Thursday, July 6, 2023

KUMQUAT MINI ORANGE NUTRITIOUS FRUIT TREE 239. கும்குவாட் பழத்தில் இம்புட்டு சத்துக்களா ?


கும்குவாட்  பழத்தில் 
இம்புட்டு சத்துக்களா ?

 
தொட்டியிலும்
வளர்க்கலாம்

பொதுப்பெயர்: கும்குவாட்  பழமரம் (KUMQUAT FRUIT TREE)

தாவரவியல் பெயர்: ஃபார்ச்சுனெல்லா மார்கரிட்டா (FORTUNELLA MARGARITA)

தாவரக்குடும்பபம்: ரூட்டேசி (RUTACEAE)
கும்குவா
ட் பழங்கள் பெயரை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை. சாப்பிட்டதில்லை. நேற்றுதான் பார்த்தேன். நேற்றுதான் சாப்பிட்டேன்.சூப்பராக இருந்தது.இதில் ஆச்சரியம் என்னவென்றால் என் தோட்டத்திலேயே இந்த கும்குவாட்டி இருக்கிறது. நான் அதனை எலுமிச்சை என நினைத்திருந்தேன். அது காய்த்து பழுத்த பின்னால் தான் அதனை நான்தான் கும்குவாட்டி என என்னிடம் அது அறிமுகம் செய்து கொண்டது. நான் கும்காட்டின் பரம ரசிகனாகி விட்டேன்.

சக்தி மிக்க ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகள், வைட்டமின் சி, பிளேவனாய்டுகள், வைட்டமின் ஏ, நார்ச்சத்து, பைட்டோ நியூட்ரியண்ட்ஸ், கால்சியம், மக்னீசியம், நிறைந்தது, இதயம் எலும்புகள் மற்றும் தோலின் ஆரோக்கியத்திற்கு உதவுவது, ரத்த சர்க்கரையை குறைப்பது, நோய் தடுப்பு சக்தியை அதிகரிப்பது, உடல் எடையைக் குறைப்பது, கேன்சர் செல்கள் உருவாவதைக் கட்டுப்படுத்துவது, இத்தனையும் உள்ளடக்கி ஒரு பழத்தின் பெயர் தான் கும்குவாட் மினி ஆரஞ்சு பழம். இத்தினியோண்டு பழத்தில் இம்புட்டு சத்துக்களா ?

உணவாக எப்படி உபயோகமாகும் ?

பழமாக சாப்பிட, சட்டினி,ர்மலேடுகள், சாஸ், மரினேட், ஜாம், ஜெல்லி சாலட் துண்டுகள் இப்படி பலவகை உணவுகளாக பயன்படுத்தலாம்.

தோலை உறிக்காமல் சாப்பிடும் ஆரஞ்சு

வழக்கமாக பழங்களில் தோல் சுவையாக இருக்காது. பழத்தின் உட்புற சுளைதான் இனிப்பாக இருக்கும். பழங்களின் தோல் இனிப்பாக இருக்கும். சுளை புளிக்கும். பழங்களில் தோலை உறிக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே சாப்பிடலாம். உள்ளே இருக்கும் விதைகளை பற்றிகவலைப்பட வேண்டாம்.

கும்குவாட் பழங்கள்  மஞ்சள் நிறமாக இருக்கின்றன. பார்க்க சிறிய சைஸ் சீமை இலந்தை மாதிரி இருக்கின்றன. ஆரஞ்சு வாசம். 2 1/2 சென்டிமீட்டர்  நீளம் உள்ள சிறிய பழங்கள். குளிர்ப்பருவத்தில் காய்க்கும், ஒரே மரத்தில் ஒரு பருவத்தில் நூற்றுக்கணக்கான பழங்கள் காய்க்கும், 

கும்குவாட் சீன தேசத்து ஆரஞ்சுப்பழம் தென்கிழக்கு சீனாவிற்கு சொந்தமான பழம் இது. டேங்க் மற்றும் சாங் டைனாஸ்டிகளில் சீனாவில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமாக இருந்தது, அங்கு இதனை தங்க ஆரஞ்சு என்று சொல்லுகிறார்கள்.

சர்க்கரை நோய்க்கு இது மருந்தா 

ஒரு பழத்தில்  கலோரிச்சத்து 63 உள்ளது. மேலும் கும்குவார்ட் பழங்களில் ஏகப்பட்ட நார்ச்சத்து உள்ளது. அதனால் இந்த பழங்கள் டைப் 1 மற்றும் டைப் 2 சர்க்கரை உள்ளவர்களுக்கு இது வரப்பிரசாதம் என்று சொல்லுகிறார்கள்.

குழந்தைகள் கும்குவாட் பழங்களை சாப்பிடலாமா 

இந்தப் பழங்களில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. அதனால் இது குழந்தைகளின் நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

தலைமுடி ஆரோக்கியத்திற்கு இது உதவும். பழங்கள் சாப்பிட்டால் உங்கள் தலையில் பொடுகு தொல்லை வராது. பொடுகுனை ஏற்படுத்தும் சீபம் என்னும் பூசண  உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது.

தென்னிந்தியாவின் உயரமான மலைப் பகுதிகளில் இந்த பழ மரங்களை வளர்க்கிறார்கள்.

கும்குவாட் மரங்களின் வளரியல்பு 

8.2 முதல் 14.8 அடி உயரம் வரை வளரும் சிறு மரங்கள். முள் இல்லாதது. சில சமயம் சிறுசிறு முட்கள் இருக்கும். பழங்கள் மஞ்சள் நிறத்தில் சிறிய கோள வடிவில் இருக்கும். இரண்டரை முதல் ஐந்து சென்டிமீட்டர் விட்டமுடைய பழங்கள் இனிப்பும் புளிப்பும் கலந்து சுவையாக இருக்கும்.

கும்குவாட் பழங்களில் புரதம் 2 சதம், கொழுப்பு 1 சதம், மாவு பொருட்கள் 16 சதம், கலோரிச்சக்தி 73, மற்றும் நீர் 81 சதம், வைட்டமின் சி தினசரி தேவையில் 53 சதவீதமும் உள்ளன.

வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம்.

கொங்கு வேர்ட் பல மரங்களை வீட்டு தோட்டத்தில் வளர்க்கலாம் செடியை தொட்டி செடியாகவும் வளர்க்கலாம் முழுசாசு சூரிய ஒளி கிடைக்கும் இடங்களில் இந்த பட செடிகளை வளர்க்கலாம் மண் கண்டம் வடிகால் வசதி உடையதாக இருக்க வேண்டும் என்பது

 A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

  

2 comments:

Yasmine begam thooyavan said...

ஒரு பழத்தில் இத்தனை தகவல்களா என்று பிரமிக்க வைக்கிறது. உங்களின் ஓவ்வொரு மரங்களை பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டேன். அபாரம், எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து எழுதவும். அருமை நண்பரே! வாழ்த்துக்கள்.

By
யாஸ்மின் தூயவன்
எழுத்தாளர்.

கே.நஜீமாஜமான். said...

இதுவரை தெரியாத தகவல் இந்த பழம் கும்குவாட் பற்றி தாங்கள் எழுதி இருந்த செய்தி மிகவும் பயனுள்ளதாக உள்ளது .இதை போன்று தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் நன்றி!!

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...