌடீரியா கேம்பெச்சியானா (POUTERIA CAMPECHIANA)

கேள்விபடாத பேருடைய நாடுகளிலிருந்து கேள்விப்படாத பழங்கள் எல்லாம் நம்ம ஊரில் விற்பனையாகின்றன. இத்தினியோண்டாய் உலகம் சுருங்கி விட்டது என்பது உண்மைதான். இது தகவல் யுகம் என்பதை நிரூபிக்கும் அம்சங்கள் இவை எல்லாம்தான்.

ஒரு நாள் இந்த பழம் வாணியம்பாடியில் என்னைத் தேடி வந்தது. முட்டை பம் என்று சொன்னார்கள். பார்க்க முட்டை மாதிரி, உருண்டையாக, மஞ்சளாக, இருந்தது. த்தை இரண்டாக நறுக்கி எடுத்து என்னிடம் கொடுத்தார்கள். உள்ளே சிக்கனமாக இரண்டு விதைகள் கருப்பாக இருந்தது.

அதை எடுத்து விட்டு அப்படியே ஒரு ஸ்பூன் மூலமாக எடுத்து சாப்பிட்டேன். கொஞ்சம் அழுத்தமான தசை அவித்த மஞ்சள் முட்டை மாதிரியே இருந்தது. அதை சாப்பிட்டு முடிக்கும்வரை இது முட்டைப் பழம் என்பது ஞாபகத்தில் வந்து கொண்டே இருந்தது. தின்னத் தின்னத் திகட்டாத  அளவு இனிப்பு.

உங்கள் ஊரிலும் எங்காவது கிடைக்கிறதா என்று பாருங்கள். குறிப்பாக சுற்றுலா நகரங்களில் இந்த பழங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. முட்டை பம், பெயரை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நாம் இந்த பழம் பற்றிய கூடுதலான பயன்கள், இதில் உள்ள சத்துக்கள், எந்த நாட்டுக்கு சொந்தமான பழம், இதன் தாவரவியல் பெயர் என்ன ? இது பற்றி எல்லாம் கொஞ்சம் பார்க்கலாம். இது தெற்கு மெக்சிகோவிற்கு சொந்தமான பழம்.

இந்த பழங்களில் இருக்கும் கொட்டைகள் இலுப்பை மற்றும் சப்போட்டா விதைகள் போல இருக்கும். இவை மூன்றுமே சப்போட்டேசி (SAPOTACEAE) என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தவை என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

இதன் தாவரவியல் பெயரை தெரிந்து கொண்டால் கூடுதலான செய்திகளை தேடித் தெரிந்து கொள்ளலாம். இதன் தாவரவியல் பெயர் பவுட்டேரியா கேம்பிசியானா (POUTERIA CAMPECHIANA)

இந்த பழங்கள், எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும். காரணம் இதில் பொட்டாசியம் மற்றும் கால்சியம் சத்துக்கள் கணிசமாக உள்ளன. இதில் இரும்பு சத்தும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு உள்ளது. இது ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு உதவியாக இருக்கும். இதனால் சிகப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தில் கூடுதலான ஆக்ஸிஜன் சேரும்.

இது கொழுப்பு இல்லாத பழம். 100 கிராம் முட்டை பழத்தில் ஒரு மில்லி கிராம் கொழுப்பு கூட கிடையாது. ஆனால் புரதச்சத்து ரெண்டு கிராம் உள்ளது. 148 கிலோ கலோரிச்சத்து உள்ளது. இந்தப் பழங்களில் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால் இதனை சாப்பிட சர்க்கரை நோயாளிகளுக்கு சிபாரிசு செய்கிறார்கள்.

வெப்பமண்டல மற்றும் மிக வெப்ப மண்டல பகுதிகளில் இதன் மரங்கள் சுமார் எட்டு மீட்டர் உயரம் வரை வளரும்.

மத்திய அமெரிக்கா, கரீபியன், தெற்கு மெக்ஸிகோ, ஆகிய பகுதிகளில் சிறிய அளவில் முட்டைப் மரங்களை சாகுபடி செய்கிறார்கள். உற்பத்தியும் குறைவான அளவில்தான் செய்கிறார்கள். பழங்களை குளிர்ப்பருவத்தில் அறுவடை செய்கிறார்கள். புதிதாக அறுவடை செய்த பழங்கள் அடுத்த பத்து நாட்களில் கனிந்து சாப்பிட தயார் ஆகின்றன. தற்போது இந்தியா, கம்போடியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஸ்ரீலங்கா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, மார்க்கெட்டுகளில் இந்த பழங்கள் முகம் காட்டுகின்றன.

இந்தியாவில் மகாராஷ்டிரா, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், கேரளா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் தலைகாட்ட ஆரம்பித்துள்ளது. பாண்டிச்சேரியில் ஆரோவில் பகுதியில் சில தோட்டங்களில் வளர்க்கிறார்கள். இந்த பழங்களை உற்பத்தி செய்யும் இடங்களில் எல்லாம், இதனை கனிஸ்டல்பழம் (CANISTAL FRUIT) என்று சொல்லுகிறார்கள். சிலர் எல்லோ சப்போட்டா (YELLOW SAPOTA)இருக்கிறார்கள், நாம் முட்டை பழம் (MUTTAI PAZHAM)என்கிறோம்..

இதன் விதைகளை விதைக்கலாம், பழத்திலிருந்து எடுத்த விதைகளை இரண்டு ஒரு நாட்களில் விதைக்க வேண்டும். அவை முளைக்க இரண்டு முதல் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும். வளர்ந்த மரங்கள் ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கி பழங்கள் தருகின்றன.

இனி முட்டைப் பழங்கள் எங்கு கிடைத்தாலும், பழங்களை சாப்பிட்டுவிட்டு கொட்டைகளை மறக்காமல் தோட்டத்தில் விதைத்து வையுங்கள். ஏற்கனவே உங்கள் தோட்டத்தில் முட்டை பழமரம் இருந்தால் எனக்கு சொல்லுங்கள் நன்றி. 

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...