வணிக மருத்துவ மரம் மூலகுனாரி |
தாவரவியல்
பெயர் நீயோலிட்சியா ஸ்குரோபிகுலேட்டா (NEOLITSEA SCROBICULATA)
தாவரகுடும்பம்: லாரேசியே (LAURACEAE)
பாரம்பரிய
மருத்துவம் தொழிற்சாலைகளுக்கு உதவும் படியான பண்புகள் மற்றும் தாவர ரசாயனங்களையும்
கொண்டதாக உள்ள மரம் என்கிறார்கள் இதனை ஆராய்ச்சியாளர்கள்.
வலி
நிவாரணியாகவும் (ANALGESTIC) காய்ச்சலை கட்டுப்படுத்தும் சக்தி உடையதாகவும் (ANTIPYRETIC)ஆய்வுகளில்
நிரூபிக்கப்பட்டுள்ளது.
இது
குறித்த ஆய்வுகள் தூத்துக்குடி வா.உ.
சிதம்பரனார் கல்லூரி மற்றும் கோயம்புத்தூர் கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல்
கல்லூரியிலும் நடத்தப்பட்டன.
இந்த
மரத்தின் இலைகள் பழங்கள் மற்றும் விதைகளில் இருந்து எசென்ஷியல் ஆயில் (ESSENTIAL OIL)என்னும் தாவர எண்ணெயையும் எடுக்கலாம்.
உலகிலேயே
அதிகமான தாவர வளங்களை உள்ளடக்கிய நாடு இந்தியா. தற்போது
வாசனை திரவியங்கள் (PERFUMERIES), அழகு சாதனங்கள் (COSMETICS)மற்றும் உணவுப் பொருட்களுக்கான மணமூட்டிகள் (FLAVOURING AGENTS)பயன்படுத்துவதிலும் இயற்கையான பொருட்களை
பயன்படுத்துவதற்கான முனைப்பும்
முயற்சியும் அதிகரித்துள்ளது.
அதனால்
இது போன்ற தாவர எண்ணெய்கள் தரும் தாவரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
முக்கியமாக லாரேசி
குடும்பத்தில் உள்ளவைகளில் பெரும்பாலான தாவரங்கள் மணமூட்டுபவை.
ஆனால்
இதுவரை மிகவும் குறைவான தாவரங்களை வணிக ரீதியில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு
முக்கியமான காரணம் நம்மிடையே போதுமான ஆய்வுகள் இல்லை என்பதுதான்.
மேற்குத்
தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நியோலிட்சியா தாவரக்
குழுமத்தில் இன்னும் பல தாவரங்கள் இப்படிப்பட்ட ஆய்வுகளுக்காகக் காத்திருக்கின்றன என்கிறார்கள்.
பசுமை
மாறாத இந்த மரம் மேற்கு தொடர்ச்சி மலைக்கு உரிய மரம். 15 மீட்டர் வரை உயரமாக வளரும்.
மலையாளத்தில் மூலகுனாரி,
சாந்தமரம், வெள்ளாட்டான் என்றும்
அழைக்கிறார்கள்.
கேரள
மாநிலத்தில், வயநாடு, பாலக்காடு, கொல்லம், இடுக்கி, பத்தனம்திட்டா, திருவனந்தபுரம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய இடங்களில் இந்த மரம் பரவியுள்ளது. ஆனால்
அழிந்து வரும் மரஇனம் என்று
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக்
கட்டுரையை வாசிப்பவர்கள் இது பற்றிய கூடுதலான செய்திகள் ஏதும் தெரிந்திருந்தால்
எனக்கு அன்பு கூர்ந்து தெரிவியுங்கள்
நன்றி
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment