இறம்பாலை கருங்காலி பழ மரம் |
தாவரவியல்
பெயர்: டையோஸ்பைரஸ் ஃபெர்ரியா (DIOSPYROS FERREA)
பொதுப்பெயர்: பிளாக்
பெர்சிமான் (BLACK PERSIMMON)
இறம்பாலை பழ மரம் ஒருவகையான கருங்காலி மரம் (EBONY TREE). இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கு சொந்தமான மரம். இது ஒரு பழமரமும் கூட. எபனேசி தாவரக் குடும்பத்தில் பழம் தரும் மரங்களை பெர்சிமான் மரங்கள் என்கிறார்கள். அப்படி பழம் தரும் கருங்காலி மரம்தான் இது. உள்ளூர் மக்களுக்கு உணவாகிறது. கயிறு திரிக்க நார் தருகிறது. தரமான உறுதியான மரச் சாமான்கள் செய்ய மரம் தருகிறது. இதன் பொதுப்பெயர் கருப்பு பெர்சிமான் (BLACK PERSIMMON) என்பது
பலமொழிப் பெயர்கள்:
கன்னடா:
(KARUGANA)
மலையாளம்:
(IRUMBALI)
தமிழ்:
(IRUMBALI, IRAMPALLI, IRAMPALAI)
தாவரக் குடும்பம் (EBENACEAE)
சொந்த
ஊர்: இந்தியா முதல் தென்மேற்கு பசிபிக் வரை உள்ள பகுதிகள், வெப்ப
மண்டல ஆப்பிரிக்கா
இது எபனேசி எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. மரங்கள் மற்றும் குறுஞ்செடிகளைக் கொண்டது. இந்த எபனேசி தாவரக் குடும்பம். எல்லாமே பூக்கும் தாவர வகைகளைக் கொண்டது. இதில் எபனி (EBONY) மற்றும் பெர்சிமான்(PERSIMMON) என இரு வகைகளாக இதனைப் பிரித்து சொல்லுகிறார்கள். எபனேசி தாவர குடும்பத்தில் மொத்தம் 768 தாவர வகைகள் உள்ளன.
இவற்றில்
பெர்சிமான் வகைகள் எல்லாம் பழ மரங்கள். எபனி எல்லாம் மரக்கட்டைகளுக்கான
(TIMBER)பிரிவு, தண்ணீரில் போட்டால்
முழுகக்கூடிய கட்டைகள், இழைத்தால் இதன் மரங்களில் முகம் பார்க்கலாம், கண்ணாடி மாதிரி பளபளப்பாக மாறிவிடும். இதனை கருங்காலி மரங்களை அழகு மரங்கள் (ORNAMENTAL TIMBER) என்று
வர்ணிக்கிறார்கள்.
இறம்பாலை கருங்காலி பழமரங்கள் அதிகம் பரவி இருக்கும் இடங்கள் ஆப்பிரிக்கா, ஆசியா,
நியூமினியா வடக்கு ஆஸ்திரேலியா மற்றும் வடக்கு பசிபிக்
ஆகிய பகுதிகள். இவை
அனைத்தும் வெப்ப மண்டல பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
வளரிடம்
காடுகளுக்கு
அருகமைந்த வறண்ட பகுதிகள், பாறைகள் மற்றும் கற்கள் நிறைந்த நிலப்பகுதி, கடல்
மட்டத்திலிருந்து 500 மீட்டர்
வரை உயரமுள்ள தாழ்வான பகுதிகள், இந்த கருங்காலி பழ மரங்கள்
வளர ஏற்ற பகுதிகள்.
வளரியல்புகள்:
இறம்பாலை ஆண்டு முழுவதும் தழையும் தாம்புமாக
இருக்கும் மரம். மூன்று ஆள் உயரம் வரை வளரும், மரங்களின் குறுகளவு சுமார் ஒன்றரை அடி
இருக்கும்.
உள்ளூர்
மக்களுக்கு இறம்பாலை மரங்களின் பழங்கள் இனிய உணவாகிறது. நல்ல
தரமான மரம் தருகிறது. இந்த மரங்களை விற்பனையும் செய்கிறார்கள்.
சீனாவில்
ஒரு சமயம் இதனை சாகுபடி கூட செய்திருக்கிறார்கள் இதில் ஆண் பெண் மரங்கள்
தனித்தனியாக இருக்கும், ஆண் பனை பெண் பனை மாதிரி. இறம்பாலையிலும் இப்படி தனித்தனியாக
மரங்கள் இருக்கின்றன. இறம்பாலை பழங்கள் விதைகள் வேண்டுமென்றால்
நீங்கள் ஆண் பெண் ஆகிய இருவிதமான மரங்களையும் வளர்க்க வேண்டும்.
பழங்கள்
நன்கு கனிந்த அல்லது முதிர்ந்த இறம்பாலையின் பழுத்த பழங்களை சாப்பிடலாம். இதன் மேல் தோல் ஓடுகள் போல இருக்கும். இந்த
இறம்பாலை பழங்களை தென்னிந்தியாவின் பஞ்சகால உணவு
என்று சொல்லுகிறார்கள். பழுத்த பழங்கள் கருப்பு அல்லது சிவப்பு நிறமாக தொட்டால் மெத்தென
இருக்கும்.
கருங்காலி
மரங்கள் கருப்பாக இருக்கும். இதன்
வைரப் பகுதி மரத்தின் மையப்பகுதி கன்ன்ங்கரேல் என இருக்கும், வலுவானவை, உறுதியானவை, கனமானவை, மரங்களில் முதல் தரமானவை, நீண்ட காலம் உழைக்கக் கூடியவை.
தரமான
விலை உயர்ந்த மரச் சாமான்கள் செய்ய ஏற்ற மரம். இந்த
மரத்தில் செய்த மரச்
சாமான்களை கண்ணை மூடிக்கொண்டு சொன்ன விலை தந்து வாங்கிக் கொண்டு போவார்கள்.
மரங்களில் கருப்புக்கு விலை அதிகம். மதிப்பு அதிகம். மவுசும் அதிகம்.
பெட்டிகள், கைத்தடிகள், கடைசல் செய்த கலை அம்சம் பொருந்திய அழகிய பொருட்கள்,
படகுகளுக்கான நங்கூரங்கள், கருவிகளுக்கான கைப்பிடிகள், ஆயுதங்கள் வைப்பதற்கான பெட்டிகள், இப்படிப் பலவகை பொருட்களையும் இந்த மரத்தில் செய்யலாம்.
புதிய
செடிகள், பழங்களிலிருந்து எடுத்த புதிய விதைகளை, நாள்
கடத்தாமல் உடன் விதைக்க வேண்டும். விதைகளில் ஓட்டிக்கொண்டிருக்கும்
பழத்தின் தசைப் பகுதியை
முழுமையாக நீக்கிவிட்டு பின்னர் விதைக்க வேண்டும். இதன்
விதைகள் விதைத்த ஒரு வாரத்தில் முளைக்க தொடங்கும். இறம்பாலையின்
இளஞ்செடிகள் மெல்ல தான் வளரும்.
இறம்பாலை கருங்காலி பழமரம் பற்றிய புதிய செய்திகள் அல்லது சந்தேகம்
இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். இப்படி தொடர்ந்து புதுப்புது செய்திகளோடு
மரங்கள் பற்றி எழுதுவது பயனுடையதாக இருக்கிறதா
என்று உங்கள் கருத்துக்களை எனக்கு சொல்லுங்கள்.
உபயோகம்
இல்லாத காரியத்தை உருப்படி இல்லாமல் செய்து கொண்டு இருக்கிறீர்கள், உடனே
நிறுத்துங்கள் என்று சொல்ல சொன்னால் கூட நான் நிறுத்த தயாராக இருக்கிறேன்,
சொல்லுங்கள் தயவுசெய்து.
அல்லது
ஊதுகின்ற சங்கை தொடர்ந்து ஊதிக் கொண்டே இருங்கள் அது விடியும் போது விடியட்டும்
என்று சொல்லப் போகிறீர்களா ? இருந்தாலும் எதுவாக இருந்தாலும் அன்புகூர்ந்து சொல்லுங்கள்.
நன்றி வணக்கம்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment