கழுதைமுள்ளி அலையாத்தி மரம் |
உலகின் இரண்டாவது மிகப்பெரிய அலையாத்தி காடு, 1400 எக்டரில் பரவி இருக்கும் தமிழ்நாட்டின் பிச்சாவரம் காடு தான். இது வெள்ளாறு மற்றும் கொள்ளிடம் ஆகிய முகத்துவாரங்களுக்கு இடையே
அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 39 இடங்களில்
அலையாத்தி காடுகள் அமைந்துள்ளன. பிச்சாவரம் அலையாத்தி
காட்டில் மொத்தம் 14 வகையான அலையாத்தி மரவகைகள் உள்ளன, அவற்றில்
ஒன்றுதான் இந்த கழிமுள்ளி மரவகை.
பொதுப் பெயர்கள்: ஹோலி லீவ்டு அகேன்தஸ் (HOLY
LEAVED ACANTHUS), சி ஹோலி (SEA
HOLY) ஹோலி மேங்ரோவ் (HOLY
MANGROVE).
தாவரவியல் பெயர்: அக்கேந்தஸ் இலிசிபோலியம் (ACANTHUS
ILICIFOLIUM)
தாவரக் குடும்பம்: அக்கேன்தேசி (ACANTHACEAE)
தாயகம்: இலங்கை
பல மொழி பெயர்கள்:
தமிழ்: கழிமுள்ளி, முள்ளி, முண்டகம், அல்ச்சி, கழுதைமுள்ளி,ஆத்துமுள்ளி காலுடை, கோழிமுள்ளி, உப்புக்கரி, நீர்முள்ளி (KAZHIMULLI, MULLI, MUNDAGAM, AICHI, KAZHTHAI MULLI,
ATHTHUMULLI, KALUDAI, KOZHIMULLI, UPPUKARI, NEERMULLI)
தெலுங்கு: ஆல்ச்சி (ALCHI)
மலையாளம்: பேயின்ன சுள்ளி (PEYINNA CHULLI)
கன்னடா: ஹோலி சுள்ளி (HOLY CHULLI)
ஹிந்தி:ஹெர்கட்டா (HARGHATTA)
குஜராத்தி:
ஹர்கொஜா (HARCOJA)
மராத்தி: மாராண்டி (MARANDI)
சமஸ்கிருதம்: ஹரிகுசா (HARI KUSA)
துளு: டூயட் சுள்ளி (TUDE
CHULLI)
உருது: ஹர்கதா (HAR KATA)
வளர் இயல்புகள்
சிறு மரமாக 6 முதல் 7 அடி உயரம் வரை வளரும். இதன் ஆணிவேர்கள் (TAP
ROOTS) ஆழமில்லாதது. சில சமயம் தாங்கு வேர்களுடனும் (STILT
ROOTS) இருக்கும். இதன் பழங்கள் சிறுநீரகம் போன்ற
வடிவத்தில் இருக்கும்.
இது அலையாத்தி அல்லது கண்டல் வகைத் தாவரங்களில் (MANGROVES) ஒன்று கடலோரங்களில் உள்ள உவர் தன்மை உள்ள சதுப்பு நிலங்களின் (SWAMPY LANDS)வளரும்.
மருத்துவப் பண்புகள்
இந்தியா மற்றும் சீனாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் பயன்படுத்தி
வருகிறார்கள்..
இதன் இலைகள், மற்றும் இளம் தண்டுகள், பாம்பு கடி சிகிச்சைக்கு உதவுகிறது.
இதன் வேர்களை ஆஸ்துமாவுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்துகிறார்கள். இதன் வேருடன்
பால் சேர்த்து கொதிக்க வைத்து வெள்ளைப்படுதலுக்கு
சிகிச்சை அளிக்கிறார்கள்.
இதன் இலைகள், விதைகள், வேர்கள், தண்டுகள், எல்லாமே மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுகின்றன.
பரவி இருக்கும் இடங்கள்
தெற்கு ஆசியா முழுக்க பரவி இருக்கின்றது. இந்தோசைனா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளது.
இன்ன
பிற செய்திகள்:
இலங்கையில் புங்குடு தீவில் இருக்கும் கழுதைப்பிட்டி என்ற இடம் இதன் சொந்த ஊர் என்பதால் இதற்கு கழுதைபிட்டி மரம் என்ற பெயரும்
உண்டு.
அலையாத்தி மரங்களில் முக்கியமான மூன்று பிரிவுகள் உள்ளன. அவை சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை அலையாத்தி மரவகைகள்.
அக்கந்தேசி தாவர குடும்பத்தில் ஏறத்தாழ 4000 தாவர இனங்கள் உள்ளன. இவை
வெப்பமண்டலம் மற்றும் மித வெப்பமண்டலப் பகுதிகளில் வளருகின்றன. இவற்றில் பெரும்பாலான தாவரங்கள் சிறு செடிகள், சிறு மரங்கள், கொடிகள்
மற்றும் பெருமரங்களும் கூட இதில் அடங்கியுள்ளன. இவை பெரும்பாலும் வெப்பமண்டல சதுப்பு
நில பகுதிகளுக்கு உரியவை.
இந்த அலையாத்தி மரம் பற்றிய
வேறு சுவையான தகவல் உங்களுக்கு தெரிந்திருந்தால் எனக்கு சொல்லுங்கள்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
2 comments:
Very useful details about one of the mangrove trees. Recently, state and Central Govts together together started efforts to plant mangrove forests near kovalam shores. Awareness about mangrove forests and its immense contributions towards ecology would help to safeguard our seashore and millions of people living nearby the sea.
Dr. P G Prabakaran
Thank you so much for your valuable comments sir, I have planned to write some more similar articles on our Mangrove species.
Regards
Gnanasuria Bahavan D
Post a Comment