மூச்சு வேர்களுடன் மெரினா வெண்கண்டல் |
தமிழ்நாட்டிற்கு அறிமுகமான 14 அலையாத்தி என்னும் கண்டல் மரங்களில் ஒன்றுதான் இந்த அவிசென்னியா மெரினா ( AVICENNIYA MARINA). சுற்றுச்சூழலை பாதுகாத்தல், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளை கட்டுப்படுத்துதல், கடலோரப்பகுதிகளை இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாத்தல், சதுப்பு நில உயிர் வாழினங்களின் இனப்பெருக்கத்திற்கு உதவுதல், மருத்துவப் பண்புகளைப் பெற்றிருத்தல், இப்படி பல சிறப்புகளை உடையது இந்த மெரினா வெண்கண்டல் மரம்.
தாவர
குடும்பம்: அகந்தேசியே (ACANTHACEAE)
பொதுப்பெயர்: கிரே
மேங்குரோவ், இந்தியன் மேங்ரோவ்,
ஒயிட் மேங்குரோவ் (GREY
MANGROVE, INDIAN MANGROVE, WHITE MANGROVE)
தேவைப்படும்
பருவநிலை:
வெப்பமண்டலப் பகுதிகள், மித வெப்பமண்டலப்
பகுதிகள், மற்றும் பருவ மழை
பெறும் பகுதிகள்.
பரவி இருக்கும்
இடங்கள்:
தென் கிழக்கு ஆசியா, சிங்கப்பூர்,
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கிழக்கு ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் பசுபிக் தீவுகள்.
தமிழ்நாட்டில்
கடலூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், திருவள்ளூர், மற்றும் தூத்துக்குடி.
கேரளாவில்
ஆலப்புழா, கொல்லம், கோழிக்கோடு, மலப்புறம், திருச்சூர், கண்ணூர், காசர்கோடு, கோட்டையம், மற்றும் ஏர்ணாகுளம்.
பயன்கள்
பெரும்பாலான
தனியார் மருத்துவமனைகளில் பாம்பு கடிக்கு மருந்துகள் இல்லை. இன்று உலகம் முழுவதும் பாம்பு கடிக்கு அதிகபட்சமாக
மூலிகைகளை தான் பயன்படுத்துகிறார்கள். இந்த மெரினா வெண்கண்டல் மூலம் வெகுகாலமாக பழங்குடி மக்கள் பாம்பு கடிக்கு சிகிச்சை அளிக்கிறார்கள்.
இதன்
இலைகள் மற்றும் தளிர்களை, வைரஸ்
மற்றும் நுண்ணுயிர்களினால்
ஏற்படும் உடல் உபாதைகளை சரி செய்ய மருந்தாகப்
பயன்படுத்துகிறார்கள்.
இதன்
பட்டைகள் மற்றும் வேர்களை பாலுணர்ச்சி தூண்டியாக பயன்படுத்துகிறார்கள். பால்
உணர்வு குறைந்திருத்தல் அல்லது அறவே இல்லாமல் இருத்தல் போன்ற குறைபாடுகள்,
சமீபகாலமாக அதிகமாக உள்ளது. அவற்றை நிவர்த்தி செய்ய இதன் பட்டை மற்றும் வேர்கள் சிறந்த இயற்கை
மருந்துகளாக உள்ளன. நிறைய மரங்களில் பால் உணர்வு தூண்டும் சக்தி இயற்கையாகவே நிரம்பி உள்ளது.
இதனைப் பழங்குடி மக்கள் அறிந்திருக்கிறார்கள், அவற்றைப் பயன்படுத்தியும் வருகிறார்கள்.
இதற்கு
அடுத்தபடியாக மருந்து கம்பெனிகள், இதில் கவனம் செலுத்தி வருகின்றன. யார் கவனம் செலுத்தினாலும் சரி பயன்பாட்டுக்கு வந்தால் சரி.
மரங்களின் மகிமை புரிந்தால்
சரி.
பலமொழிப்
பெயர்கள்:
குஜராத்: டவாரியன் (TAVARIAN)
கன்னடா: ஐபாட்டி (IPATI)
மலையாளம்: ஓராயி (ORAYI)
மராத்தி: டாவீர் (TAVIR)
தமிழ்:
வெண்கண்டல், கண்ணா. (VENKANDAL,
KANNA)
தெலுங்கு,: தெள்ள
மாதா (THELLA MADA) .
வளரியல்புகள்
இவை பசுமை
மாறாமரங்கள். ஏழு மீட்டர் உயரம் வரை வளரும். மரங்களின் கீழே தரைப்பகுதியில் பென்சில் மாதிரி மூச்சு வேர்கள் வளரும். நீளமான
காம்புகளுடன் மஞ்சள் கலந்த பசுமை நிறமுடைய இலைகளுடன் காவி நிறம் கலந்த பசுமை நிற
சிறிய பூக்களுடனும் அழகாய் இருக்கும்.
பழங்கள், விதைகள்,
கன்றுகள், இதன் பழத்தில் உள்ள விதை கூடுதலான பழத்தசையுடன் இருக்கும். மரத்திலேயே இந்த விதைகள் முளைத்து கீழே விழும். சில
சமயம் விழுந்த இடத்திலேயே
முளைக்கும். அல்லது தண்ணீரில் அடித்துக் கொண்டு, வெகு
தூரம் சென்று பரவும். பல சமயங்களில் கடலோரத்தில் இந்த மேங்ரோவ்
கன்றுகள் ஒதுங்குவதைப்
பார்க்கலாம்.
பழவேற்காடு
முகத்துவாரத்தில் நான் பலமுறை இப்படி ஒதுங்கிய பல
நூறு கன்றுகளை சேகரித்துக் கொண்டுவந்திருக்கிறேன், ஒரு லட்சம் அலையாத்தி கன்றுகளை வளர்த்த
அனுபவமும் எனக்கு உண்டு. அதைப்பற்றி விரிவாக வேறு ஒரு கட்டுரையில் நான் எழுதுகிறேன்.
அன்பின்
இனிய நண்பர்களே வெண்கண்டல் அலையாத்தி பற்றி வேறு சுவாரஸ்யமான செய்திகள் ஏதும்
தெரிந்திருந்தால் எனக்கு சொல்லுங்கள் நன்றி.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment