Sunday, July 2, 2023

KURA STHALAVRIKSHA OF LORD SHIVA MURUGA 214.ஆண் குழந்தை பிறக்க அருளும் ‘குரா’ தெய்வீக மரம்

 

ஆண் குழந்தை பிறக்க அருளும்
‘குரா’ தெய்வீக மரம்


தாவரவியல் பெயர்: வெப்ரா கோரிம்போசா (WEBRA CORYMBOSA)

தாவரக் குடும்பம் பெயர்: ரூபியேசி (RUBIACEAE)

தாயகம்: இந்தியா (INDIA)

ஆண் குழந்தை பிறக்க அருளும் இந்த மரத்தின் பெயர் குரா மரம். இந்த மரத்தை வணங்கி வழிபட்டு வேண்டிக் கொண்டால், ஆண் குழந்தை பிறக்கும் என்று நம்பிக்கை காலங் காலமாக நிலவுகிறது. முருகனுக்கு உகந்த பெரிய மரமாக இது கருதப்படும் அழகான பூ மரம். இந்து மதத்திற்கு மட்டுமின்றி ஜைன மதத்தினருக்கும் இது வழிபாட்டுக்குரிய மரம்;.

சில தம்பதிகளுக்கு தொடர்ந்து பெண் குழந்தைகளே பிறந்து கொண்டிருக்கும்.  அப்படிப்பட்டவர்கள் குறிப்பிட்ட சில கோவில்களில்> வேண்டிக்கொண்டால் ஆண்குழந்தைகள் பிறக்கும் என்பது நம்பிக்கை.  குராமரம் சில கோவில்களில் தல விருட்சமாக உள்ளது.  அப்படி தல விருட்சமாக இருக்கும் குரா மரங்களில்> ஒரு தொட்டிலை கட்டிவிட்டு வேண்டிக் கொண்டால் ஆண்குழந்தை பிறக்கும் என்கிறார்கள்.

இந்த குரா மரம் எங்கு இருக்கிறது? எந்தக் கோவிலில் உள்ளது? அது எப்படி இருக்கும்? தெரிந்து கொள்ளலாம்.

இந்த குரா மரத்தின் தாவரவியல் பெயர் வெப்ரா கொரிம்போசா (WEBRA CORYMBOSA). அறிவியல் ரீதியாக இதுபற்றிய செய்திகள் அதிகம் ஏதும் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டிற்குரிய மரம் என்பது தெரிகிறது. இந்தியாவின் வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் அதிகம் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த மரம் சிவபெருமான் மற்றும் குமரக்கடவுள் முருகனுக்கும் உரிய மரம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள. திருவிடைக்காழி என்னும் இடத்தில் உள்ள குமாரசிவம் ஆலயத்தின் ஸ்தலவிருட்சமும் குரா மரம்தான். அங்கு உள்ள மரத்தில் உள்ள பொந்தில் இருக்கும் நாகப்பாம்பை பண்டிதர் ஒருவர் தினசரி அதனை வணங்கி வருவதாகவும் சொல்லுகிறார்கள்.

ஒரு வலைத்தளத்தில் இதனை பாட்டில்பிரஷ் என்று எழுதியிருக்கிறார்கள். ஆனால் அது சரியான தகவல் இல்லை எனத் தெரிகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்பருத்திக் குன்றத்தில் உள்ள வர்த்தமானீஸ்வரர் ஆலயத்தின் ஸ்தலவிருட்சமும் இதுதான்.   

அடர்ந்த குரா மரங்கள் நிறைந்த வனப்பகுதி வேடன் ஒருவன் வேட்டைக்குப் போனான்.  வெகுநேரம் ஆகியும் வேட்டை எதுவும் கிடைக்கவில்லை.  கடைசியாக அவன் ஒரு வேங்கைப் புலியைப் பார்த்தான்.  அதனைத் துரத்திக் கொண்டே போனான்.  அந்தப் புலி ஒரு குரா மரத்தின் பின்னால் ஒடிப்போய் மறைந்து  போனது.  சற்று நேரத்தில் அங்கு ஒரு மயில் ஒன்று வந்து அமர்ந்தது.  அங்கு விபூதி வாசனையும் வீசியது.  முருக பத்தனான அந்த வேடன்.  அந்த இடத்தில் ஒரு முருகன் சிலையை பிரதிஷ்டை செய்து வணங்கினான்.  அந்த இடம்தான் பின்னாளில் விராலிமலை முருகன் கோவிலாக உருவானது.  திருச்சியிலிருந்து மதுரை போகும் வழியில் உள்ளது விராலிமலை.  இன்றும் கூட> விராலிமலைப் பகுதியில் ஏகப்பட்ட மயில்கள் உள்ளன. குரா மரங்கள்கூட இன்னும் இருக்கலாம்.

விராலிமலை முருகனை வேண்டிக் கொண்டால்> தீராத நோய்களிலிருந்தும் தீர்க்கமான விடுதலை பெறலாம்.  குழந்தைகளுக்கு நோய்கள் வரக்கூடாது என்று வேண்டுபவர்கள், தங்கள் குழந்தைகளை குரா மரத்தடி முருகனுக்கு தத்துக் கொடுப்பது வழக்கம்.  அப்படி தத்து கொடுத்த குழந்தைகளை, குழந்தைகளின் தாய்மாமன், தவிடு கொடுத்து குழந்தையைப் மீளப்பெற்றுக் கொள்வார்.  அப்படிப் செய்வதால், அந்த குழந்தைக்கு ஆயுள் விருத்தி ஆகும். நோய்நொடி வராது  என்பது நம்பிக்கை.

அதுமட்டுமல்ல புதிதாக வீடு மற்றும் மனை வாங்குபவர்களும் குரா மரத்து வீராலிமலை முருகனை வேண்டிக் கொண்டால் அது வில்லங்கம் இல்லாமல் முடியும்.

குரவம்,  குருந்தம், குரா, குரவு, என்பவை எல்லாமே ஒன்றுதான்,  என்கிறது தமிழ் இலக்கியம்.  இதைத்தான் பயினி வானி பல்லிணர்த் குரவும் என்று. கபிலர் சொல்லும் குரவும் இதுதான் என்கிறார்கள்.  இதனை அடலான்ஷியா மிஷனிஸ்(ATALANTIA MISSIONIS) என்று தாவரவியில் பெயரிலும் அழைக்கிறார்கள்.

விராலிமலை முருகள் ஆலயம். திருச்சியிலிருந்து மதுரை செல்லும் வழியில், திருச்சியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.  இந்த நகரத்தின் மிக அருகாமையில் ஒரு ரயில்நிலையம் உள்ளது.  விராலிமலையில் மிகப்பெரிய ஒரு பாறையின் மீது அமைந்துள்ளது இந்த முருகன் ஆலயம். பஸ்,  ரயில் மற்றும் விமானம் மூலம் விராலிமலை செல்லலாம்.

மிகவும் சக்திமிக்க முனிவர்கள் மற்றும் யோகிகள் குரா மரங்களாக இந்தத் தலத்தில் இருந்து முருகனை வழிபட்டு வந்துள்ளனர் என்று சொல்லுகிறார்கள்.

விராலிமலையின் அடிவாரத்தில் சரவணப் பொய்கையும்,  ஸ்தலவிருட்மும் அமைந்துள்ளன.  விராலிமலையின் ஸ்தல விருட்சம் காசி வில்வம். 

சரவணப்பொய்கையில் முருகப்பெருமான் குழந்தையாக இருந்தசமயம் அவருக்கு அமுதூட்ட மறந்ததனால்> வசிஸ்டர் தனது மனைவி அருந்ததியை சபித்தார்.  அதனால் கோபமடைந்த முருகன் முனிவரை சபித்தார்.  இருவருமே முருகனை வணங்கி வழிபட்டு விராலிமலையில்தான்; சாப விமோசனம் அடைந்தனர்.  அதேபோல கஷ்யப்ப முனிவர்> நாரத முனிவர் ஆகியோரும் விராவிமலை முருகனை வணங்கி சாபவிமோசனம் பெற்றார்கள் என புராணங்கள் சொல்லுகின்றன. 

இங்கு வித்தியாசமான வழிபாட்டு முறை வழக்கத்தில் உள்ளது.  கோவில்களில் சாதாரணமாக, பூக்கள்,  கனிகள், வாசனைத் திரவியங்கள் வைத்து வழிபடுவது வழக்கம். ஆனால் விராலிமலை முருகனுக்கு சுருட்டு வைத்து வழிபடும் பழக்கம் இங்கு உள்ளது. 

சிறு தெய்வ வழிபாட்டு முறைகளில்; கோழி, ஆடு, மாடு, எருமை என்று பலியிடும் வழக்கம் இருந்து வருகிறது.  இன்னும் சில கோவில்களில் சாராயம்கருவாடு,  சுருட்டு போன்றவை வைத்து வழிபடுவது வழக்கம்.  அய்யனார், முனீஸ்வரன், மதுரை வீரன் போன்ற சிறுதெய்வங்களின் கோவில்களில் இது போன்ற படையல்களை நான் பார்த்திருக்கிறேன்.

இதனை டெரினா ஏசியாட்டிகா (TARENNA ASIATICA) என்ற பெயரிலும் அழைக்கிறார்கள்.  வலைத்தளங்களில் இது பற்றிய செய்திகள் அதிகம் இல்லை. 

சமவெளிப் பகுதிகள் மற்றும் கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் வரை உயரமான பகுதிகளிலும் இவை வளருகின்றன. அசாம்> மற்றும் மகாராஷ்ட்டிராவில் இந்த மரங்கள் இருப்பதாகக் தெரிகிறது.  காராஷ்;ட்ராவில் குரா என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. 

இதன் இலைகள், பழங்கள், வேர், ஆகியவற்றை மருந்தாக பயன்படுத்துகிறார்கள். இதன் பழங்களின் தசையைக் கூழாக்கி அதனை உடலில் ஏற்படும் கட்டிகளின்மீது தடவி குணப்படுத்துகிறார்கள்.  இலைச்சாறு இலைச்சாந்து ஆகியவற்றைப் பயன்படுத்தி தோலில் ஏற்படும் சொறிசிரங்குகள், நமைச்சல் போன்றவற்றை சரி செய்கிறார்க்ள்.

இதுபற்றிய கூடுதலான விவரம் தெரிந்தவர்கள் அன்பு கூர்ந்து எனக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். 

(WWW. LINK.SPRINGER.COM – “TARENNA ASIATICA’), WWW.MURUGAN.ORG -- முருகன் ஆலயங்களில் புனித மரங்கள்> (WWW.INDIAN MEDICINAL PLANTS.INFO “INDIAN MEDICINAL PLANTS), WWW.PEYARINBAM.BLOGSPOT.COM - தமிழ் இலக்கியம்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...