Monday, July 3, 2023

RUFFLED PALM GLOBAL TREE BEAUTY 223. உலகம் போற்றும் அழகு மரம் வட்டஇலை விசிறிப்பனை

 

அழகு மரம்
வட்ட இலை விசிறிப்பனை


(RUFFLED PALM)

தாவரவியல் பெயர்:லிகுவாலா கிராண்டிஸ் (LICUALA GRANDIS)

தாயகம்: வாநாட்டு தீவு, பசிபிக் கடலில் உள்ள ஒரு தீவு.

பொதுப்பெயர்:ரஃபில்ட் பாம், பாலாஸ் கிப்பாஸ், வானாட்டு ஃபேன் பாம் (RUFFLED PALM, PALAS KIPAS, VANAUTU FAN PALM)

தனி மரமாக வளரும் மூன்று மீட்டர் உயரம் வரை வளரும்.இதன் இலைகள் வட்ட வடிவமாக இருக்கும்.ஆனால் சட்டென்று பார்த்தால் விசிறி மாதிரியே தெரியும். அதுபோலவே கலிபோர்னியா பனை (CALIFORNIA PALM)மற்றும் கேனரி ஐலண்ட் பனை (CANARY ISLAND PALM) எல்லாவற்றிலுமே இலைகள் விசிறி போலவே அமைந்துள்ளன.

இதன் இலைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து பளபளப்பான கரும்பச்சை மற்றும் லேசான மஞ்சள் நிறம் கலந்த பசுமை நிறத்திலும் இருக்கும்.அழகுக்காக வளர்க்கப்படும் பனை இது.

இளம் கோடை பருவத்தில் இந்த மரங்கள் பூக்கத் தொடங்கும் இலை காம்புகள் நீளமாக மெல்லியதாக இருக்கும். அடிக்காம்பில் முட்கள் இருக்கும். இதன் பழங்கள் கவர்ச்சிகரமான சிவப்பு நிறத்தில் உருண்டையாக இருக்கும்.

இந்த மரங்கள் நல்ல சூரிய வெளிச்சத்திலும் வளரும். நிழலிலும் வளரும். ஆனால் வேகமான காற்றடி இருக்கும் இடங்களில் இதனை வளர்க்கக்கூடாது. வேகமான காற்று இதனை வளர விடாது.

வீட்டு தோட்டத்திலும் வீடுகளிலும் பொது இடங்களிலும் அழகு மரமாக உலகம் முழுவதும் வளர்க்கப்படுகிறது தொட்டிகளிலும் பெட்டிகளிலும் கூட வெற்றி பெறமாக இதனை வளர்க்கலாம்.

இந்த மரங்கள் மெல்ல வளரும் குறைவான தண்ணீர் ஊற்றினால் போதுமானது. பூக்கள் இருபால் இன பூக்களாக வெள்ளை நிறத்தில் பூக்கும். பழங்கள் ஆரஞ்சு சிவப்பு நிறத்தில் கனிந்து மெதுவாக பளபளப்பாக இருக்கும்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...