Friday, July 7, 2023

SHEPHERD TREE WITH WORLD’S DEEPEST ROOTS 240. உலகின் நீளமான வேர் மரம் இதுதான்

 

நீளமான வேர் மரம் 
ஷெப்பர்ட் ட்ரீ


தாவரவியல் பெயர்: பாசியா அல்பிட்ரங்கா (BOSCIA  ALBITRUNCA)

தாயகம் தென்னாப்பிரிக்கா

தாவர குடும்பம்: கேப்பரேசி(CAPERACEAE)

வேர்கள் தான் ஒரு தாவரத்தின் மூளை - சார்லஸ் டார்வின்.

ஒரு தாவரம் இயற்கையின் சூழலில் தன்னை நிலை நிறுத்திக் கொள்வது என்பது அதன் வேரின் நீளத்தைப் பொருத்தது என்கிறார்கள் நிபுணர்கள்.

வளரியல்பு

பசுமை மாறாமரம், வெப்பமான பகுதிகளுக்கு ஏற்றது, தாழ்வான உப்பு தன்மை கொண்ட மண்ணில், சுண்ணாம்பு பாறைகள் நிறைந்த மண்ணில், மற்றும் பாறைகள் நிறைந்த மண் கண்டத்திலும் வளரக்கூடியது.

போட்ஸ்வானா,மிபியா மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளில் பந்து இருக்கும் கலகாரி பாலைவனத்தின் முக்கியமான மரம் இந்த செப்பேர்ட் ட்ரீ (SHEPHERED TREE).

செப்பெர்ட் என்றால் ஆங்கிலத்தில்  ஆடுமாடுகள் மேய்ப்பவர்கள், அல்லது இடையர்கள் என்று அர்த்தம். சொல்லப்படும் இடையர் மரம். செப்பேர்ட் ட்ரீ என்று இருப்பதால் இதனை நாம் தமிழில் இடையர் மரம் என்று சொல்லலாம்.

மூன்று லட்சத்து 50 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட இந்த கலகாரி பாலைவனத்தில், ஆடு மாடுகள் என்ற கால்நடைகளை மேய்ப்பவர்களுக்கு உதவியாக இந்த மரம் இருப்பதால் இதனை செப்பேர்ட் ட்ரீ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

வளரியல்பு:

இந்த மரம் சுமார் 10 மீட்டர் உயரமும் வெண்மை நிறமான அடிமரம் மற்றும் கிளைகளுடன் இலைகள் குறுகலாகவும், சிறிய பசுமை கலந்த மஞ்சள் நிற பூக்களுடனும், இதழ்கள் இன்றி நட்சத்திர வடிவிலும், கொத்துக்கொத்தாகவும் இருக்கும்.

இதன் பழங்களின் தோல் ஓடுகள் போலவும், வெண்ணிற பழ தசையுடனும், 10 மில்லி மீட்டர் விட்டம் கொண்டதாகவும், கொத்துக்களாகவும் இருக்கும்.

இந்த மரத்தின் அடிமரம் மற்றும் கிளைகளின் மேல் உள்ள பட்டைகள் வெள்ளை வெளேர் என இருக்கும் அதனால்தான் இந்த மரத்தின் தாவரவியல் பெயரில் அல்பிட்ரங்க்கா (ALBITRANGA) என்று சேர்த்திருக்கிறார்கள் என்றால் வெள்ளை அடிமரம் உடையது என்று பொருள்.

கேப்பரேசி தாவர குடும்பத்தில், 700 வகையான தாவர வகைகள் உள்ளன.

உலகிலேயே நீளமான வேர்களைக் கொண்ட மரம் என்று சொல்லுகிறார்கள். இடையர் மரங்களின் வேர்கள்தான் உலகிலேயே மிக நீளமானவை இதன் வேர்களில் ஒரு வகை கஞ்சி, காபி மற்றும் பீர் போன்ற மது வகைகளைத் தயார் செய்கிறார்கள்.

காரி பாலைவனத்தில் மேற்கொண்ட ஆய்வுகளின் படி, நன்கு வளர்ந்த ஒரு இடையர் மரத்தின் வேர் 230 அடி, அதாவது 70 மீட்டர் இருந்ததாக, பதிவு செய்துள்ளார்கள். வேறு எந்த வகை மரங்களுக்கும் இவ்வளவு நீளமான பேர்கள் இல்லை என்று அடித்து சொல்லுகிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்.

இந்த மரத்தின் நீளமான வேர்கள் பற்றிய ஆய்வு கொலராடோ  பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டது. ஒரு மரத்தின் தலைப்பரப்பின் நீளம்போல அதன் வேர்கள் சுமார் ஏழு மடங்கு நீளமாக இருக்கும் என்று சொல்லுகிறார்கள்.

மரங்களின் வேர்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். மரங்களின் வேர்களில் மொத்தம் இரண்டு வகை உள்ளன.

பொதுவாக ஒரு விதை இலையை தாவரங்களின் வேர்கள் அதிக ஆழம் போகாத மேலோட்டமான சல்லி வீரர்களாக (ADVENTITIOUS FIBROUS ROOT SYSTEM)அமைந்திருக்கும்.

இருவிதையிலைத் தாவரங்களில் ஆணிவேர்களும் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை என்று கிளை வேர்களுடனும்(TAP ROOT SYSTEM) இருக்கும். மேலும் வேர் தூவிகளும் இருக்கும்.

இடையர்  மரத்தின் பயன்கள்

காபி அல்லது சிக்கரிக்கு மாற்றாக பயன்படுகிறது.

இதன் வேர்களில் இருந்து பீர் மாதிரியான ஒரு மது வகையை தயார் செய்கிறார்கள்.

இலைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை கால்நடைகளுக்கு தீவனமாக பயனாகிறது.

இலை வடிநீரை பயன்படுத்தி கால்நடைகளில் கண் நோய்களை குணப்படுத்துகிறார்கள் மான்கள் பறவைகள் போன்ற விலங்குகளுக்கு உணவாகிறது.

குறிப்பாக நமீபியா போன்ற பகுதிகளில் ஆடு மாடு மேய்ப்பவர்களுக்கு வெப்பமான பகல் பொழுதுகளில் நிழல் தந்து குளிர்ச்சி தருது இந்த மரங்கள் தான். அதனால் தான் இதனை மேய்ப்பவர்களின் மரம் என்ற அர்த்தத்தில் இதற்கு செப்ப்ர்ட் ட்ரீ என்று பெயர் வைத்துள்ளார்கள். அது மட்டும் இன்றி கால்நடைகளுக்கு தீவனம் தரும் மரமாகவும் இது அமைந்துள்ளது.

உறுதியான மரக்கட்டைகள்

செப்பர்ட் மரத்தின் கட்டைகள் வலுவானவை, உறுதியானவை. அதனால் இப்பகுதி மக்கள் வீட்டு உபயோகத்திற்கான தட்டுமுட்டு சாமான்களை இந்த மரத்திலேயே செய்து கொள்கிறார்கள்.

நம்பிக்கை

இங்கு வசிக்கும் மக்களுக்கு ஒரு நம்பிக்கை. காலம் காலமாக இருந்து வருகிறது. இந்த செப்பேர்டு மரங்களை வெட்டி விறகாகப் பயன்படுத்தினால் அவர்கள் வளர்க்கும் பசுக்கள் எல்லாம் ஆண் கன்றுகளை தான் ஈனுமாம். அதனால் இந்த மக்கள் இதனை விறகாப் பயன்படுத்த பல முறை யோசிக்கிறார்கள்.

உலகிலேயே மிக நீளமான வேரினை உடைய செப்ப்ர்ட்மரம் பற்றிய சிறப்புகளைப் பார்த்தோம். இது பற்றிய சுவாரசியமான வேறு தகவல் ஏதும் உங்களுக்கு தெரிந்திருந்தால் எனக்கு சொல்லுங்கள் நன்றி, வணக்கம். 

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...