Saturday, July 1, 2023

IDALAI SNAKE BITE CURING TREE HERM 210. பாம்புக்கடி விஷம் முறிக்கும் இடலை மரம்

 

பாம்புக்கடி விஷம் முறிக்கும் 
இடலை மரம்


          (IDALAI MARAM, OLEA DIOICA, OLEACEAE, ROSE SANDAL WOOD, INDIAN OLIVE TREE, KATTU OLIVAM )

தாவரவியல் பொயர்: ஒலியா டையாய்கா  (OLEA DIOICA)

தாவரக்குடும்பம் பெயர்: ஒலியேசி   (OLEACEAE)

தாயகம்: இந்தியா

பொதுப் பெயர்கள்: ரோஸ் சேண்டல்வுட், இண்டியன் ஆலிவ் ட்ரீ, காட்டு   ஒலிவம்(ROSE SANDAL WOOD, INDIAN OLIVE TREE, KATTU OLIVAM)

பாம்புக்கடி, புற்றுநோய் உட்பட நோய்களை குணப்படுத்தும் மரம்

பாம்புக்கடி, புற்றுநோய் உட்பட நோய்களை குணப்படுத்தக் கூடிய, மேற்கு மலைத் தொடச்சிக்கு சொந்தமான, பசுமை மாறாத, மூலிகை மரம்.

பூக்கள் இலைக்கணுக்களில் பூங்கொத்துக்களாகத் தோன்றும்.  சிறிய பூக்கள், வெளிர் பச்சை நிறத்தில் பூக்கும்.  சில சமயம் லேசான ஊதா நிற சாயை தென்படும் பழங்கள், அடர்த்தியான ஊதா நிறமாக இருக்கும். 

பழங்கள் உருண்டையாக சதைப்பற்றுடன் இருக்கும்.  டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை சுமார் நான்கு மாதங்கள் பூத்துக் குலுங்கும்.  மகாராஷ்ட்ராவில் கண்டலா மற்றும் மகாயலேஷ்வர் பகுதிகளில் இந்த மரங்கள் அதிகம் காணப்படுகின்றன.

பரவியிருக்கும் இடங்கள்   

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, மற்றும், ஈரப்பசை மிகுந்த இலையுதிர் காடுகளில், இந்த மரம் அதிகம் காணப்படுகின்றன.  இந்தியாவில் குறிப்பாக, அசாம், கேரளா, மற்றும் நேப்பாளம்.

தமிழ்நாட்டில் அநேகமாய் எல்லா மாவட்டங்களிலும் பரவியுள்ளன.  அதிகம் இருப்பவை, கோயம்பத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, நீலகிரி, சேலம், தேனி மற்றும் நாமக்கல்.

கர்நாடகாவில், பெல்காம், சிக்மகளுர், கூர்க், ஹாசன், மைசூர், நார்க் கேனரா, ஷிமோகா, மற்றும் சவுத் கேனரா.

மகாராஷ்ட்ராவில், அஹமத் நகர், கோலாப்பூர், நாசிக், பூனே, நாஐ;காட், ரத்னகிரி, சத்தாரா, மற்றும் தானே பகுதியில் இந்த மரங்கள் பரவியுள்ளன.

பல மொழிப் பெயர்கள்   (IDALAI MARAM)

தமிழ்: இடலை, இடலை கோலி, கோலி பயறு   (IDALAI MARAM, IDALAI KOLI, KOLI PAYARU)

கன்னடா: எடலி, பிலிசாரலி, பார்ம்ப்   (EDALI, BILISARALI,BARJAMB)

நேபாளி: கலா கிகோன்  (KALA KIKON)

மராத்தி: பார்ம்ப்  (BARJAMB)

அசாமிஸ்: பான் - போறுகா, போரெங்  (PORUKA, PORENG)

மலையாளம்: வயலா, எடனா, இரிப்பா, வெட்டிலா, வலியா, பலரனா, கரிவெட்டி, கொருங்கு, விடனா.  (VAYALA, EDANA, IRIPPA, VETTILA, VALIYA, PALARANA, KARIVETTI, KORUNGU, VIDANA) 

இடலையின் மருத்துவப் பண்புகள்  (IDALAI MARAM)

இடலை மரத்தின் இலைகள், வேர்கள், பட்டைகள் ஆகியவை பல காலமாக மருந்தாகப் பயன்பட்டு வருகிறது.  அந்த அடிப்படையில் தற்போது ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.  அந்த ஆராய்ச்சிகள், பல்வேறு மருத்துவப் பண்புகளை உடையது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். 

அந்த வகையில் பலவகையான தாவர ரசாயனங்கள் இதன் பயிர்ப்பாகங்களில் உள்ளன.  அவை சாப்பனின்கள், பிளேவனாய்டுகள், ஸ்டீராய்டுகள், கிளைகோ சைட்டுகள், பினால்கள், மற்றும் ஸ்டீரால்கள். 

இடலை மரத்தின் பல்வேறு பயிர்ப்பாகங்களை பல மாநிலங்களில் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.

1.சித்த மருத்துவத்தில், இதன் வேர்களை பாம்புக்கடி, மற்றும் புற்றுநோயைக் குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள்.

2.மகாராஷ்ட்ராவின் பழங்குடி மக்கள் இதன் பழங்கள் மற்றும் பட்டைகளைப் பயன்படுத்தி, மூட்டுவாதம்    ஆகியவற்றை குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள்.

3.கேரள மாநிலத்தின் பழங்குடி மக்களும், பலவிதமான நோய்களைக் குணப்படுத்த இடலை மரத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

இடலை மரத்தின் மருத்துவப் பண்புகள், பாரம்பரியமாக அவற்றைப் பயன்படுத்திய விதம் பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்று ஐர்ல் ஆப் பார்மகாலஜி அண்ட் னபட்டோகெமிஸ்ட்ரி என்ற பத்ரிக்கையில் வெளியாகியுள்ளது.

கர்நாடகா மற்றும் கேரளாவில் அதிகம் பரவியுள்ளது  

தமிழில் இதனை இடலை, இடலைக் கோலி, காட்டொலிம், என எட்டு பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது.  ஆனால் கன்னடத்தில் 30 பெயர்களும் மலையாளத்தில் 18 பெயர்களும் உள்ளன.  அதனால் இந்த மரங்கள் கர்நாடகா மற்றும் கேரளாவில் மிகவும் பிரபலம் எனத் தெரிகிறது அதுமட்டுமின்றி கிழக்கு இமயமலைப் பகுதி வட கிழக்கு இந்தியா, மற்றும் நேப்பாளத்திலும் இந்த மரங்கள் பரவியுள்ளன எனத் தெரிகிறது.

ஒவியேசி தாவரக்குடும்ப தாவரவகை   (IDALAI MARAM)

 “ஒலியேசிதாவரக்குடுத்தில், 700 தாவரவகைகள் உள்ளன.  இந்தக் குடும்பத்தில் இருப்பவை பெரும்பாலும், குறுமரங்கள், மரங்கள் மற்றும் லியானாஸ்   (IDALAI MARAM)

என்பவை.  லியானாஸ் என்றால் பெருங்கொடிகள் என்று அர்திகம்.  ஓலிவ மரங்களும், மல்லிகையும் இந்த குடும்பத்தைச் சேர்ந்தவைதான்.

இடலை மரம் பிரபலமான மரம் இல்லை என்றாலும், அவற்றைத் தேடிக் கண்டுபிடித்து, நட்டுவைத்து அவற்றை பயன்படுத்திக் கொள்ளும்படியான மூலிகை மரம் என்பதை நாம் தெரிந்து கொண்டோம்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...