Tuesday, July 4, 2023

INDIA'S SACRED NILGRIS RUTHRATCHAM 226. இந்தியாவின் புனிதமான மரங்களில் ஒன்று நீலகிரி ருத்ராட்சம்

 

புனிதமான மரம்
நீலகிரி ருத்ராட்சம்


NILGIRIS RUTHRATCHAM

தாவரவியல் பெயர்: எலியோகார்ப்பஸ் ரீகர்வேட்டர்ஸ் (ELAEOCARPUS RECURVATUS)

தாவரவியல் பெயர் எலியோகார்ப்பேசி (ELEOCARPACEAE)

பொதுப்பெயர்: நீலகிரி ருத்ராட்சம்

பிறமொழி பெயர்கள்:

தமிழ்: நீலகிரி ருத்ராட்சம்

மலையாளம்: ருத்ராட்சம்,சோழ ருத்ராட்சம்.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அழிந்து வரும் மரம் அல்லது அருகி வரும் மரம் என்று அறிவித்துள்ளார்கள். நன்கு வளர்ந்த மரம் 13 மீட்டர் உயரம் வரை வளரும். இந்தியாவில் மட்டுமே காணப்படும் இந்திய மரம் இது.

எலியோகார்பஸ் தாவர குழுமத்தில் உள்ளவை பெரும்பாலும் வெப்ப மண்டல மற்றும் மிக வெப்ப மண்டல பகுதிகளில் வளரும்.

இந்த தாவர குழுமத்தில் 350 வகையான தாவர வகைகள் உள்ளன. இதை மடகாஸ்கர் முதல் இந்தியா வரை பல நாடுகளில் பரவியுள்ளன. இவற்றில் பெரும்பாலான தாவர வகைகளில் பழங்கள் கவர்ச்சிகரமான முத்துக்கள் போல பல வண்ணங்களில் காணப்படும்.

டார்ஜிலிங் மற்றும் சிக்கிம் பகுதிகளில் இந்த வகை மரங்களின் பழங்களில் ஊறுகாய் மற்றும் சட்னி தயார் செய்கிறார்கள்.

இதன் விதைகளை ருத்ராட்சமாக பயன்படுத்துகிறார்கள். இந்து மதத்தில் இதன் விதைகள் மற்றும் மரங்களை புனிதமானவைகளாக கருதுகிறார்கள்.

எலியோகார்பஸ் என்றால் கிரேக்க மொழியில் ஆலிவ் பழங்களைப் போன்றவை என்று அர்த்தம். இந்தியாவில் இந்த வகை மரங்கள் பெரும்பாலும் தென்னிந்தியா மற்றும் வடகிழக்கு இந்தியாவில் காணப்படுகின்றன.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...