பெண்களின் கருப்பையை சீர் செய்யும் சேங்கொட்டை மரம் |
(SENKOTTAI
MARAM, MARKING NUT TREE, VARNISH TREE, SEMICARPUS ANACARDIUM, ANACARDIACEAE)
தாவரவியல் பெயர்: செமிகார்பஸ் அனகார்டியம் (SEMICARPUS ANACARDIUM)
தாவரக் குடும்பம் பெயர்: அனாகார்டியேசி (ANACARDIACEAE)
பொதுப் பெயர்கள்: மார்கிங்; நட் ட்ரீ, டோபி நட் ட்ரீ, இண்டியன் மார்கிங் நட் ட்ரீ, மலாக்கா பீன், மரானி நட், மார்ஷ் நட், ஒரியண்டல் கேஷ்யூ நட், வார்னிஷ் ட்ரீ (MARKING NUT TREE, DOBY NUT TREE, INDIAN MARKING NUT
TREE, MALAKA BEAN, MARANI NUT, MARSHNUT, OHEWNUT, VARNISH TREE,)
தாயகம்: இந்தியா
1960 ம் ஆண்டு வாக்கில் கூட சலவைத் தொழிலாளிகள் இந்த ‘மார்க்கிங் நட்’ கொட்டையிலிருந்து ‘இங்க்’ மதிரி சாயம் எடுத்து துணிகளில்
அடையாளக்குறி போடுவார்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குறி. ஒரு குடும்பத்தின் துணி இன்னொரு குடும்பத்திற்கு மாறிப் போகக் கூடாது.
இந்தக் குறிதான் அந்த காலத்து ஆதார் கார்ட் எண். ஒரு கிராமத்துத் துணிகள் அத்தனையும் வெளுத்து, துணிகள் மாறாமல் பிரித்து மூட்டையாகக்
கட்டி எடுத்துச் சென்று தருவார்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு மூட்டை.
அந்தக் குறிபோடும் மையினை சேங்கொட்டையிலிருந்து தான் தயார்
செய்திருக்கிறார்கள். ஏறத்தாழ அந்த மை அடர்த்தியான ஊதா நிறத்தில் இருக்கும். இந்த
மையில் குறிபோட்டுவிட்டால் துணிகள் கிழிந்து போனால் கூட, அதனை அழிக்கவே
முடியாது. இப்படி அன்று சலவைத் தொழிலாளிகள் வைத்த குறி மாறவே மாறாது.
இலை உதிர்க்கும் மரம் இது: அதன் இலைகளைப் பார்க்க முந்திரி இலைகள்
போலத் தோன்றும்: சேங்கொட்டை, முந்திரிக் கொட்டை, மாங்கொட்டை அத்தனையும் ‘அனாகார்டியேசி’
என்ற குடும்பத்தைச் சேர்ந்தவைதான்.
இதன் பழங்களில் முன்பகுதி ஆரஞ்சு நிறமாகவும் பின்பகுதி
கருப்புநிறமாகவும் இருக்கும். முன்பகுதி பழம் கனிந்தால் இனிப்பாக இருக்கும்:
சாப்பிடலாம். பழத்தின் பின் பகுதி நச்சுத்தன்மை உடையது.
சாப்பிட்டால் ஒவ்வாமை (ALLERGY) ஏற்படும். கருப்பு நிறப் பழப்பகுதியில் இருக்கும் கொட்டைகளை பதப்படுத்தி சாப்பிடலாம். இந்தியில் இந்தக் கொட்டைகளின் பெயர் ‘கோடம்பி (SENKOTTAI MARAM).
பல மொழிப் பெயர்கள்:
இந்தி: பிலாவா, பில்லார் (BILAVA,
BILLAR)
மராத்தி: பல்லடாக்கா, பில்லாவா, பிப்பா (PALLADAKKA,
BILLAVA, PIPPA)
தமிழ்: சேங்கொட்டை, சோம்பலம், காலகம், காவகா, கிட்டாக்கனிக் கொட்டை எரிமுகை (SENKOTTAI, SOMBALAM, KALAGAM, KAVAKA, KITTANIKOTTAI,
ERIMUGAI)
மலையாளம்: அலக்குசீ; சீன்குரு, தீன்கொட்டா (ALAKUSI,
SINGURU, THINKOTTA)
தெலுங்கு: பில்லடாமு, ஜடிமாமடி சேட்டு (PILLADAMU,
JADIMAMADI SETTU)
கன்னடா: ஜரு, ஐரானியா மரா (JARU,
JARANIYA, MARA)
பெங்காலி: பெல்லட்டா, பல்லட்டாக்கா (BELLATTA,
PALLATAKKA)
ஒரியா: பொல்லடாக்கி, போனிபல்சா (POLLATAKKI,
PONIPULSA)
கொங்கணி: அம்பேரி, பிப்பா (AMBERI
PIPPA)
உருது: பலடூர்இ பில்லாவன், பில்லார் (SENKOTTAI MARAM)
அசாமிஸ்: பாலா (SENKOTTAI
MARAM)
குஐராத்தி: பிலாமோ பிலாமு, (SENKOTTAI MARAM)
சமஸ்கிருதம்: அஹ்வலா, அப்சாஷ்டா, ஆரூத்கா, பல்லடாக்கா, வஹ்னி, விகஸ்யா (SENKOTTAI
MARAM)
நேபாளி: பலாயோ (SENKOTTAI
MARAM)
பாரம்பரிய மருத்துவத்தின் பிரபலமான மூலிகை
பாரம்பரிய மருத்துவத்தில் இதனை பலவிதமாக இன்றும் கூட பயன்படுத்தி
வருகிறார்கள். ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் பாலியல் ரீதியான
உயிர்ச்சக்தியினை மேம்படுத்த இது உதவுகிறது. செரிமானம் தொடர்பான பிரச்சீனைகளைத்
தீர்க்கிறது.
பெண்களின் இனப் பெருக்க மண்டலத்தை சீர் செய்யும்.
கபத்தினால் ஏற்படும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்கிறது. இதற்கு
இந்தப் பழத்தின் ஆரஞ்சு நிறப் பகுதியைப் பிரித்தெடுத்து நடுத்தரமாக உலர்த்திப்
பிறகு பயன்படுத்தலாம்.
இந்த பழங்களை கருத்தறித்தப் பெண்கள் அதிகம் சாப்பிட்டால் கருச்சிதைவு
நேரிடும். அளவாக இதனை சாப்பிட்டு வந்தால், பெண்களின் இனப்
பெருக்க மன்டலத்தை சீர் செய்யும்.
பழங்கள், விதைகள் உட்பட இந்த மரத்தின் பல்வேறு பாகங்களையும் ஆயுர்வேத
மருத்துவத்தில் பலவிதமான மருந்துகள் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள். முக்கியமாக உணவுப்பாதை மற்றும் சருமநோய்களை குணப்படுத்தும் மருந்துகளைச் செய்கிறார்கள்.
இதய நோய்கள், ரத்த அழுத்தம் சுவாசம் தொடர்பான
பிரச்சினைகள், புற்று நோய், மற்றும் நரம்பு சம்மந்தமான நோய்களையும் சரி செய்யும் சக்தி கொண்டது
என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இயற்கையான கருத்தடைச் சாதனம்.
இந்த பழத்தின் விதைகளை கோடம்பி எனப் பார்த்தோம். வட இந்தியாவின் பல
பகுதிகளில் இந்த ‘கோடம்பி’ உலர் திராட்சை போல உலர் பழமாக பயன்படுத்துகிறார்கள்.
குளிர் பருவத்தில் இந்த கோடம்பியை பெண்கள் தங்கள் தேவைக்கேற்ப
சாப்பிடுகிறார்கள். காரணம், கோடம்பி சாப்பிட்டால், கருத்தரிக்காதாம். நல்ல இயற்கையான
கருத்தடைச் சாதனம்.
‘கோடம்பி’ யை பதப்படுத்திய பின்னர்தான் சாப்பிட
வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது.
சேங்கொட்டையின் விதையுறைகளிலிருந்து எடுக்கும் சாயத்தைத்தான்
குறியிடுவதற்காக பயன்படுத்தினார்கள். மரங்கள் நடவு செய்த 10 வது ஆண்டில் தான் பூக்கத் தொடங்கும். ஐPன் - ஐPலை மாதங்களில்இ பூக்க ஆரம்பிக்கும்.
நவம்பர் முதல் டிசம்பர் வரையான காலங்களில் காய்கள், முதிர்ந்து
கனியாகும். 25 முதல் 30 ஆண்டுகள் வரை பலன் தரும். வளர்ந்த ஒரு மரம் 25 முதல் 45 கிலோ பழங்கள் தரும்.
சர்வதேச அளவில் மிகப் பெரிய அங்கீகாரம்
இந்திய நாட்டின் மூலிகைகள், அவற்றைப் பயன்படுத்தும் மருந்துவ
சிகிச்சை முறைகளுக்கு சர்வதேச அளவில் மிகப் பெரிய அங்கீகாரம் உள்ளது. வளர்ந்த மேலை நாடுகளில் இது போன்ற அனுபவ அறிவு
ரொம்பவும் குறைவு அல்லது இல்லை எனச் சொல்லலாம்.
சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில்
சேங்கொட்டைக்கென்று தனி இடம் உள்ளது. அந்த
அளவுக்கு முக்கியத்துவம் கொண்ட மூலிகை மரம் சேங்கொட்டை.
ஆண்மையின்மை - குறைவான விந்தணுக்கள்
சேங்கொட்டை இன்றும் நிறைய அளவில் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு
உள்ளது. ஆனால் இதற்கு இன்னும் நிறைய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்: இதனை சிறந்த மூலிகை மரமாக வளர்ந்து சித்த மருத்துவம்
மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தும் வாய்ப்புகள் நிரம்ப உள்ளன.
ஆண்மையின்மை குறைவான விந்தணுக்கள் இருப்பது போன்றவற்றையும்
பெண்களுக்கு சிறந்த கருத்தடைச் சாதனமாகவும் பயன்படுத்தும் வாய்ப்புகள் பிரகாசமாக
உள்ளன.
இயற்கை மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வு பெருகி வரும் நிலையில்
சேங்கொட்டை போன்ற மரங்களைத் தேடி வளர்க்கும் வாய்ப்பு வாய்க்கும் என்று
நினைக்கிறேன்.
இமயமலையின் வெளியே உள்ள பகுதிகளில் சட்லெஜ் முதல் சிக்கிம் வரையான வெப்ப மண்டலப் பகுதிகளில், மற்றும்
அஸ்ஸாமின் கிழக்குப் பகுதிகளிலும் இம்மரம் பரவலாகக் காணப்படுகின்றன. இந்த மரத்தை யாரும் சாகுபடி செய்வதில்லை.
ஆனால் சால் மரக்காடுகளில் இயற்கையாகப் பரவியுள்ளன. லேசான மற்றும் நடுத்தரமான சரளை மண்ணில், போதுமான வடிகால் வசதி இருப்பின் சேங்கொட்டை மரங்கள் சிரமமின்றி வளரும்.
விதைகள் மூலம் புதிய மரக்கன்றுகளை உருவாக்கலாம். அறுவடை செய்த
பின்னர் ஆறு மாதங்கள் வரை முளைப்புத்தன்மை நன்றாக இருக்கும். நூற்றுக்கு 60 முதல் 66 விதைகள் முளைக்கும்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment