Sunday, July 2, 2023

INDIAN LAVENDER SACRED TREE OF MURUGAN TEMPLE 218. பன்னீர் மரம் திருச்செந்தூர் முருகன் கோயில் மரம்

 

பன்னீர் மரம் திருச்செந்தூர்
முருகன் கோயில் மரம்

பன்னீர் மரம் 


(INDIAN LAVENDER TREE)

தாவரவியல் பெயர்: கெட்டார்டா ஸ்பீசியோசா (GETARDA SPECIOSA)

தாவரக்குடும்பம் பெயர்: ரூபியேசி (RUBIACEAE)

பொதுப்பெயர்கள்: பீச் கார்டெனியா, சீப்ரா வுட், சீ ரேண்டியா, இண்டியன் லேவண்டர் ட்ரீ (BEACH GARDENIA, ZEBRA WOOD, SEA RANDIA, INDIAN LAVENDER TREE)

தாயகம்: இந்தியா

இந்த மரம் பல நாடுகளில் வெப்பமண்டல கடலோர பகுதிகளில் பரவி உள்ளன. அவை கிழக்கு ஆப்பிரிக்கா, ஆசியா, சிங்கப்பூர் உட்பட ஆசியாவின் வெப்ப மண்டலப் பகுதிகள,; பாலிநேசியா மற்றும் பசுபிக் தீவுகள். இந்தியாவில் இந்த மரம் தெயவீக மரமாக கருதப்படுகிறது.

பன்னீர் பூக்களுக்கு தேசிய மலராக அங்கீகாரம் தந்துள்ளது மார்ஷல் தீவுகள் என்னும் நாடு. பன்னீர் மரங்கள் 16 முதல் 30 மீட்டர் வரை உயரமாக வளரும். இதன் பூக்கள் ஆண்டு முழுவதும் பூக்கும். மாலையில் மலர்ந்து அடுத்த நாள் காலையில் உதிர்ந்து போகும்.

பன்னீர் மரத்தின் பலமொழிப் பெயர்கள்:

தமிழ்: பன்னீர் மரம், சிவகாய மரம், காசி பன்னீர் மரம், மயிலாம்பூ மரம், தெய்வப்பூ மரம் (PANNEER MARAM, SIVAKAYA MARAM, KASI PANNEER MARAM, MAYILAMPU MARAM, DEIVAPU MARAM)

தெலுங்கு: பன்னீர்செட்டு, பன்னீர் புஷ்பா (PANNEER SETTU, PANNEER PUSHPA)

மலையாளம்: ரவா பூ (RAVA POO)

சமஸ்கிருதம்: ஹின்மா (HINMA)

கன்னடம்: பிலிஹவினா லக்கி, பன்னீர் ஆலு (BILIHAVINA LAKKI, PANNEER AALU)

ஆஸ்திரேலியாவின் பழங்குடி மக்கள் தலைவலி, கை கால்வலி, போன்றவற்றை குணப்படுத்த இதன் இலைகளைப் பயன்படுத்துகிறார்கள். பன்னீர் பூக்கள் மிகுந்த வாசனையுடன் இருக்கும்.  குக்தீவுகளில் வசிக்கும் மக்கள் தலைக்குத் தேய்க்கும்  எண்ணெயுடன் வாசனைக்காக  இந்தப் பன்னீர் பூக்களைப் போட்டு வைத்துப்  பின்னர்; பயன்படுத்துகிறார்கள்.

பாலுணர்வு தூண்டும் சக்தி கொண்டது இது. இதன் இலைகள் மற்றும் பூக்களை இதற்குப் பயன்படுத்துகிறார்கள.; இதன் இலைகள் அல்லது பூக்களை தண்ணீரில் போட்டு ஊறவைத்து, வடிகட்டி பானமாக அருந்துகிறார்கள்.; பழங்குடி மக்களின் விருப்ப பானம் இது.

இதன் இலைகள் அகலமானவை நமது வாழை இலை போல அதில் உணவு பரிமாறுகிறார்கள். யூஸ் அண்ட் த்ரோ தட்டுக்களாகவும் இதன் இலைகளைப் பயன்படுத்துகிறார்கள். குழந்தைகளின் துணிகளை சுத்தப்படுத்தவும், டாய்லெட் பேப்பர் போலவும் இதனைப் பயன்படுத்துகிறார்கள.; தலைமுடிக்கு பயன்படுத்தும் கருப்பு நிற சாயமும் இந்த இலைகளில் இருந்து தயார் செய்கிறார்கள்.

 

இந்த மரங்களின் அடிமரக் கட்டைகள், பலகைகள், கம்புகள், வேர்க்கட்டைகள் அனைத்தையும்   பலவித காரியங்களுக்காக பயன்படுத்துகிறார்கள். அவை வீடுகள் கட்டுவதற்கான மரச்சாமான்கள்.  மீன்பிடி தூண்டில் கழிகள், பறவைகள் பிடிப்பதற்கான வலைகளில் பொருத்தும் கைப்பிடிகள், உயரமான மரங்களில் பழங்களை அறுவடை செய்வதற்கான நீளமான கவைக் கொம்புகள், கேனோஸ் என்னும் சிறு படகுகளைக் குடைந்து செய்வதற்கான பெரும் மரத் துண்டுகள்அதற்கான துடுப்புகள் செய்யவும் பயனாகிறது.

இதன் பழங்கள் கொத்துக் கொத்தாகக் காய்க்கும். இந்த பழங்களுக்குக் காம்புகள் கிடையாது. உருண்டையான கோலிக்குண்டுகளை போல இருக்கும். ஒவ்வொரு பழத்திலும் 4 முதல் 6 விதைகள் இருக்கும். பழங்களை தொட்டால் மெத்தென மிருதுவாக இருக்கும்.

வெப்ப மண்டலப் பகுதிகளில் இந்த மரங்கள் நன்கு வளரும். அதிலும் குறிப்பாக மணல் சாரியான, கடற்கரை பகுதிகள் இதற்கு பொருத்தமான இடம். இதற்கு நல்ல வடிகால் வசதி அவசியம் தேவை. புதிய ரகங்களை உருவாக்குவது கொஞ்சம் கடினமான காரியம். காரணம். இதன் விதைகள் முளைக்க பல மாதங்கள் பிடிக்கும்.

மரியானா என்னும் பெயருடைய பழ வ்வால்கள்  இதன் பழங்களை விரும்பி சாப்பிடும். இந்த மரங்களின் விதைகளை பல்வேறு இடங்களிலும் பரப்புவதற்கு முக்கியமான காரணமாக இருப்பவை இந்த வவ்வால்கள்தான். இந்த வவ்வால்கள்தான் பழங்களை சாப்பிட்டுவிட்டு விதைகளை தங்கள் சாணத்தின் மூலமாக பல பகுதிகளிலும் பரப்புகின்றன. அதன் மூலமாக புதிய மரக்கன்றுகள் உருவாகின்றன.

2002ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையில்  தமிழகத்தின் 1865 கோவில்களில்  தல விருட்சங்கள் பற்றிய ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் சுமார் 112 வகையான தாவர வகைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் இந்த பன்னீர் மரம்.

இந்த பன்னீர் மரம் சிவபெருமான் மற்றும் மகா விஷ்ணுவுக்கு உரிய தெய்வீகமான மரம். திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு உரிய புனிதமான மரம் இந்த பன்னீர் மரம். திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் அளிக்கும் விபூதி பிரசாதம் இந்த பன்னீர் மர இலைகளில் தான் தருவார்கள். இந்த மரத்தின் அழகான வெண்மை நிற பூக்களை அர்ச்சனை செய்வதற்காக தெய்வச் சிலைகளுக்கு மாலைகள் தயாரிக்கவும் பயன் படுத்துகிறார்கள்.

www.murugan.org/research - sacred trees in murugan temples

www.florafaunaweb.nparks.gov.sg/ Guettarda speciosa

www.tropical.theferns.info/ Guettarda speciosa

www.keys.trin.org.au/ -  Guettarda speciosa

www.ecoterritae.cpree.org – CPR Environmental Education Centre

www.scribd.com – Enthnomedicinal uses of sthalavrikshas (Temple Trees) in Tamilnadu, South India.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE  A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...