Monday, July 10, 2023

PUYA KILLER TREES OF CHILE 247.ஆடுகளை சாப்பிடும் அசைவ மரங்கள்.


ஆடுகளை சாப்பிடும்
அசைவ மரங்கள் புயா
.


பூச்சிகளைச் சாப்பிடும் செடிகள் இருக்கு என்றாலே எல்லோரும் மிரளுவார்கள். இந்த நிலையில் ஆடுகளை சாப்பிடும் செடிகள் கூட இருக்கு என்றால் எப்படி இருக்கும் ? உண்மையா அல்லது உடன்சா என்று கேட்பீர்கள்.

தென் அமெரிக்காவில் சைல் மலைப்பகுதிகளில் இருக்கும் இந்த பேய்ச் செடிகளின் பெயர் புயா செடிகள்,

தாவரவியல் பெயர்: புயா ச்சைல்லென்சிஸ் (PUYA CHILENSIS)

தாவரக் குடும்பம்: ப்ரோம்லியேசி(BROMLIACEAE)

இதன் இலைகளில் இருந்து ஒரு வகையான நார் எடுக்கிறார்கள்.திலிருந்து மீன்பிடி வலைகளை செய்கிறார்கள். இந்த வலைகள் நாட்பட உழைக்கிறது. இந்தச் செடி ப்ரோம்லியேசி என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. அன்னாசிப் பழச்செடியின் குடும்பத்தை சேர்ந்தது.

புயா சைல்லன்சிஸ் செடியையும், உணவுக்கான தாவரம் என்றே வகைப்படுத்தி உள்ளார்கள். தென்அமெரிக்காவின் சைல் நாட்டை சொந்தமாகக் கொண்டது.

இதன் இலைகளின் அடிப்பகுதி மிருதுவான தண்டுகள் போல இருக்கும். இதனை சாலட் ஆக சாப்பிடலாம். சாப்பிட சுவையாக இருக்கும். புயாவின் பூக்களையும் சாப்பிடலாம் என்று சொல்லுகிறார்கள்.

இதன் இலைகள் நீளமானவை. இலையின் இரு ஓரங்களிலும் கொக்கிகள் போன்ற முட்கள் இருக்கும். இந்த இலை முட்கள் தான் ஆடுகளின் ரோமங்களில் மாட்டி அவற்றை மடக்கிவிடும். இந்த கொக்கி முட்களில் இருந்து ஆடுகளால் தப்பிக்க முடியாது.

இந்த செடிகளிடம் சிக்கிக்கொண்ட ஆடுகள் பட்டினி கிடந்து அங்கேயே செத்துப் போகும். அந்த செடிகளின் அடியிலேயே அந்த ஆட்டின் உடல் அழுகி, மக்கி அந்த செடிகளுக்கு உரமாகிவிடும். இந்த செடிகள் ஆடுகளை நேரடியாக சாப்பிடுவதில்லை.

புயா மரங்களை உற்பத்தி செய்ய விதைகளை விதைக்கலாம். கிளைத் தண்டுகளை நடலாம். இதன் பூக்கள் மஞ்சள் மற்றும் பச்சை நிறமாக இருக்கும். இவை 6 முதல் 7 அடி உயரம் வளரும். மெல்ல வளரும். ஒருமுறை பூத்தால் மறுமுறை பூக்க 20 ஆம் ஆண்டுகள் ஆகும்.

இந்த செடிகளை புரட்டோகார்னிஓரஸ் என்கிறார்கள். அப்படி என்றால் இந்த செடிகள் பிராணிகள் அல்லது பறவைகளைக் கொல்லும் ஆனால் அவற்றை  நேரடியாக சாப்பிடாது, செரிக்காது, அவற்றிலிருந்து சத்துக்களை எடுத்துக் கொள்ளவும் முடியாது.  அப்படிபட்ட செடிகளை புரொட்டோ கார்னிவோஸ் தாவரங்கள் என்கிறார்கள்.

இந்த செடிகளில் தரை மட்டத்தில் உள்ள இலைகளில் தான் கொக்கி முட்கள் இருக்கும். அருகில் வரும் வெள்ளாடுகள் செம்மறி ஆடுகள் மற்றும் பறவைகள் எதுவாக இருந்தாலும் “லபக்” என்று பிடித்துக் கொள்ளும். இந்த புயா செடிகள்.

மாமிச பட்சிணியாக விளங்கும் இந்த செடிகளை பற்றிய தகவல்களை படியுங்கள். அது மர்ம நாவல் மாதிரி த்ரில்லாக இருக்கும். இதற்கு நீங்கள் கார்னிவோரஸ் பிளான்ட்ஸ் (CORNIVOROUS PLANTS) என்று வலைத்தளத்தில் தேட வேண்டும்.அல்லது புரோட்டோ கார்னிவோரஸ் பிளான்ட்ஸ் (PROTOCORNIVOROUS) என்று தேடுங்கள்.

இந்த புயா செடிகள் பைனாப்பிள் செடிகளின் தூரத்து சொந்தம். இதன் பூக்களின் தண்டுகள் மிருதுவாக இருக்கும். சில்க் மாதிரி வழுவழுப்பாக இருக்கும். மே ஜூன் மாதங்களில் பூக்கும்.

பொதுவாக புயா செடிகள் பூக்க வேண்டுமென்றால் அவை ஆறு முதல் 8 ஆண்டுகள் வளர வேண்டும். அதன் பின்னர்தான் பூக்க தொடங்கும். ஆனால் ஆனால் புயா செடிகள் 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பூக்குமாம்.

புயா சைலன்சிஸ்  என்னும் செடிகளை ஆடுகளைத் தின்னும் செடி என்றே அழைக்கிறார்கள்.

நீங்கள் யாராவது சைல் நாட்டுக்கு போனால் அங்கு இந்த புயா செடிகளை பார்த்துவிட்டு வாருங்கள், தூரத்தில் நின்றே பாருங்கள்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

  

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...