Monday, July 3, 2023

SIGAIKAI NATURAL SHAMPOO FOR LONG HAIR 221 நீளமான கூந்தலுக்கு உத்திரவாதமான ஷேம்ப்பு சிகைக்காய்


நீளமான கூந்தலுக்கு  உத்திரவாதம்
சிகைக்காய் 


தாவரங்களிலுள்ள சேப்பனீன்கள்
(SAPANINS) என்னும் தாவர ரசாயனம் தான் நுரை வருவதற்கு காரணமாக இருப்பவை இதன் பட்டைகளில் கூடுதலான அளவில் சேர்க்க நினைவில் இருக்கின்றன சேப்பனின்கள் பொதுவாக சுத்தப்படுத்திக் ஆகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது

சிகைக்காய் செடியின் இலைகளை தலைப் பொடுகைக் கட்டுப்படுத்தும் பண்புகளுக்காக உபயோகப்படுத்துகிறார்கள்.

சிகைக்காய் மரம் பற்றிய சில முக்கிய தகவல்கள்

பொதுபபெயர்:சோப் பாட் வேட்டில்  (SOAP POD WATTLE)

தாவவரவியல் பெயர்: அகேசியா கான்சின்னா (ACACIA CONCINNA)

தாவரக்குடும்பம்: ஃபேபேசி (FABACEAE)

மேற்கு வங்காள மாநிலத்திலும் காலம் காலமாக சிகைக்காய் பொடியை சோப்புக்கு பதிலாக பயன்படுத்துகிறார்கள். அது மட்டும் இல்லாமல் மீன்பிடிப்பதற்கான நஞ்சாகவும் இதனை பயன்படுத்துகிறார்கள்.

சிகைக்காய் இலைகளில் தயாரிக்கும் குடிநீரை மருந்தாகத் தந்து காலம் காலமாக மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்துகிறார்கள்.

அமிலச் சுவையுடன் இருக்கும் இதன் இலைகளில் சட்டினி தயாரித்தால் அற்புதமாக இருக்கும் என்கிறார்கள்.

பளபளப்பான பட்டுப்போன்ற முடியைப் பெறுவது தலை பொடுகிலிருந்து விடுதலைப் பெறுவது, உலர்ந்த முடியை கண்டிஷன் செய்வது, தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்துவது, தலைப் பேன்களைக் கட்டுப்படுத்துவது, பொடுகுப் புண்களை குணமாக்குவது, முடிகள் முறிவையும் பிப்பையும் சரி செய்வது, முடிகளுக்கு போஷாக்கு தருவது, முடிகளுக்கு ஊட்டமளிப்பது, முடிகளுக்கு இளமை அளிப்பது, முடியின் கருமைத் தன்மையை நீண்ட காலம் பேணுவது, குறைவான கால அளவில் முடிகளை நீளமாய் வளர உதவுவது, இப்படி தலை முடியைப் பாதுகாக்க மூலிகையாக விளங்குவது சிகைக்காய் என்னும் சீயக்காய்.

பரவியுள்ள இடங்கள் இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், அருணாச்சல பிரதேசம், அசாம், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இந்த மரங்கள் பரவியுள்ளன.

8. சிகைக்காய் சிகைக்காய் பழமையான காலம் தொட்டு பயன்பட்டு வரும் கொடி வகை மரம். இதன் தாவரவியல் பெயர் அகேசியா கான்சின்னா (ACACIA CONCINNA) என்பது தாவர குடும்பத்தைச் சேர்ந்தது மைமோசி (MIMOSACEAE)என்னும் தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. கொக்கி போன்ற கூர்மையான முட்களை உடையது. சுருக்கமாக சொல்வதென்றால் இது பாரம்பரிய ஷாம்பு. தலைமுடியை சுத்தம் செய்ய உதவும். இதன் நெற்றுக்களின் தூள் அல்லது பொடி தான் சீயக்காய் என்பது.

இந்தியாவில் இன்று நிறைய பேர் இளவயது வழுக்கையுடன் அலைவதற்கு முக்கியமான காரணம் சீயக்காயிலிருந்து ஷாம்புவிற்கு மாறியதுதான்.

சீகைக்காய் பயன்படுத்தினால் தலைமுடி மெல்லியதாக மாறாது, உதிராது, தலைமுடி உறுதியாகும், பொடுகு தொல்லை வரவே வராது, சில ஷாம்பு தயாரிக்கும் கம்பெனிகள் விளம்பரத்திற்காக இதன் பெயரை மட்டும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE  A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

  

2 comments:

S. Gunasekaran said...

இன்றைய காலகட்டங்களில், தலை வழுக்கைக்கு காரணம் சிகைக்காயை மறந்து ஷாம்பூ பக்கம் நமது கவனத்தை திருப்பியதுதான் என்று மிகத் தெளிவாகக் கூறியுள்ளீர்கள். சனி நீராடு என்ற அவ்வைப்பிராட்டியின் அமுதமொழி மறக்கப்பட்டு வருகிறது. சனிக்கிழமை தோறும் நல்லெண்ணைக்குளியலில் சிகைக்காயின் பங்கு போற்றத்தக்கது. நன்றி.

S. Gunasekaran said...

தாய்ப்பால், தேங்காய்ப்பால்,பசுவின் பால், எருமைப்பால், வெள்ளாட்டுப்பால், கழுதைப்பால் வரிசையில் குதிரைப்பால் வலம்வர ஆரம்பித்துவிட்டதே! உண்மையில் குதிரைப்பால் அவ்வளவு ஆரோக்கியமானதா நண்பரே?

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...