Sunday, July 2, 2023

SCHOLAR TREE HERB HELPS WOMEN 217. மாதவிடாய் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும் ஏழிலைப்பாலை


ரத்தப்போக்கைக் குறைக்கும்
ஏழிலைப்பாலை


(SCHOLAR TREE)

தாவரவியல் பெயர்: அல்ஸ்டோனியா ஸ்காலரிஸ் (ALSTONIA SCHOLARIS)

தாவரக்குடும்பம் பெயர்: அப்போசயனேசி (APOCYANACEAE)

தாயகம்: சென்ட்ரல் அமெரிக்கா, டிராப்பிகல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பசுபிக் பகுதி, மலேசியா, கான்டிநென்டல் ஆசியா (CENTRAL AMERICA, TROPICAL AMERICA, AUSTRALIA, PASUFIC REGION, MALAYSIA, CONTINENTAL ASIA)

பொதுப் பெயர்கள்: ஸ்காலர் ட்ரீ, டிட்டா பார்க், டெவில் ட்ரீ, பிளாக்போர்ட் ட்ரீ (SCHOLAR TREE, DITTA TREE, DEVIL TREE, BLACK BOARD TREE)  

சமீபத்தில் திருவண்ணாமலையில் இந்த மரங்களை போக்குவரத்தில் பார்த்து நான் அசந்தே போனேன். சாலையில் நடுவதற்கு எவ்வளவு அழகான மரங்களா என்று பார்த்து ஆச்சரியப்பட்டேன்.;

பூக்களை விட இதன் இலைகள் அழகானவை; ஏழு விரல்கள் கொண்ட உள்ளங்கையைப் போல இருக்கும்.; கொஞ்ச நாட்களுக்கு முன்னால் சகோதரர் முல்லைவனம் தான் எனக்கு அறிமுகம் செய்ததோடு இரண்டு செடிகளையும் இனமாக தந்து சந்தோஷப்படுத்தினார்.; சென்னையில் கூட சாலை ஓரங்களில் எல்லாம் ஏகப்பட்ட ஏழிலைப்பாலை மரங்களை நட்டு வைத்து இருக்கிறார்கள்>; முல்லைவனம் மரம் நடும் பணிக்காகவே தன்னை அற்பணித்துக் கொண்டவர்.

ஏழிலைப் பாலையின் பலமொழிப் பெயர்கள்

தமிழ்: ஏழிலைப்பாலை, முகும்பலை (EZHILAI PALAI, MUKUMBALAI)

இந்தி: சப்தபரணி, சைத்தான் கா ஜார், சிட்வான் (SAPTHAPARANI, SAITHAN KA JAR, SITVAN)

பெங்காலி: சாட்டிம் (CHATTIM)

கன்னடா: ஏலிலி ஹாலி (ELILE HAALE)

மலையாளம்: தெய்வபலா (DEIVA PALA)

மராத்தி: சட்வின் (SATVIN)

சமஸ்கிருதம்: சப்தபரணா rg;jguzh (SAPTAPARANA)

தெலுங்கு: தேவசுரிப்பி (DEVASURIPPI)

ஏழிலைப்பாலை இந்தியா உட்பட பல நாடுகளைச் சொந்த மண்ணாகக் கொண்டது.; அவை சைனா, நேபால், ஸ்ரீலங்கா, பாக்கீஸ்தான், பங்களாதேஷ், கம்போடியா,  மியான்மர், தாய்லாந்து, வியட்நாம்,; இந்தோனேசியா, மலேசியா, பப்புவா நியூகினியா> ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து.

பூக்கள் அக்டோபர் மாதத்தில் பூக்க ஆரம்பிக்கும் அவை மிகுந்த வாசனை உடையவை.; கொத்துக்கொத்தாகப் பூக்கும்பூப்பு காலத்தில் இந்த மரங்கள் தனி அழகாகத் தென்படும்.

ஏழிலைப்பாலையின் பால் மற்றும் பட்டைச் சாற்றினை கண் நோய்களுக்கு சிகிச்சை தர பீஜி மற்றும் சாலமன் தீவுகளில் பயன்படுத்துகிறார்கள்.; இலைகள் மற்றும் வேர்களில் தயார் செய்யும் கஷாயத்தை நுரையீரல் மற்றும் சுவாசம் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்க பயன்படுத்துகிறார்கள்;. இரத்தத்தை சுத்திகரிக்கவும், சிபிலிஸ் என்னும் பாலியல் தொடர்பான நோய்,  காக்காய்வலிப்பு ஆகியவற்றை குணப்படுத்த இந்தியாவில் இதன் பழங்கள் பயனாகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் ஏழிலைப்பாலை பட்டையை பயன்படுத்தி புற்றுநோய் கட்டிகள், குடற்புண்; ஆஸ்துமா, மலேரியா காய்ச்சல், அஜீரண கோளாறு போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கிறார்கள்.; இதன் பட்டை மற்றும் வேர்த்துண்டுகளை அரிசியுடன் சேர்த்து சமைத்து சாப்பிடுவதன் மூலம் பெண்களுக்கு மாதவிடாயில் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்த முடியும்;. உடலில் ஏற்படும் காயங்களை ஏழிலைப்பாலை பாலின் மூலம் சுத்தம் செய்தால் அவை விரைவில் குணமாகும். இதன் இலைகள் தோலில் ஏற்படும் சொறி சிரங்கு போன்றவற்றை குணப்படுத்தப் பயன்படுகிறது.

ஏழிலைப்பாலை மரங்கள் மிகவும் மிருதுவானவை; எந்த ஒரு மரச் சாமான்கள் செய்யவும் தோதாக இருக்கும்; குறிப்பாக கரும்பலகைகள்  செய்வதற்கென அவதாரம் எடுத்த மரம் என்று சொல்லலாம். அதனால் இந்த மரத்திற்கு பிளாக் போர்ட் ட்ரீ (BLACK BOARD TREE)என்ற பட்டப் பெயர் உண்டு.

பொருட்களை பேக்கிங் செய்வதற்கு ஏற்ற மரப்பெட்டிகள் மற்றும் சவப்பெட்டிகள் செய்யக்கூட பயன்படுத்துகிறார்கள். இதுதவிர தீக்குச்சிகள் மற்றும் காகிதம் செய்ய மரக்கூழ் தயாரிக்கவும் பயன்படுகிறது.

ஏழிலைப்பாலை வணிக ரீதியில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான மரமும்கூட் உதாரணமாக பென்சில்,; தீக்குச்சி, தேயிலை பெட்டிகள், ஒட்டு பலகை மற்றும் மரக்கூழ் தயாரிக்கலாம்.; கடினமான மரங்களைத் தரும் சில மரவகைகளும் ஏழிலைப்பாலையில் உள்ளன.

இந்த மரங்கள் மிகுதியாக இருக்கும் இடங்களில் உள்ளூர் மருந்துக் கடைகளில், இதனுடைய பால் மற்றும் பட்டைகளை விற்பனை செய்கிறார்கள்;. சுமார் 25 ஆண்டுகள் வளர்ந்த ஒரு மரம் 19 கிலோ வரை பட்டைகளைத் தரும். இவற்றை எடுத்து உலர வைத்து சேமித்து வைத்துக் கொள்ளலாம்; மருந்துகள் தயாரிக்க வாங்கிக் கொள்கிறார்கள்;. மரங்களில் சதுரம் சதுரமாக பட்டைகளை வெட்டி எடுக்கிறார்கள்;. மரத்தில் காயம் செய்து பாலை வடிக்கிறார்கள்.; ஏழிலைப்பாலையில் ; முக்கியமான அறுவடை பாலும் பட்டையும்தான்.

ஏழிலைப்பாலைக்கு கொஞ்சம் இலை மக்குக் கூடுதலான ஈரச் செழிப்பான மண் வேண்டும்;. மணல் சாரி மற்றும் சுக்கான் பாறையை உள்ளடக்கிய மண்ணிலும் நன்கு வளரும்.; மழைக்காலங்களில் மட்டும் சதுப்பு நிலமாகும். மண்கண்டம்மற்றும்; வறண்ட பகுதிகள் அனைத்திலும் வளரும்;. கடற்கரையிலிருந்து சுமார் மூவாயிரம் அடி உயரம் வரை உள்ள பகுதிகளிலும் ஏழிலைப் பாலை நன்கு வளரும்.;

ஏழிலைப்பாலை விதைகளை சேகரிப்பது கொஞ்சம் கடினம்.; பழங்கள் மரத்தில் இருக்கும் போது வெடித்து சிதறிவிடும்;. 1.5 முதல் 2 கிராம்  எடையில் ஆயிரம் விதைகள் இருக்கும்;. புதிய விதைகள் 100 சதம் முளைக்கும்.; விதைகளைக் காற்றுப் புகாத குப்பிகளில் இரண்டு மாதங்கள் வரை  சேமிக்கலாம்;. விதைத்தால் 90 சதம் வரை முளைக்கும்;.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு இந்த மரத்தை பார்த்தாலே பீதி. ;இந்த மரத்தின் அடியில் உட்காரவோ மற்றும் படுக்கப் பயப்படுவார்கள்;.  காரணம் இந்த மரத்தில் பேய் பிசாசுகள் தங்கி இருக்கும் என்று அவர்கள் நம்புவதுதான் தான் காரணம்.;

Photography courtesy: Thanks to Google

References: www.uses.planet.project.org / Alstonia (protea medicinal plants)

www.flowersofindia.net / Scholar Tree

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE  A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

                                        999999999999999999999999999999999999999 

2 comments:

S. Gunasekaran said...

மிக அருமையான விளக்கம். எழிலைப்பாலை என்று எப்படி பெயர் வந்தது - ஒன்பது இலைகள் உள்ளனவே?

GNANASURIA BAHAVAN DEVARAJ said...


அன்பு குணசேகரன் அவர்களே, ஆமாம் சில சமயம் நீங்கள் சொல்வது மாதிரி அதிகமாகவும் இருக்கும், குறைவாகவும் இருக்கும். ஆனால் பெரும்பாலும் ஏழிலைதான் இருக்கும், ஆனால் இலைகள் அவ்வளவு அழகு !
தொடர்ந்து எனது கட்டுரைகளைப் படித்து அது பற்றி உங்கல் கருத்துக்களைப்
பதிவு செய்வதற்கு, மிக்க நன்றி.பிரியங்களுடன் ஞானசூரிய பகவான்.

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...