Friday, July 21, 2023

JABOTICABA TREE GRAPES OF BRAZIL 266.திராட்சை பழ மரம் ஜபோட்டிகாபா

 

திராட்சை பழ மரம்
ஜபோட்டிகாபா

மரமே பழமாக மாறி நிற்கும் மரத்தின் பெயர் பிரேசில் நாட்டின் திராட்சைப் பழ மரம், போட்டிகாபா என்பது. அந்தமரம்  அடிமரம் முதல் நுனி மரம் வரை காம்புகள் இல்லாமல், மரத்திலேயே பழங்களை ஒட்டி வைத்திருப்பது மாதிரி இருக்கும். பார்க்க நம்ம ஊர் நாவல் பழம் மாதிரி தோன்றும், கர்னாடக மற்றும் கேரளாவரை செடிகள் விற்பனைக்கு வந்துள்ள பழமரம், கொஞ்சம் அமிலத்தன்மையும் வடிகால் வசதியும் மண்ணில் வளரும் மரம்,  முதுமை அடைவதை தள்ளிப்போடவும்,  நமது உடலில் கேன்சர் திசுக்கள் உருவாகாமல் தடுப்பதற்குமான தாவர ரசாயனங்களைக் கொண்ட மரம், இந்தியாவில் புதிய பழமரமாக அறிமுகமாகி இருக்கும் மரம்.    

இதன் தாவரவியல் பெயர், ப்ளைனியா காலிப்ளோரா (PLINIA CAULIFLORA)

இது பார்க்க நாவல் பழம் மாதிரி இருந்தாலும் இதனை பிரேசில் நாட்டின் திராட்சை மரம் என்கிறார்கள்.முக்கிய கிளைகளில் அடிமரத்தில் பெரும் கிளைகளில் இடைவெளி இல்லாமல் அடுக்கி வைத்து அலங்காரம் செய்த மாதிரி காய்க்கும். ஆங்கிலத்தில் இதனை பிரேசிலியன் கிரேப் ஃப்ரூட் (BRAZILIAN CRAB FRUIT)என்கிறார்கள்.

இதன் தாவரக் குடும்பம், மிரட்டேசி (MYRTACEAE), நம்ம ஊர் நாவல் பழம் கூட இந்த தாவரக்குடும்பம் தான்.

வெப்பமண்டல, மற்றும் மிதவெப்பமண்டலப் பகுதி பழமரம். இது வெப்பமான பகுதிகளிலும் மிக வெப்பமான பகுதிகளிலும் வளரக்கூடியது. இது அநேகமாக இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டின் தட்பவெட்ப நிலையில் இந்த நன்றாக வளரும் என தெரிகிறது.

தோல் தடிமனான பழங்கள். நம்ம ஊர் நாவல் பழத்தின் தோல் மெல்லியதாக இருக்கும். ஆனால் ஜபோட்டிக்காபா பழங்களின் தோல் கடினமானதாக இருக்கும், தடிமனாக இருக்கும். பழங்கள் எல்லாம் அடர்த்தியான ஊதா நிறத்தில் அல்லது கருப்பு கலந்த ஊதா நிறமா இருக்கும். பழத்தசை மட்டும் வெண்மையாக இருக்கும்.

படங்களை அப்படியே பறித்தும் சாப்பிடலாம். பதப்படுத்தலாம், வைத்திருந்து சாப்பிடலாம். பீர் பிராந்தி ஒயின் இப்படி சாராய வகை மதுபானங்களைத் தயாரிக்கும் தொழில் தொடங்கலாம்.

இந்த பழங்களில் நிறைய சத்துக்கள் இருக்கு, குறிப்பாக தாது உப்புக்கள் நிறைய இருக்கு, கால்சியம் பாஸ்பரஸ் பொட்டாசியம், நிறைய இருக்கு. அதோடு அமினோ அமிலங்களும் கணிசமான அளவு இருக்கின்.

இந்த திராட்சைப்பழ மரம் ஜபோட்டிகாபா பிரேசில் அர்ஜென்டினா மற்றும் பொலிவியா, மற்றும் சாவ்பவ்லோ உட்பட நான்கு மாநிலங்களில் பிரேசலில் பரவியுள்ளது.

வளரியல்புகள்

இதற்கு ஏற்ற மண் கண்டம் ஆழமாக இருக்க வேண்டும். டிகால் வசதி அவசியம் வேண்டும். மண்ணில் கூடுதலான அங்கக்ச் சத்து வேண்டும். கொஞ்சம் அமிலத்தன்மை உடைய நிலமாக இருக்கலாம், அப்படி என்றால் மலையடிவாங்கள் பொருத்தமாக இருக்கும் எப்போதும் ஈரமான மண் கண்டம் வேண்டும், ஆனால்  நீர் தேங்காமல் இருக்க வேண்டும்.

வெப்பம் 26 டிகிரி பாரன்ஹீட் குறையக்கூடாது, அதாவது சென்டிகிரேட் என்றால் அதன் வெப்பநிலை 3.3 போகக் கூடாது. விதைகளை விதைத்தும் ஒட்டுக்கட்டியும் புதிய மரங்களை உருவாக்கலாம். விதை மூலம் உற்பத்தி செய்யும் மரங்கள் 8 முதல் 10 ஆண்டுகளில்தான் காய்க்கும். அநேகமாய் ஒட்டு கட்டிய மரங்கள் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் பழங்கள் தர ஆரம்பிக்கும்.

ஜெபோட்டிகாபா சிறிய மரங்கள் தான். இவை பத்து முதல் 25 அடி உயரம் வளரும். பல அடிமரங்களை உடைய மரமாக வளரும். மெல்ல வளரும் மரம், சில இடங்களில் 45 அடி உயரம் கூட வளரும். இந்த மரங்களின் தலைப்பகுதி குருவித்தலையில் பனங்காய் வைத்த மாதிரி ந்தும் விரிந்தும் பெரிதாக இருக்கும்.

பழங்களின் அறுவடையின்போது இந்த மரங்கள் அடி முதல் நொடி வரை புது மணப்பெண் போல தன்னை பழங்களால் அலங்கரித்துக் கொண்டிருக்கும். இந்த பழமரம் தென்அமெரிக்காவுக்கு சொந்தமான மரம், ஆனால் குறிப்பாக அர்ஜென்டினா மற்றும் பிரேசில் நாட்டுக்கு சொந்தமானது.

இந்த ஜபோட்டிகாபா பங்களின் தோல் கொஞ்சம் தடிமனாக இருக்கும்,ரித்துவிட்டு சாப்பிடலாம். தோல் கொஞ்சம் கசப்பாக இருக்கும். பழத்தசை ஊதா அல்லது வெள்ளை நிறமாக இருக்கும். பழத்திற்குள் நிறைய பெரிய பெரிய விதைகள் புதைந்து இருக்கும்.

ஜெபோட்டிகாபா மரங்கள் 20 முதல் 22 ஆண்டுகள் வரை பலன் தரும். காய்க்க ஆரம்பித்த பின்னால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பூத்து காய்க்கும் இந்த பூக்களும் மரத்தின் அடி முதல் மணி வரை காம்புகள் இல்லாமல் நேரடியாக பூக்கும். இதன் பூக்களில் இளம் பசுமை நிறமாக இருக்கும். காய்கள் பளிச்சென்று அடர்த்தியான பச்சை நிறமாக இருக்கும். பழங்களாக மாறும்போது அழகான ஆழமான ஊதா நிறமாக மாறிவிடும்.

ஆரோக்கியம் தரும் முக்கிய பழங்களின் வரிசைகளில் போட்டிகாபா பழங்கள், முதல் வரிசையில்  உள்ள பழம் என்கிறார்கள். இந்தப் பழங்கள் குறைவான கலோரிச்சத்து கொண்டது, கேன்சர் திசுக்களை அன்ண்டவிடாது. தற்கான தாவர ரசாயனங்களை கொண்டவை இந்த பழங்கள். இதில் உள்ள கார்போஹைட்ரேட்டு ரொம்ப குறைவு. புரதத்சத்து அதிகம், கால்சியச்சத்து அதிகம், இரும்புச்சத்து அதிகம், வைட்டமின் சி மிக அதிகம், ஆன்டி-ஆக்சிடென்ட்கள் அதிகம்.

இன்னொரு முக்கியமான செய்தி முதுமை அடைவதை தள்ளிப்போடும். சீக்கிரம் வயசாகாது, அறுபதிலும் இருபது மாதிரி சுறுசுறுப்பாய் உழைக்கலாம், ஒரு நாளில் 16 மணி நேரம் ஆக்கப்பூர்வமாக உழைக்கலாம், அதற்கான  தாவர ரசாயனங்கள் இதில் உள்ளன.

முக்கியமான ஒரு செய்தி இது ஒரு வியாபார ரீதியில் ஆன பழம் ஜாம் ஜெல்லி சீஸ் கேக்குகள் ஜூஸ் அத்தனையும் தயார் செய்யலாம். அவ்வளவு ஏன் பீர் பிராந்தி உயிர் என்று மது வகைகள் கூட தயார் செய்யலாம். இந்த பழங்களை மதிப்பு கூட்டுவதன் மூலம் சிறிய தொழிலும் செய்யலாம், பெரிய தொழிலும் செய்யலாம், ஏன் ஏற்றுமதி கூட செய்யலாம், இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? உங்கள் கருத்தை சொல்லுங்கள், அல்லது பதிவிடுங்கள்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

                     999999999999999999999999999999999999999 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...