பிப்லி பல நோக்கு மரம் |
தாவரவியல் பெயர்: எக்ஸ்பிக்லேண்டியா பாப்புல்நேயா (EXBICKLANDIA POPULNEA)
தாவர குடும்பம்: ஹமாமெலிடேசி(HAMAMELIDACEAE)
பொதுப்பெயர்: பிப்ளிமரம்
(PIPLI MARAM)
ஊதா நிற உள் வயிர மரம்
மரங்கள் நடுத்தரமான எடை உடையவை. மிகவும் உறுதியானவை. நெகிழ்ச்சி
தரும் பண்புடையவை (PLASTICITY) இதன் வைரப் பகுதி மரங்கள் செங்காவி மற்றும் ஊதா நிறத்திலும்
இருக்கும்.
வீனீர் என்பது தங்கமுலாம்
இதன் கட்டையை தோல் போல அல்லது காகிதம் போல உறித்து எடுத்து
வீனீர்களாகப் பயன்படுத்தலாம். வீனீர் என்றால் மேலொட்டுபட்டை என சொல்லலாம். வேறு உலோகத்தில் செய்து தங்க முலம் பூசுவது மாதிரி. சாதாரணமான மரத்தில் செய்த பொருட்களின் மேற்புறத்தில் இந்த அழகிய பிப்லி மரத்தின் பட்டைகளை ஒட்டுவார்கள்.
கட்டுமான மரம்
இழைப்பு வேலைகள் செய்ய இந்த மரம் ஏற்றது. எவ்வளவு வேண்டுமானாலும் இழைக்கலாம். அவ்வளவையும் இந்த மரம் தாங்கும். இந்த மரத்திலிருந்து நல்ல தரமான வீனீர்களை உரித்து எடுக்கலாம்.
இதன் கட்டைகள் நடுத்தரமான அளவே உழைக்கும். அம்ரோஷியா வண்டுகளின் தாக்குதலும் ஓரளவிற்கு உள்ளாகும். இந்த பிப்லி மரத்தின் கட்டைகள் சுமாரான மற்றும் நடுத்தரமான கட்டுமான பணிகளில் பயன்படுத்தலாம்.
மேம்பாலம் கட்டலாம்
இந்தியாவில் மேம்பாலம் போன்ற கட்டுமானப் பணிகளுக்கு பிப்லி மரங்களை சிபாரிசு செய்கிறார்கள், முக்கியமாக வீனீர்கள் மற்றும் பிளைவுட் தயாரிப்பிற்கு பிப்லி மரங்கள் சிபாரிசு செய்யப்படுகிறது.
இந்திய மரம்
தாயகம்: தெற்குசைனா, லாவோஸ் மற்றும் வடக்கு வியட்நாம்.
பரவிஇருக்கும் இடங்கள்: ஆசியா, தெற்குசீனா, இந்தியா, மியான்மர், தாய்லாந்து, வியட்நாம், மலேசியா
மற்றும் இந்தோனேஷியா.
இவை பசுமை மாறாமரங்கள், 16 முதல் 20 மீட்டர் உயரமாக வளரும், அரிதாக சில மரங்கள் 45 மீட்டர் உயரம் கூட வளரும், இந்த உயரம் இந்தியாவில் டார்ஜிலிங் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் இலைகள் இளசாய் இருக்கும்போது கவர்ச்சிகரமான சிவப்புநிறமாக இருக்கும், இலைகளின் காம்புகள் நீளமாக இருக்கும், மெலிதாய் வீசும் காற்றில்கூட இலைகள் வேகமாய் படபடக்கும்.
இதன் இலைகள்
பூவரசு போல இதயவடிவில் சற்று தடிமனாக, தொட்டு பார்க்க இதயதைத் தொடுவது போல மெதுவாக இருக்கும்.
ஒரு பூங்கொத்தில் ஏழு முதல் 17 பூக்கள் இருக்கும், பூங்கொத்துக்கள் இலைக் கணுக்களில் தோன்றும், பூக்கள் சிறியதாக இருக்கும், இருபாலின பூக்களாக இருக்கும்,
பறந்துபோகும் விதைகள்
இவற்றில் இதழ்கள் மற்றும் புற இதழ்கள் என்று எதுவும் இருக்காது. இதன் கனிகள் ஒவ்வொன்றிலும் ஆறு முதல் எட்டு விதைகள் இருக்கும்.
விதைகள் எடை குறைவாக காற்றில் நீண்ட தூரம் பறந்து செல்லக்கூடியதாக இருக்கும். கடல் மட்டத்திலிருந்து 1200 முதல் 3000 மீட்டர் வரை உள்ள மலைச்சரிவுகளில் வளரும்.
பசுமை மாறாத காடுகளில் வளரும், உயர்வான மலைகளில் இருக்கும், மழைக் காடுகளிலும் இந்த மரங்கள் சிரமமின்றி வளரும்.
மைனஸ் குளிர்கூட தாங்கும்
குறைவான வெப்பநிலை உள்ள இடங்களில் கூட இந்த பிப்லி மரங்கள் வளரும் தன்மை உடையவை. மைனஸ் மூன்று டிகிரி சென்டிகிரேட் உள்ள குளிர் நிலையைக் கூட தாங்கி வளரும்.
அங்ககச் சத்து
நிறைந்த, ஊட்டச்சத்துக்கள் அதிகம்உள்ள, ஈரத்தன்மை கொண்ட, அதே சமயம்
வடிகால் வசதி உள்ள, மண் கண்டங்களில் மட்டுமே வளரும். இந்த மரத்தினை வெட்டினால்
துளிர்க்காது. வேர் செடிகளையும் இது உற்பத்தி செய்யாது.
வனமீட்பு செய்யலாம்
இந்தியாவில் பிப்லி மரங்கள், சரிவான நிலப்பகுதிகளைப் பாதுகாக்க, மண் அரிமானத்தைத் தடுக்க, டார்ஜிலிங் பகுதிகளில் பிப்லி மரங்களை வளர்க்கிறார்கள். அது மட்டும் அல்லாமல் வனமீட்பு (REFORESTATION) வேலைகளிலும் இதனைப் பயன்படுத்துகிறார்கள். பிப்லி மரங்கள் பற்றி கூடுதலாக செய்திகள் ஏதும் தெரிந்திருந்தால் எனக்கு
சொல்லுங்கள் நன்றி.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE A
FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE,
IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE.
YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA
BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment