ஊட்டம் சேர்க்கும் விருந்து வாட்டம் போக்கும் மருந்து |
(MATHULAI,
POMEGRANATE, PUNICA GRANATUM, LITHERACEAE)
தாவரவியல் பெயர்: பியூனிகா கிரனேட்டம் (PUNICA GRANATUM)
தாவரவியல் குடும்பம் பெயர்: லித்ரேசி (LITHERACEAE)
பொதுப்பெயர்: போம்கிரனேட் (POMEGRANATE)
தாயகம்: ஈரான்
பல ஆயிரம் ஆண்டுகளாக பலவிதமான நோய்களை குணப்படுத்தும் விதத்தில் நமது
முன்னோர்கள் மாதுளையை பயன்படுத்தி வந்துள்ளனர்.
ஊட்டம் தரும் உணவாகவும், வாட்டம் போக்கும் மருந்தாகவும் உதவுகிறது மாதுளை.
மாதுளை ஒரு சிறுமரம். ஏராளமான சிம்புகளுடன் ஒரு குறுமரமாக தோற்றம் தரும். மூன்று முதல் ஐந்து
மீட்டர் உயரம் வளரும்: சிம்புகளில் பளிச் சென்ற
சிவப்பு நிறப் பூக்கள் பூக்கும்.
மாதுளை பழ மரத்தின் பல மொழிப் பெயர்கள்
தமிழ்: மாதுளை (MATHULAI)
ஆப்ரிகன்ஸ்: கிரானட் (GRANET)
ஆல்பேனியன்: ஷெகி (SHEGI)
அரபிக்: ரோமின் (ROMIN)
ஆர்மீனியன்: நூர் (NOOR)
அசாமிஸ்: தலிம் (DHALIM)
பெங்காலி: தலிம் (DHALIM)
செக்: கிரேனடோவ்னிக் (GRANATOVNIK)
டேனிஷ்:
கிரேனடேப்பல் (GRANATEPPAL)
பிரென்ச்: கிரினேட் (GRANATE)
ஜெர்மன்: கிரேன்டாஃப்பெல் (GRANTAFFEL)
குஐராத்தி: டேடம் (DATUM)
இந்தி: அனார், அனார்தனா (ANAR, ANARDHANA)
இந்தோனேசியன்: டெலிமா (TELIMAI)
ஐப்பானிஸ்: செக்கிர்யு (CHEKIRYU)
கன்னடா: தலிம்பே (DHALIMBE)
மலாய்: டெலிமா (DHELIMA)
மலையாளம்: மாதுளம் (MADHULAM)
மராத்தி: அனார்தனா (ANARDHANA)
நேப்பாளி: தாரிம் (DHARIM)
ஓரியா: தலிம்பா (DHALIMBA)
சமஸ்கிருதம்: தரிம்பா (DHARIMBA)
ஸ்பேனிஷ்;: கிரேனடா (GRENADA)
ஸ்வாகிலி: கோமாமாங்கா (KOMAMANGA)
தெலுங்கு: டடிமா பாண்டு (DADIMA
PONDU)
தாய்: டேப் டிம் (TAPE
TIM)
வியட்நாமிஸ்: கேய்லு (KEYLU)
மாதுளை ஏறத்தாழ 3000 ஆண்டுகளாக ஒரு சிறந்த மூலிகையாக
பயன்படுத்தப்பட்டு வருகிறது, என்கிறது மாதுளையின் சரித்திரம்.
மாதுளம் பழம், பழத்தின் தோல், மரத்தின் வேர், பட்டை போன்ற எல்லாவற்றையும் மருந்தாகப்
பயன்படுத்தலாம்.
புற்றுநோய், சக்கரை நோய், இதய நோய்கள், மேகப்புண்
புற்றுநோய், பெரும்பாலான பெண்களுக்கு வரக்கூடிய
கீல்வாதம் , சிறுநீரக நோய்கள், இருமல், தொண்டைப்புண், தோல் நோய்கள், வயிற்றுச் செரிமானப் பிரச்சினைகள்,
மூட்டுவலி, மூட்டுப்பிடிப்பு, சக்கரை நோய், தோல் புற்றுநோய், இதய நோய்கள், மாரடைப்பு, ரத்த அழுத்தம் மற்றும் ரத்த ஒட்டம்,
ரத்தத்தில் கெட்டகொலஸ்ட்ரால் அதிகரிப்பு,
மஞ்சள் காமாலை, மேகப்புண் போன்றவற்றை குறைக்க அல்லது கட்டுப்படுத்த மாதுளை பயன்படுகிறது.
உடல் ஆரோக்கியத்திற்கும், பல வகைகளில்
உதவுவது மாதுளை. ரத்தச் சோகையினால்
அவதிப்படுவர்களுக்கு இரும்புச் சத்து
அளிக்கும். உடல் சூட்டிளை தணிக்கும். குடற்புண்ணை குணப்படுத்தும்.
வனமீட்பு முயற்சிகளில் உபயோகம் ஆகும்
மாதுளை, மிக நீளமான வேர் அமைப்பை உடையது: மண் அரிப்பை சிறப்பாகக் கட்டுப்படுத்தும். ஒடைக்கரைகளில் நட ஏற்றது. வறட்சியைத் தாங்கும். வனமீட்பு முயற்சிகளில் உபயோகம் ஆகும். வடமேற்கு இமாலயப் பகுதிகளில் இதனை வேலிமரமாக நடுவது வழக்கம்.
சிறு குச்சிகளின் துண்டுகள் 4 முதல் 5 செ.மீ நீளமாகவும், முற்றிய கிளைகளை 20 முதல் 25 செ.மீ நீளத் துண்டுகளாகவும் நடலாம். ஆனால் பெரும்பாலும் பதியன் செடிகள்
அதிகம் நடுகிறார்கள். வேர்ச்செடிகளை எடுத்து நேரடியாக நடலாம். விதைகளையும் முளைக்க வைத்து புதிய
செடிகளை உருவாக்கலாம். கடல் மட்டத்திற்கு மேல் 1800 மீட்டர் உயரம்
வரை மாதுளை நன்கு வளரும்.
தமிழ் நாட்டில் சிபாரிசு செய்யப்படும் மாதுளை
தற்போது தமிழ்நாட்டில், பல
உயர்விளைச்சல் மாதுளை ரகங்களைப் பயிரிட தோட்டக்கலைத்துறை சிபாரிசு செய்கிறது. அவை ஜோதி, கணேஷ், கோ.1, ஏற்காடு.1, அரக்தா, ருத்ரா, மற்றும் மிருதுளா.
ட்ரீ ஆஃப் நாலட்ஜ்’ என்பது
மாதுளைதான்
மத்திய கிழக்கு முழுவதிலும் மிகவும் பிரபலமான பழம் மாதுளை. பைபிளில் சொல்லப்படும் ‘ட்ரீ ஆஃப் நாலட்ஜ்’ என்பது ‘ஆப்பிள்’ அல்ல. அது மாதுளையாகத்தான் இருக்கும்
என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதற்கு
அவர்கள் சொல்லும் காரணம், இதன் பழைய லத்தீன் பெயர் மாலம்
பியூனிகா (MALUM PUNICA).
மாலம் என்றால், ‘ஆப்பிள்’ என்று பொருள். இன்னொன்று ஜெர்மன் மொழியில் மாதுளையை ‘கிரானட் ஆப்பெல்’
(GRANATE APPEL). என்கிறார்கள். இதில் ஆப்பெல் என்பது பழம் எனக் குறிக்கும். ஆங்கிலம் மற்றும் பிரென்ச் மொழியும், மாதுளையைத்தான் ஆப்பிள் என்கிறது.
பழங்களிலேயே கவர்ச்சிகரமான பழம் எது என்றால், அது மாதுளைதான். ஓவ்வொரு
முறையும் ஒரு மாதுளம் பழத்தைப் பிளந்ததும் எனக்கு ஏதோ நகைப் பெட்டியைத் திறந்தது
மாதிரி இருக்கும். உள்ளே இருக்கும் மணிகள்
சிலவற்றில் இளம் ஊதாநிறத்தில் இருக்கும்.
அவை முத்துக்கள் மாதிரித் தோன்றும்.
இயற்கை எத்தனை வகை இனிப்புகள் தரும்
பெரும் பாலான பழங்களில் ரத்தினச் சிவப்பில் அந்த மணிகள்
பளபளக்கும். மாதுளையின் சுவை துவர்ப்பு
இழையோடிய இனிப்புச் சுவை. மாவின்
இனிப்பு ஒரு வகை: பலாவின் இனிப்பு இன்னொரு வகை.
கொய்யாவின் இனிப்பு தனிவகை. அன்னாசியின் இனிப்பு மறுவகை. இயற்கையால் மட்டுமே வகைவகையான
இனிப்புகளைத் தரமுடியும். மனிதன் ரசிக்கலாம். ருசிக்கலாம். இருப்பதை
இன்னொன்றாய் மாற்றலாம். உருவாக்கம் என்பது ஒருபோதும்
இயலாது.
பழங்கள்
சாப்பிட பழக்கம் வேண்டும்.
பொதுவாக பழம் சாப்பிடும் பழக்கம் நம்மிடையே இல்லை. வாழைப்பழம் சாப்பிடுவதற்காக வாங்குவதைவிட
அகர்பத்தி ஸ்டேண்ட்டாக பயன்படுத்தவே அதிகம் வாங்குவார்கள் நம்ம ஆட்கள். அதனால்
மாதுளை போன்ற ஆரோக்கியம் மிக்க பழங்களை சாப்பிட நமது குழந்தைகளைப் பழக்க வேண்டும்.
வாழைப்பழம் வத்தி ஸ்டேண்ட் ஆனதுதான் அதிகம்
“நாம் பூஜை புனஸ்காரத்துக்கும் சடங்கு சம்பிரதாயத்துக்கும்தான் பழம்
வாங்குவோம். சாப்பிட வாங்கமாட்டோம். அதனால்தான் நாம் சாப்பாட்டுக்கு ஒரு ரூபாவும்
மருந்துக்கு பத்து ரூபாவும் செலவு செய்கிறோம். வாழைப்பழத்தை வயித்துப்பசிக்கு சாப்பிட்டதைவிட வத்திஸ்டேன்டா உபயோகப்படுத்தினதுதான் அதிகம்”
என்று சொல்லுவார் என் நண்பர் ஒருத்தர்.
இதுபோன்ற பழங்களின் அருமையும் தெரிந்த காரணத்தால்தான் நமது பாரம்பரிய
மருத்துவத்தில் அவற்றை மருந்தாகவும் பயன்படுத்தி வந்தார்கள், நமது முன்னோர்கள்.
நாம் நமது பெரியவர்களிடம் அவர்கள் பெற்ற அனுபவங்களை பதிவிறக்கம்
செய்யத் தவறிவிட்டோம். அவர்களுடைய அனுபவ அறிவுக் களஞ்சியங்களை சேமிக்கத் தவறிவிட்டோம். வேர்களை
உதாசினப்படுத்திவிட்டு விழுதுசூனியங்களைப் பிடித்தபடி தொங்கிக் கொண்டு இருக்கிறோம். இனியாவது நாம் விழித்துக் கொள்ள வேண்டும். நாம் பிழைத்துக்கொள்ள அதுதான்
வழி.
A
REQUEST
I
LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS
ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A
COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE
WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL
BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment