Friday, July 21, 2023

REDWOOD OF BRAZIL CHANGED ITS LIFELINE 268.பிரேசிலின் தலையெழுத்தை மாற்றிய செம்மரம்.


பிரேசில்
செம்மரம்


பிரேசில் நாட்டின் தலையெழுத்தை
, அதன் பூர்வீகமான சரித்திரத்தை, அவர்களுடைய மொழி, வசிக்கும் மக்கள், அவர்களுடைய பழக்க வழக்கம், எல்லாவற்றையும் தலைக்குப்புற மாற்றி அமைத்த மரம், இந்த பிரேசில் செம்மரம் என்று எழுதுகிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். இந்த மரம் தான் பிரேசில் நாட்டின் தேசிய மரம்.

இந்த மரத்தின் பெயர் பிரேசில் வுட் ட்ரீ (BRAZIL WOOD TREE), இந்த மரத்தின் பெயர் தான் இந்த நாட்டின் பெயர். உலகிலேயே ஒரு மரத்தின் பெயரை ஒரு நாட்டிற்கு பெயராகக் கொண்டது பிரேசில் நாடுதான் என்று சொல்லுகிறார்கள். ஆனால் இந்திய நாட்டிற்கும் ஒருசமயம் அப்படி பெயர் இருந்துள்ளது. காரணம் இந்திய நாட்டின் பழைய பெயர் ஜம்பூத்தீபம், தமிழ்நாட்டின் பழைய பெயர் நாவலந்தீவு.

இந்த மரத்தின் பொதுப்பெயர், பிரேசில் வுட் ட்ரீ, பேரணாம்புகோ வுட்(BRAZIL WOOD TREE, PERANAMBUGO WOOD) என்றும் சொல்லுகிறார்கள். இதன் தாவரவியல் பெயர் பாப்ரசில்லா எக்கினேட்டா (PAUBRASILLA ECHINATA), இது ஃபேபேசி (FABACEAE)என்னும் தாவர குடும்பத்தைச் சேர்ந்தது.

1500 ஆம் ஆண்டு வாக்கில் காலனி ஆதிக்கத்தை தொடங்கினார்கள் போர்ச்சுகீசியர்கள் என்னும் வெள்ளைக்காரர்கள். பிரேசில்வுட் என்று சொல்லும் இந்த மரத்திலிருந்து எடுக்கும் சிவப்பு சாயம் அவர்களை கவர்ந்தது. வந்தார்கள் சென்றார்கள் என்று இல்லை, வந்தார்கள் இருந்தார்கள் இருக்கிறார்கள் என்பது தான் பிரேசிலின் கதை ன்று பிரேசிலின் அரசு மொழியும் போர்ச்சுகீசிய மொழிதான்.

அன்று பிரேசில் இருந்த பழங்குடி மக்கள் சுமார் ஏழு மில்லியன், இன்று இருப்பவர்கள் சுமார் 2 லட்சம் பேர் மட்டுமே. ஆனால்  ன்று பிரேசிலின் மக்கள் தொகை 148 மில்லியன் என்கிறார்கள்

பிரேசில் நாட்டின் செம்மரம்தான், பிரேசில் நாட்டின்  தேசிய மரமும் கூட. டேர டோ பிரேசில் (TERRA DO BRAZIL)என்றால் தி லேண்ட் ஆப் பிரேசில் வுட் என்று அர்த்தம்.

பிரேசில் செம்மரம் மெல்ல வளரும் மரம். நிறைய கிளைகளுடன் வளரும். மரம் மற்றும் கிளைகள் முட்களுடன் வளரும். மிகவும் பெரிய வட்ட வடிவமான தலை அமைப்புடன் வளரும். அதிகபட்சமாக 12 மீட்டர் உயரம் வரை கூட வளரும். ஆனால் அரிதாக 30 மீட்டர் உயரம் கூட வளரும் என்று சொல்லுகிறார்கள்.

மூன்று முக்கியமான பயன்களுக்கான மரம் இது. ஒன்று இது நல்ல மரக்கட்டை தரும் மரம், இரண்டாவது உடல் நோய்களை குணப்படுத்துவதற்கான மூலிகை மரம், மூன்றாவதாக துணிகளுக்கு நிறம் கொடுக்க, சாயம் தயாரிக்க உதவும் மரம்.

சுமார் ஒரு 500 ஆண்டுகளுக்கு முன்னால் வெள்ளைக்காரர்கள் இங்கு வந்தார்கள். அப்போது துண்டும் துக்கணியுமாக இருந்த இந்த நாடுகளை எல்லாம், பழங்குடி ராஜாக்கள் தான் அரசாட்சி செய்து வந்தார்கள். அன்று வந்த வெள்ளைகாரர்கள், இந்த செம்மரத்தை பார்த்தார்கள் அற்புதமான சிவப்பு சாயம் தர ஏற்ற மரங்கள் என்பதையும் பார்த்தார்கள். உடனே தங்கள் கடைகளை இங்கே விரித்தார்கள். அவர்களுக்கு செம்மரம் வேண்டும். அதிலிருந்து எடுக்கும் சாயம் வேண்டும். அதன் மூலம் பணம் காசு பார்க்க வேண்டும். அந்த வேலையைத் தொடங்கினார்கள். ஒண்ட வந்த பிடாரி கொஞ்ச நாட்களில் ஊர் பிடாரி ஆனது.

பழங்குடி ராஜ்யங்களும் பழங்குடி மக்களும் அழிந்ததைப் போல, இங்கு அபரிதமாக இருந்த செம்மரங்களும் அழிந்து போயின. ஒரு கூடாரத்திற்குள் குள் தலையை மட்டும் நுழைத்த ஒட்டகம் மாதிரி முழு கூடாரத்தையும் ஆட்டையை போட்டது போல மரங்களை மட்டுமல்ல இந்த நாட்டையும் போட்டார்கள், அந்த வெள்ளைக்காரர்கள்.

 இன்று பிரேசில் வெள்ளைக்காரர்கள் வசிக்கும் நாடு. 2011 ஆம் ஆண்டு அழிந்து வரும் மரம் என்று பிரேசில் நாட்டு அரசு அறிவித்தது.

வளர் இயல்புகள்

இந்த பிரேசில் செம்மரம் சுமாரான வேகத்தில் வளரும். இரண்டே ஆண்டில் இரண்டு மீட்டர் உயரம் வளரும். மூன்று நான்கு ஆண்டுகள் வயதுடைய மரங்கள் பூக்கத் தொடங்கும். பூக்கள் கவர்ச்சிகரமானவை. தேனீக்களை கவரும்படியான பூக்கள இவை. இந்த செம்மரங்கள் வளர வடிகால் வசதி கொண்ட மண் வேண்டும், உவர் மண்ணில் கூட வளரும்,றட்சிசியைத் தாங்கி வளரும்.

மருத்துவ பண்புகள்:

இதன் பட்டைகளை சுட்டு சாம்பலாக்கி அதனை மருந்தாக கொடுக்க குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப்போக்கு சட்டு என்று நிற்கும்.

இதன் கட்டைகளை வலிநீக்கியாகவும் மற்றும் வளர்ச்சி ஊக்கியாகவும் பயன்படுத்துகிறார்கள். இதன் நெற்றுக்களிலிருந்து, கருப்பு நிற சாயம் தயாரிக்கிறார்கள். இதன் கட்டைகளிலிருந்து சிவப்பு சாயம் செய்கிறார்கள். சிவப்பு சாயத்துடன் உப்புகளை சேர்த்து ஊதா நிற சாயமும், அமிலம் சேர்த்து மஞ்சள் நிற சாயமும் தயாரிக்கிறார்கள். செயற்கை சாயங்கள் வரும்வரையில் நெருப்பு மாதிரி இருக்கும் இந்த செம்மரத்தின் சிவப்பு சாயம்தான் உலக மார்க்கெட்டில் முதல் நிலையில் இருந்தது.

இந்த செம்மரக்கட்டைகள் உறுதியானவை, வலுவானவை, உயர்தர மரத் தேவைகளுக்கு எல்லாம் கொண்டு வா பிரேசில் செம்மரம் என்றுதான் சொல்லுவார்கள்.

புதிய கன்றுகளை உருவாக்க விதைகளை விதைக்கலாம். ஆனால் புதிய விதைகளாக இருக்க வேண்டும். விதைகளை வெதுவெதுப்பான நீரில் ஒரு பகல் அல்லது ஒரு பகல் இரவு ஊற வைத்து விதைக்க வேண்டும். சுமார் ஒன்றிரண்டு வாரங்களில் முளைக்கும். நூற்றுக்கு 60 விதைகள் பழுதில்லாமல் முளைக்கும். விதைகளை முப்பது நாட்கள் வரை வைத்திருந்தும் விதைக்கலாம் அதன் பின்னர் விதைத்தால் அவை முளைக்காது.

அருமை நண்பர்களே இந்த பிரேசில் செம்மரம் பற்றி கூடுதலான தகவல்கள் ஏதும் உங்களுக்கு தெரிந்திருந்தால் எனக்கு சொல்லுங்கள் மீண்டும். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கமெண்ட் பகுதியில் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் நன்றி.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

  

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...