Monday, July 10, 2023

LAKETU TREE GRAPES OF ASSAM 248.அசாம் மாநிலத்தின் மரத்திராட்சை மரம்

அசாம் மாநிலத்தின்
மரத்திராட்சை மரம்


அஸ்ஸாம் மாநிலத்தில் சாகுபடி செய்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த லெட்டேக்கு என்னும் பழங்களை சமீபத்தில் துபாய்க்கு ஏற்றுமதி செய்துள்ளார்கள். இதனை அஸ்ஸாமில் சாகுபடி செய்தாலும் இதனை பர்மாதிராட்சை
(BURMESE GRAPES)என்கிறார்கள்.

பறித்த லக்கேட்டு பழங்களை அப்படியே சாப்பிடலாம், சூப் தயார் செய்யலாம், ஜாம், ஜெல்லி, எல்லாம் செய்யலாம், பீர் தயார் செய்யலாம்,  மருந்துகள் செய்யலாம், மருத்துவ சிகிச்சைகள் தரலாம். குறிப்பாக தோல் நோய்களை குணப்படுத்த இந்த லக்கேட் பழங்கள் குரு.

தாவரவியல் பெயர்: பக்காரியா சாப்பிடா (BACCAUREA SAPIDA)

தாவரக் குடும்பம்: பில்லாந்த்தேசி  (PHYLLANTHACEA)  

பொதுப் பெயர்கள்: லட்டேக்கு, லட்கா, லுட்கோ,  லோட்குவா,  பக்காரியா, லேண்டன் ட்ரீ, மஃபாய், பர்மிஸ் கிரேப்ஸ். (LAKETU, LATKA, LUTCO, LOTQUA, BACCAUREA, LANTERN TREE, MAFAI, BURMESE GRAPES, )

வளரியல்புகள்

சிறிய மரம், நடுத்தரமான பழமரம், பசுமை மாறா காடுகளில் வளரும் இலைகள் 33செ.மீ. நீளமும் 25செ.மீ. அகலமும் உள்ளவை, இதில் ஆண் பெண் பூக்கள் தனித்தனியானவை, இருவகைப் பூக்களும் வாசம் உள்ளவை, பூவிதழ்கள் மஞ்சள் நிறமாக இருக்கும். இதன் பூங்கொத்துகள் 75 செ.மீ. நீளம் இருக்கும்.

மரங்கள் 5 முதல் 10 மீட்டர் உயரம் வளரும். ஏப்ரல் மே மாதங்களில் பூக்கும். ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பழங்களை அறுவடை செய்யலாம். பழங்களை மரங்களில் நேரடியாக ஒட்டி வைத்தது போல இருக்கும். பழங்கள் கோள வடிவில் உருண்டைகளாக இருக்கும்.

முதிராத காய்கள் பசுமை நிறமாகவும், பழங்கள் மஞ்சள் நிறமாகவும் இருக்கும். பழத்தின் தசை ரோஜா நிறத்தில் இருக்கும். த்தில்  மூன்று முதல் நான்கு விதைகள் பழத் தசையில் புதைந்திருக்கும். 

மொழிப் பெயர்கள்;

நேபாளி: குசும் (KUSUM)

திரிபுரா:  பூபி (BHUBI)

மணிப்புரி: மொக்டாக் (MOKTAK)

ஹிந்தி: கட்ப்பால் (KHTTAPAL)

அசாமிஸ்: லட்டோக் டெங்கா. (LATOK DENGA)

வளரிடம்:

மித வெப்ப மண்டல காடுகள், ஈரத்தன்மை உடைய இடங்கள்,  பசுமை மாறா காடுகள், மற்றும் கடல் மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரம் வரை இந்த மரங்கள் வளரும்.

பரவி உள்ள நாடுகள்: இந்தியா, பூட்டான், பங்களாதேஷ், கம்போடியா, சைனா, ஹிமாலயா, ஹைனான், லாவோஸ், மலேசியா, மியான்மர், தாய்லாந்து, மற்றும் வியட்நாம்.

இந்தியாவில் பரவியுள்ள இடங்கள்: அசாம், மேற்குவங்கம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேஷ், மேகாலயா, மிசோரம், திரிபுரா மற்றும் ஒரிசா..

100 கிராம் பழத்தில் உள்ள சத்துக்கள்

கார்போஹைட்ரேட் 5.19 கிராம்

புரதம்: 0.58 கிராம்

கொழுப்பு: 0.07 கிராம்

வைட்டமின் சி: 273 மி.கி.

சோடியம்: 35 மி.கி.

பொட்டாசியம்: 730 மி.கி.

கால்சியம் 75 மி.கி.

மக்னிசியம்: 54 மி.கி.

பாஸ்பரஸ்: 132 மி.கி.

கலோரி சத்து 56 கி..

நீர் 3.56 கிராம்.

பழத்தசை சுவையானவை. பட்டைகள் மருந்தாகப் பயனாகிறது. பட்டைகளில் சாயம் எடுக்கிறார்கள். பர்மிய திராட்சை என்று சொல்லப்படும் இந்த லட்டேக்கு பழ மரங்களைப் போல பிரேசில்  நாட்டிலும் ஒரு பழமரம் உள்ளது அதன் பெயர் ஜபூட்டிகாபா (JABUTICABA). ஜபூட்டிகாபா பழம் பற்றி தனியாக ஒரு பதிவில் பார்க்கலாம்.

இந்த லகேட்டு மரத்திராட்சை பழங்களை நீங்கள் சாப்பிட்டு இருக்கிறீர்களா ? அது பற்றி உங்கள் கருத்து என்ன என்பதைச் சொல்லுங்கள். 

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE  A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

  

No comments:

HOW TO ENHANCE PULICAT ECO SYSTEMS - பழவேற்காடு ஏரியின் சூழல் பிரச்சனைகளுக்கான எனது மூன்று ஆலோசனைகள்

  கடிதம்  2 பழவேற்காடு ஏரியின்   சூழல் பிரச்சனைகளுக்கான எனது மூன்று  ஆலோசனைகள் ! DR.P.SATHYASELAVAM, DR.SELVAM அன்பின் இனிய   நண்பர...