லோத்ரா தாய்மார்களின் பிரச்சனைகளை தீர்க்கும் மரம். |
சிம்ப்ளோகாக்ஸ் ரெசிமோசா (SIMPLOCOS
RACEMOSA)
இதுவும் சிம்பிளாக்ஸ் தாவர இனத்தை
சேர்ந்தது இதனை ஆயுர்வேத மருத்துவத்தில் தெய்வீக மூலிகை எனக் குறிப்பிடுகிறார்கள்.
இது சிரம பாதுகாப்பிற்கும் மிகவும்
ஏற்றது. தோலில் ஏற்படும் சுருக்கம், அக்கி நோய், சக்கரை நோய் மற்றும் ஈரல் சம்பந்தமான
பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்துகிறார்கள். சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இதனை டானிக்காக
பயன்படுத்துகிறார்கள். மேலும் பெண்களின் மாதவிடாய்
சம்பந்தமான பிரச்சனைகளையும் தீர்க்கும் மரம் இது.
லோத்ரா மரத்தின் பிறமொழி பெயர்கள்.
தமிழ்: பெல்லி லொட்டை,வெள்ளி லெட்டி, வெள்ளி லோத்ரம் (Belli lottai, Velli Leti, Velli Lothram).
தெலுங்கு: லோத்துகா (Lothuca)
இந்தி பெங்காலி: லோத்ரா (Lothra)
குஜராத்தி: லோதாரா (Lothara)
மலையாளம்: பச்சோட்டி (Pachoti)
கன்னடம்: பச்செட்டு (Pachettu)
ஒடியா லோதோ (Lotho)
அசாமிஸ்:முகம் (Mugam)
மராத்தி: லோதா (Lotha)
பஞ்சாபி: லோதர் (Lodhar)
உருது: லோத் (Lodh)
இந்தியாவில் பரவலாக பரவியுள்ள மூலிகை
மரம். இந்த மரங்கள் இந்தியாவில் அஸ்ஸாம்
மற்றும் மணிப்பூர் ஆகிய பகுதிகளிலும் பரவி உள்ளது. ஏறத்தாழ 11 மொழிகளில் இதன் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளதால், அந்தந்த மாநிலங்களில் எல்லாம் அறிமுகம் ஆன மரம் எனத் தெரிகிறது. பிரபலமில்லாத மரமாக வேண்டுமானால் இருக்கலாம்.
ஆனால் மிக முக்கியமான மரம்.
மேலும் இந்த மரம் பெண்களுக்கான பிரச்சனைகளை தீர்க்கும் படியான மூலிகை என்கிறார்கள் இயற்கை நிபுணர்கள்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment