Saturday, July 22, 2023

INDIAN TREE GLOBALLY REPUTED HERB NARUVILI 271.இந்திய நறுவிலி சர்வதேச மூலிகை மரம்

 

இந்திய நறுவிலி
சர்வதேச மூலிகை மரம்

இந்தியாவின் மொத்த மூலிகைகள் மூவாயிரம். உலக அளவில் மொத்தம் 72 ஆயிரம் தாவரங்களை மருத்துவ சிகிச்சைக்காக பயன்படுத்துகிறார்கள். அவற்றில் இந்தியாவின் பங்கு மட்டும் 3000.அவற்றில் ஒன்றுதான் இந்த இந்திய நறுவிலி.நறுவிலியின் இலைகள் பழங்கள்பட்டைகள்விதைகள் ஆகியவை பல நூறு ஆண்டுகளாக மருந்தாக பயன்படுத்தி வருகிறார்கள்.

தாவரவியல் பெயர்:  கார்டியா   டைகாட்டமா (CORDIA DICHOTAMA)

தாவரக் குடும்பம்: போரோஜினேசி (BOROGINACEAE)

தாயகம்: இந்தியா

இந்த மரங்களைப் பற்றி ஆய்வு செய்வதற்கு முக்கியமான நோக்கம், பாரம்பரியமான இதன் பயன்பாடுகளை பதிவு செய்வது தான். இது மிகவும் அவசியமான காரியம் என்று நான் நினைக்கிறேன்.

இன்று மருத்துவ உலகில் புதுப்புது மருந்துகளை உருவாக்க காரணமாக இருப்பது நமது பாரம்பரிய அனுபவம் தான். பழங்குடி மக்கள் எப்படி அவற்றை பயன்படுத்தினார்கள் என்ற அனுபவம் தான். மருத்துவ முறைகளில் ஓரளவு பயன்படுத்தி வருகிறார்கள்.

நமது பாரம்பரிய மருத்துவத்தின் நீட்சியாக அல்லது அந்த அனுபவங்களின் மீது கட்டப்பட்ட கட்டிடங்களாக இருப்பவை தான் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் யுனானி மருத்துவம் எல்லாமும்.

இந்த பாரம்பரிய மருத்துவத்தின் அடிப்படையில் அமையாமல் செயற்கையான ரசாயனங்களை நம்பி இருப்பது தான் நவீன மருத்துவத்தின் பலவீனம்.

தற்போது நவீன மருத்துவ முறைகளும், இயற்கையை நோக்கி தங்கள் பார்வையை திருப்பி உள்ளன. அதற்குக் காரணம் தற்போது சாதாரண மக்கள் கூட இது பற்றிய விழிப்புணர்வை அதிகம் பெற்றிருக்கிறார்கள் என்பது தான். ஆக நான் பிரதானமாக இந்த கட்டுரைகள் வாயிலாக நான் பதிவு செய்ய விரும்புபவை, இந்த மரங்களில் அதன் தழைகளில், அதன் பட்டைகளில், வேர்களில், பூக்களில், பூ மொட்டுக்களில், பிஞ்சுகளில், காய்களில், கனிகளில், கனிக்கொட்டைகளில், மற்றும்  பிசின்களில் இருக்கும் மருத்துவ பண்புகள். ஒரு மரத்தின் தாவரவியல் பெயர், தாவர குடும்பம்,மொழிப் பெயர்கள் இவையெல்லாம் எழுதுவதற்கு காரணம் அந்த மரங்களை அடையாளப்படுத்துவதற்காக அந்த மரங்களை கண்டுபிடிப்பதற்காக அருகில் இருந்தால் அவற்றை பயன்படுத்துவதற்காக அவற்றின் விதைகளை பூக்களை பழங்களை சேகரிப்பதற்காக அவற்றின் கன்றுகளை உற்பத்தி செய்வதற்காக அவர்களை தோட்டங்களில் நடுவதற்காக பிறருக்கு கொடுப்பதற்காக அல்லது அவர்கள் வசிக்கும் கிராமத்தை அழகுப்படுத்த பசுமைப்படுத்த சுற்றுச்சூழலை மேம்படுத்த,அதற்காகத்தான் இதை எல்லாம் எழுதுகிறேன்.

இந்தியாவின் மொத்த மூலிகைகள் மூவாயிரம். உலக அளவில் மொத்தம் 72 ஆயிரம் தாவரங்களை மருத்துவ சிகிச்சைக்காக பயன்படுத்துகிறார்கள். அவற்றில் இந்தியாவின் பங்கு மட்டும் 3000.

இதுவரை சித்த மருத்துவர்கள் சுமார் 600 தாவரங்களையும், ஆயுர்வேதம் சுமார் 700 தாவரங்களையும் அலோபதி சுமார் 30 தாவர வகைகளையும் பயன்படுத்துவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது இந்தியா முழுக்கமும் பயன்படுத்தும் முக்கியமான மூலிகைகளில் நறுவிலி மரமும் ஒன்று. சமீபத்தில் கூட ஒரு நண்பர் நறுவிலி பற்றிய தகவல் ஏதாச்சும் சொல்ல முடியுமா என்று என்னிடம் கேட்டார். அவருக்காகவே இந்த கட்டுரையை எழுதுகிறேன் இந்த கட்டுரை கண்டிப்பா அவருடைய கைகளுக்கு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.

இதன் பொதுப்பெயர்கள் மற்றும் பிறமொழி பெயர்களை இங்கு பார்க்கலாம்.

பொதுப் பெயர்கள்:  இந்தியன்செரி, கிளெம்மிசெரி, ஃப்ராக்ண்ட்ஞ்சாக்

(INDIAN CHERRY, CLAMMY CHERRY, FRAGRANT MANJACK)

பிறமொழி பெயர்கள்:

தமிழ்:  நறுவலி, சிட்டம் (NARUVILI, SITTAM)

அசாமிஸ்: கோ போர் ஹட், பஹுபரா (GO BOR HUT, BAHABARA)

பெங்காலி: பஹுபரா  (BAHUBARA)

இந்தி: லசோரா (LASORA)  

காசி: டயங்க் மாங்(DIENG MONG)

மலையாளம்: நறுவாரி (NARUVARI)  

மணிபுரி:லம்கேலாபா (LAMKELABA)

மராத்தி: ஷேலு (SHELU)  

மிசோ: மியூக் (MIYUK)

குஜராத்தி: வாட் குண்டோ (VAD GUNDO)  

கன்னடா: டொட்டுகல்லு (DODUGALLU)  

சமஸ்கிருதம்:பகுவாரா (BAHUVARAH)  

தெலுங்கு: பங்கன் நகேரா (BANGAN NAKERA)

நறுவிலியின் மருத்துவ பண்புகள்

நறுவிலியின் இலைகள் பழங்கள், பட்டைகள், விதைகள் ஆகியவை பல நூறு ஆண்டுகளாக மருந்தாக பயன்படுத்தி வருகிறார்கள். சர்க்கரை நோய் எதிர்ப்பி, குடற்புண் எதிர்ப்பி, அழற்சி எதிர்ப்பி, நோய் எதிர்ப்பி, மற்றும் வலி நிவாரணிக்கான குணங்கள் இவற்றில் அடங்கியுள்ளன.

இதன் மூலமாக, மேக வெட்டை, தொழுநோய், இருமல், வயிற்றுப்போக்கு, செரிமானமின்மை, காய்ச்சல், மூச்சு விடுதலில் சிரமம், ஜலதோஷம் ஆகிய நோய்களை குணப்படுத்தி வருகிறார்கள். 

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது  

நறுவிலியின் இலைகள் பழங்கள் மற்றும் விதைகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உதாரணமாக இதன் இலைகளில் 12 முதல் 15 சதவீதம் புரதச்சத்தும் இரண்டு முதல் நான்கு சதம் கால்சியம் சத்தும் இதன் விதைகளில் 31 சதவீதம் புரதச்சத்தும் அடங்கியுள்ளது. 100 கிராம் பழத்தில் 35 கிராம் புரதச்சத்தும் 37 கிராம் கொழுப்பு சத்தும் அடங்கியுள்ளது.

நறுவிலி மரம் பரவி இருக்கும் இடங்கள் இந்தியாவில் இமய மலைச் சாரலில் அடிவாரத்தில் 1500 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகளில் இந்த மரங்கள் காணப்படுகின்றன.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் வறட்சியான இலையுதிர் காடுகளிலும் மகாராஷ்டிராவின் மழைக்காடுகளிலும், பிலிப்பைன்ஸ் நாட்டின் தாழ்வான உயரம் குறைந்த பகுதிகளிலும், நறுவிலி மரங்கள் அதிகம் தென்படுகின்றன.

சர்வதேச ரீதியில் சைனா, பார்மோசா, பென்சில்வேனியா பெனின்சுலார் மலேசியா, ஆஸ்திரேலியாவின் வெப்பமண்டல பகுதிகள், பாலிநேசியா, ஆகிய இடங்களிலும் நறுவிலி மரங்கள் பரவியுள்ளன..

இன்று உலகம் முழுவதும் செயற்கையான ஆன்டிபயாட்டிக் மருந்துகளைப் பார்த்து பயந்து நடுங்கும்படியான சூழலில், நறுவிலி போன்ற இயற்கை மூலிகை மரங்களுக்கு வெளிச்சம் போடுவது அவசியமாகிறது.

ஒரு தாவரத்தின் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக இருப்பவை பைட்டோ கெமிக்கல்ஸ் (PHYTOCHEMICALS)என்னும் தாவர ரசாயனங்கள் தான். பயிரோலெசிதின்,  அல்கலாய்டுகள், கல்மாரிகள், பிளேவனாய்டுகள், சப்போனின்கள், ஸ்ரீரால்கள், ஆகியவை இந்த நறுவலி மரத்திற்கு நோய்களை குணப்படுத்தும் குணங்களை அள்ளித் தருகின்றன.

பல நூறு ஆண்டுகளாக, பாரம்பரிய மருத்துவ முறைகளில் நறுவலி மரத்தின் இலை தழைகள் மற்றும் இதர பயிர் பாகங்களை பயன்படுத்தி உடல் நோய்களை குணப்படுத்தி  வந்துள்ளார்கள். 

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...