Thursday, July 27, 2023

RED SILKCOTTON A TRADITIONAL HERB 277.பாரம்பரிய இயற்கை மருத்துவ செவ்விலவு மரம்

பாரம்பரிய இயற்கை மருத்துவ
செவ்விலவு மரம்




செவ்விலவு மரங்கள் உயரமாக பெரிய மரங்களாக செங்குத்தாக வ ள ரு ம் மரம், இதன் இலைகள் பூக்கள் தண்டுகள் பட்டைகள் வேர்கள் வி தை க ள் அனைத்தையும் பா ர ம் ப ரி ய மருத்துவ மு றை க ளி ல் பயன் ப டு த் து கி றா ர் க ள்.  இந்த ப ஞ்  சி னை த் தா ன்    த லை ய ணை க ளி ல் அடைக்கிறார்கள். படுக்கைகள், இருக்கைகள்  தயாரிக்கவும் ப ய ன் ப டு த் துகிறார்கள். 

பொதுப்பெயர்கள்: சில்க் காட்டன் ட்ரீ, கப்பாக் ட்ரீ (SILK COTTON TREE, KAPOK TREE)

தாவரவியல் பெயர்: பாம்பேக்ஸ் ஸ்கோப்புலாரெம் (BOMBAX SCOPULARUM)

தாவரக் குடும்பம்: மால்வேசி (MALVACEAE)

மொழிப் பெயர்கள்:

தமிழ்: செவ்விலவு, சிட்டன்(SEVVILAVU, SITTAN)

ஹிந்தி: ஷால்மலி (SHALMALI)

கன்னடா:கெம்ப்பு  (KEMPU)

மலையாளம்: உன்னமுரிக்கா (UNNAMURIKKA)

நேப்பாளி: சிமால்(SIMAL)

மிசோ: புன்சாங்(PUNCHAWNG)

சமஸ்கிருதம்:ஷல்மலி (SHALMALI)

தாயகம்: இந்தியா உட்பட பல ஆசிய நாடுகள் மற்றும் வடக்கு ஆஸ்திரேலிய நாடுகள்.

உயரமாக பெரிய மரங்களாக செங்குத்தாக செங்குத்தாக வளரும் அதிகபட்சமாக 150 அடி உயரம் கூட வளரும்.

இதன் பூக்கள் பெரிய சிவப்பு பூக்களாக பூக்கும், பட்டைகள் வெண்மையாக மொழுமொழு வென இருக்கும்.

இலை உதிர்க்கும் இலவம் மரம், மரத்தின் பட்டைகளில் அங்கொன்றும் எங்கொன்றுமாக முட்கள் இருக்கும். இதன்  நெற்றுக்களில், முழுவதுமாக பட்டுபோன்ற பஞ்சு அடைந்திருக்கும். இந்த பஞ்சினைத் தான் தலையணைகளில் அடைக்கிறார்கள். படுக்கைகள், இருக்கைகள்  தயாரிக்கவும் பயன்படுத்துகிறார்கள்.

நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் தோட்டத்தில் ஆஜானுபாகுவான இரண்டு இலவம்பஞ்சு மரங்கள் இருந்தன. அவை இரண்டும் நாட்டு இலவம் பஞ்சு மரங்கள் தான். அன்று முதல் இன்று வரை எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பஞ்சு தலையணைகள்தான்.

எனது தோட்டத்தில், இரண்டு மூன்று இலவம்பஞ்சு மரங்கள் இருக்கின்றன. வளர்ந்த ஒரு இலவம்பஞ்சு மரத்தில் ஆயிரம் காய்கள் கூட காய்க்கும்.

இலவம் பஞ்சு தலையணை போட்டு தூக்கம் சோதனை ஆகிவிடும். வெள்ளை மஞ்சள் சிவப்பு இலவம்பஞ்சு மரங்களை நமது கிராமங்களில் பார்க்கலாம். எல்லா பூக்களுமே அவ்வளவு அழகாக இருக்கும். இதையெல்லாம் தூக்கி சாப்பிடுவது மாதிரி ஒரு இலவம் பஞ்சு மரத்தை நான் பார்த்தேன். நான் அமெரிக்கா சென்றபோது ஹாலிவுட் நகரில் இந்த ஊதா நிற இலவம்பஞ்சு மரத்தை பார்த்தேன். அதுபற்றி தனியாக ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்.

முழு சூரிய வெளிச்சம்

இந்த மரங்கள் வளர மானாவாரி நிலங்கள் ஏற்றவை இதனால் ஆனால் அதில் வடிவால் வசதி இருக்க வேண்டும் முழுசாய் சூரிய வெளிச்சம் வேண்டும்.

பாம்பேக்ஸ் ஸ்கோப்புலாரம் என்ற தாவரவியல் பெயரில் பாம்பேக்ஸ் என்றால் கிரேக்க மொழியில் பட்டு போன்ற இழை அல்லது  நார் என்று அர்த்தம்.

இலைகள் உதிரும்

செவ்விலவு மரங்கள் முழுமையாக இலைகளை உதிர்த்துவிட்டு பின்னர் பூக்க்க ஆரம்பிக்கும். இலைகளே இல்லாத சமயங்களில் மரங்களே புக்களாகத் தென்படும். பூக்கள் பூப்பது முழுவதுமாக முடிந்த பின்னால்தான் புதிய இலைகள் தோன்றும்..

செவ்விலவு காய்கள்

இதன் காய்கள் முற்றியதும் தானாக வெடித்து சிதறும், உள்ளிருக்கும் பஞ்சுகள் காற்றில் பறந்து செல்லும், ஆனால் செவ்விலவு மரத்தின் காய்கள் அப்படி வெடிக்காது என்று சொல்லுகிறார்கள்.

பரவி இருக்கும் இடங்கள்;

தெற்கு பிளோரிடா, ஹவாய், மத்திய அமெரிக்கா, மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இந்த செவ்விலவு மரங்கள் பரவியுள்ளன.

பெரிய பூக்கள்

பூக்கள் ஆரஞ்சு முதல் சிவப்பு நிறத்தில் பெரிய பூக்களாக, ஆறு முதல் ஏழு அங்குல நீளத்தில் பூக்கும். பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையான காலத்தில் பூக்கும். தனிப்பூக்களாகவும், கொத்துக்களாகவும் இவை பூக்கும்.

இலைகள் ஆறு அங்குல முதல் 24 அங்குலம் வரை, நீளமாக பச்சை நிறமாக கை விரல்கள் போல, ஐந்து முதல் ஏழு இலைப் பிரிவுகளாய் தோல்போல தொட்டுப் பார்க்க மெத்தென இருக்கும்.. எட்டு  முதல் பத்து  ஆண்டுகள் வளர்ந்த மரங்கள் பூக்கத் தொடங்கும்.

புதிய விதைகள்

புதிய விதைகள் நன்கு முளைக்கும். விதைப்பதற்கு 12 மணி நேரத்திற்கு முன்னால் தண்ணீரில் ஊற வைத்து விதைத்தால் அவற்றின் முளைப்பு நன்றாக இருக்கும்.

உணவு தீவனம் நார் எரிபொருள் மருத்துவம், இப்படி பல பயன் தரும் செவ்விவு மரங்கள், தெற்கு ராஜஸ்தான் பகுதியில் வெப்பமண்டல இலையுதிர் காடுகளில் அதிகம் பரவியுள்ளது. ஸ்ரீலங்கா மியான்மர் சுமத்ரா ஆகிய இடங்களிலும் செவ்விலவு பரவி உள்ளது.

இயற்கை மருத்துவ முறைகள்

ஆயுர்வேத மருத்துவத்தில் இலவம் பஞ்சு மரங்களை ஷால்மலி என்று குறிப்பிடுகிறார்கள். இவை தவிர சித்த மருத்துவம் யுனானி போன்ற இயற்கை மருத்துவ முறைகளில் இலவ மரங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

இதன் காய்களில் இருந்து எடுக்கும் பஞ்சுகளை பயன்படுத்தி தலையணைகள் படுக்கைகள் மற்றும் இருக்கைகள் தயாரிக்கப்படுகின்றன.

இலவம் பஞ்சு மரத்தின் பிசின் பல்வேறு நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. சீதக்கடுப்பு எலும்புருக்கி நோய், இன்புளுயன்சா நோய் மாதவிடாய் சமயம் ஏற்படும் மிகையான ரத்தப்போக்கு ஆகியவற்றை இந்த பிசின் மூலம் கட்டுப்படுத்துகிறார்கள்.

இதன் தண்டுகளில் தயாரிக்கும் குடிநீரின் மூலம் மேல் அண்ணத்தில் ஏற்படும் புண்கள், சிப்பிலிஸ் பாலியல் நோய், தொழு நோய் சிலந்தி அல்லது பாம்பு கடி ஆகியவற்றை குணப்படுத்தவும் முடியும்.

இதன் இலைகள் பூக்கள் தண்டுகள் பட்டைகள் வேர்கள் விதைகள் அனைத்தையும் பாரம்பரிய மருத்துவ முறைகளில் பயன்படுத்துகிறார்கள். உடுமலைப்பேட்டை மற்றும் குடிமங்கலம் பகுதியில் இலவம்பஞ்சினை னிப்பயிராக சாபடி செய்கிறார்கள்.லவம்பஞ்சு சாகுபடி செய்வதில், இதன் காய் விதை பஞ்சு காய்களின் தோல் மரம் என அனைத்தும் பயன் தரக்கூடியது என்கிறார்கள்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...