Monday, July 3, 2023

GOLDEN TEAK 220. ஆஸ்திரேலியாவின் தங்கத் தேக்கு

 

GOLDEN TEAK OF
AUSTRALIA


சீமை வேலம்பட்டை மரம்  நம்ம ஊர் கருவேல மரத்திற்கு நெருங்கிய சொந்தமான மரம், ஆனால் நம்ம மரம் இல்லை, ஆஸ்திரேலியாவின் பசுமை மாறாத மரம், மிக வேகமாக வளரும் மரம்,  உணவாக பூ, பிசின் ஆகியவற்றைத் தரும், 
வயிற்றுப்போக்கு, வயிற்று கடுப்பு, உதிரப்போக்கு காயங்கள், வயிற்றுப்போக்கு, சரும நோய்கண் நோய், பாதங்களில் வியர்க்கும் நோய் ஆகியவற்றை குணப்படுத்துவதுடன், பற்கள் மற்றும் பல் ஈறுகளை வலுப்படுத்தும், இதனை தங்கத் தேக்கு என்று கொண்டாடுகிறார்கள்.

சீமை வேலம்பட்டை மரம் சில முக்கிய செய்திகள்

பொதுப்பெயர்: பிளாக் வாட்டில், ஏர்லி கிரீன் வேட்டில், கோல்டன் டீக், பிரேசிலியன் டீக், (BLACK WATTLE, EARLY GREEN WATTLE, GOLDEN TEAK, BRAZILIAN TEAK,).

தாவர குடும்பம்: ஃபேஃபேசி (FABACEAE)

தாவரவியல் பெயர்: அகேசியா டெக்கரன்ஸ் (ACACIA DECURRENS)

பரவி இருக்கும் இடங்கள்: ஆஸ்திரேலியா, ஆஃப்ரிக்கா, அமெரிக்கா, நியூசிலாந்து, ஜப்பான், பசிஃபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதி.

லேசான மணல் சாரி, நடுத்தரமான கடினத் தன்மை கொண்ட இருமண்பாட்டு மண், வடிகால் வசதி கொண்ட மண் வகை, அமிலத்தன்மை கொண்ட மற்றும் நடுத்தரமான கார அமில நிலை உடைய மண் ஆகியவற்றில் சீமை வேலம்பட்டை மரங்கள் வளரும். 

இவை வறண்ட தன்மை உள்ள மற்றும் ஈரத்தன்மை கொண்ட மண்ணிலும் வளரும் தன்மை உடையன.

பூக்கள் மற்றும் பிசினை சாப்பிடலாம். பூக்களை சாப்பிடலாம். சமைத்தும் சாப்பிடலாம். அரேபிய நாடுகளில் இந்த பிசினை ஜெல்லிகள் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள். 

ரப்பர் பால் வடிப்பது போல் இதன் மரங்களில் இருந்து பிசினை வடிக்கலாம். இந்த மரங்களின் பிசின் துவர்ப்பாக இருக்கும். சில மரங்களின் பிசின் இனிப்பு சுவையாகவும் நல்ல நறுமணமும் உடையதாகவும் இருக்கும்.

இதன் பூக்களிலிருந்து மஞ்சள் நிற சாயமும் காய்களில் இருந்து பச்சை நிற சாயமும் எடுக்கிறார்கள்.

அடர்த்தியாகவும் பரவலாகவும் வளரும் இதன் வேர் வளர்ச்சி மண்ணரிப்பைத் தடுக்கிறது. வேர்கள் மூலம் தழைச்சத்தை நில படுத்தக் கூடியதும்கூட.

இதன் பட்டைகளில் கணிசமான அளவு அதாவது சுமார் 40% சத்து உள்ளது,தோல் பதனிட பயன்படுத்தலாம்.

மருத்துவ பயன்கள்

மரத்தின் பட்டையை பாரம்பரிய மருத்துவ முறைகளில் பயன்படுத்தி வருகிறார்கள். பட்டைகளில் டானின்  சத்து அதிகம் உள்ளதால் இதனை துவர்ப்பியாக  பயன்படுத்துகிறார்கள். 

வயிற்றுப்போக்கு, வயிற்று கடுப்பு, உடலில் ஏற்படும் உதிரப்போக்கு,  காயங்கள், ஆகியவற்றை குணப்படுத்துகிறது.

இதன் கரும் பிசின் வயிற்றுப்போக்கினை கட்டுப்படுத்துகிறது. 

இதன் பட்டைச் சாற்றினை வாய் கொப்பளிப்பதன் மூலம் பற்கள் மற்றும் பல் ஈறுகளை வலுப்படுத்தலாம். 

சரும நோய்கள், கண் நோய்கள் மற்றும் பாதங்களில் வியர்க்கும் நோயினையும் கட்டுப்படுத்தலாம்.

இதர பயன்கள்

இந்த மரம் மண்ணரிப்பை தடுக்கும், புதற்காடுகளாக மெலிந்து நலிந்து போன காடுகளை மீட்டெடுக்கும், தேயிலைத் தோட்டங்களுக்கு நிழல் தரும், காற்றடிப்பை தடுக்கும், பசுந்தாள் உரமாகும்.

இந்த  மரத்தில் ஏகப்பட்ட பொருட்கள் செய்யலாம். 

கருவிகளுக்கான கைப்பிடிகள் 

பெட்டிகள் 

இணைப்புகள் 

தரை பாவுதல்

கட்டுமானக் கட்டைகள் 

தீக்குச்சிகள் 

மரக்கூழில்  அட்டை

முரட்டு காகிதங்கள்

ரயான் துணிகள் 

அத்தனையும் செய்யலாம்.

பிரேசில் மற்றும் கென்யாவில் இதனை கரிகள் தயாரிக்க பயனாகிறது. 

இந்தோனேஷியாவில்

வீடுகளில் விறகாக 

அறுவடை செய்த புகையிலையை பதப்படுத்த 

இப்படி அதிக அளவில் இதனைப் பயன்படுத்துகிறார்கள்.

எச்சரிக்கை: வறட்சியான காலத்தில் இதன் இலை தழைகளில்  ஹைட்ரஜன் சயனைடின் அளவு கூடுதலாக இருக்கும். அதனால் கால்நடைகளை இந்த காலகட்டத்தில் மேய விடக்கூடாது.

Modified on 17.09.2024

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...