Wednesday, July 26, 2023

HOME GARDEN TREE NUTRITIOUS SEEMAI ATHI 275. சீமைஅத்தி வீட்டுத் தோட்டதிற்கேற்ற சிறுபழமரம்

  நம் தோட்டதிற்கேற்ற
சிறுபழமரம் சீமைஅத்தி
 

தாவர்வியல் பெயர்: ஃபைகஸ் கேரிகா (FICUS CARICA)

பொதுப்பெயர்: அஞ்சீர், காமன் ஃபிக் (ANJEER, COMMON FIG)

பலமொழிப்பெயர்கள்:

தமிழ்: சீமை அத்தி (SEEMAI  ATHI)

ஹிந்தி: அஞ்சீர் (ANJEER)

மராத்தி: அஞ்சீர் (ANJEER)

கன்னடா: அஞ்சுரா(ANJURA)

கொங்கணி: அஞ்சீர் (ANJEER)

உருது; அஞ்சீர் (ANJEER)

நேபாளி: அஞ்சீர் (ANJEER)

சீமை அகத்தி அழகான சிறு மரம். 15 முதல் 30 அடி உயரம் வரை வளரும். மரத்தின் தலைப்பகுதியின் அகலம்  உயரத்தைவிட கூடுதலாக இருக்கும். பட்டை வழுவழுப்பாக சாம்பல் நிறத்தில் வெள்ளி தகடு போல இருக்கும்.

இலைகள் நான்கு அங்குல நீளமாகவும், மூன்று முதல் ஐந்து பிளவுகளாக இருக்கும். பார்க்க பப்பாளி, ஆமணக்கு இலைகள் போல கைவிரித்தது மாதிரி இருக்கும். இதன் தாவரவியல் பெயரில் பைக்கஸ் கேரிக்கா என்பதில் கேரிக்கா என்றால் பப்பாளியை போல என்ற பொருளாம்.

இந்த சீமை அத்திப்பழ மரங்களை சாப்பிடுவதற்காகவே வளர்க்கிறார்கள். பழங்கள் பேரிக்காய் வடிவத்தில் நான்கு அங்குலம் வரை நீளமாக இருக்கும். பழங்கள் மஞ்சள் கலந்த பசுமையாகவும் தாமிர நிறமாகவும் அடர்த்தியான ஊதா நிறத்திலும் இருக்கும்.

ஈரான் முதற்கொண்டு மத்திய தரைக் கடல் பகுதி வரை உள்ள நாடுகளில் எல்லாம் இதனை வளர்க்கிறார்கள். பல்வேறு வகையான அத்திப்பழங்களை உலகம் முழுவதும் கடந்த 5000 ஆண்டுகளாக வளர்த்து வருவதாக சொல்லுகிறார்கள்.

மருத்துவப்பயன்கள்

இதயம் சம்மந்தமான நோய்கள்,  தொண்டைப் புண், இருமல், இதர சுவாசமண்டலம் தொடர்பான நோய்கள், சீரண மண்டலம் தொடர்பான உடல் உபாதைகளையும் தீர்க்கவும் இதனைப் பயன்படுத்துகிறார்கள்.

வளரிடம் 

இதனை வளர்க்கும் இடங்களில் பகல் சூரியன் முழுசாய் இருக்க வேண்டும். அப்படி என்றால் ஒரு   நாளில்  குறைந்த்து 6 மணி நேரமாவது நேரடி சூரியஒளி வேண்டும். அல்லது ஓரளவு நிழல் தன்மையை தாக்குப்பிடிக்கும்.

இதற்கு வடிகால் வசதி கொண்ட அங்ககச் சத்து நிறைந்த சமமான கார அமிலத்தன்மை கொண்ட நிலமாகவும் (NEUTRAL PH)இருக்க வேண்டும். ஓரளவு குறைவான அமிலத்தன்மையை (ACID SOIL) தாக்குப்பிடிக்கும் ஆனால் உப்பு மண்ணை (ALKALINE SOIL)தாங்கி வளராது.

மரங்களை அழகான வடிவத்தில் பராமரிக்க, ஆண்டுக்கு ஒரு முறை குளிர்காலத்தில் லேசாக அல்லது குறைவான அளவு கவாத்து செய்யலாம்.

கிளைத்துண்டுகளை நடலாம்

புதிய கன்றுகள் அல்லது செடிகளை உற்பத்தி செய்ய செடிகளின் தண்டுகளை பதியம் போட்டு நடலாம். கிளைத்துண்டுகளை நடலாம். இதன் வேர்ச்செடிகளை தனியாக பிரித்தும் நடவு செய்யலாம். ஒரு இடத்தில் நட்டு விட்டால் ஏகப்பட்ட செடிகள் வேர்ச் செடிகளாக உற்பத்தியாகும்.

போதும் என்று சொல்லும் அளவுக்கு இந்த செடிகள் பரவும். இதனால் சில நாடுகளில் இதனை பார்த்து பயப்படுவோரும் உண்டு. இதனை இன்வேசிவ் ஸ்பீசிஸ் (INVASIVE SPECIES) என்று சொல்லுகிறார்கள். அப்படி என்றால் இடத்தை கொடுத்தால் மடத்தை பிடிக்கும் மரங்கள் என்று அர்த்தம்.

இந்த சீமை அத்திப்பழத்தில் என்னென்ன சத்துக்கள் எவ்வளவு இருக்கின்றன என்று பார்க்கலாம். அத்திப்பழங்களில் பொதுவாக நார்ச்சத்து, மக்னீசியம், மற்றும் பொட்டாசிய சத்துக்கள் நிரம்ப உள்ளன. வேறு என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்று கீழே உள்ள இந்த அட்டவணையை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ஒரு சிறிய 40 கிராம் எடையுள்ள ஒரு சீமை அத்திப்பழத்தில் உள்ள சத்துக்களை தான் இங்கு நான் தந்திருக்கிறேன்.

கலோரி சத்து 30

கொழுப்பு: 0.1 கிராம்

புரதம்: 0.3 கிராம்

நார்ச்சத்து: 1.2 கிராம்

பொட்டாசியம்: 93 மில்லி கிராம்

மக்னீசியம்: 7 மில்லி கிராம்

சோடியம்: 0. 4 மில்லி கிராம்

கார்போஹைட்ரேட்: 7.7 கிராம்

சர்க்கரை: 6.5 கிராம்

அறுவடை

அறுவடைக்கு தயாராக உள்ள பழங்கள், அடர்த்தியான ஊதா நிறம் மற்றும் காவி நிறம் கலந்த நிறமாக இருக்கும். பழங்கள் முதுகோடை பருவத்திலும் இலையுதிர் காலத்திலும் அறுவடைக்கு வரும். பழங்களை பறித்தவுடன் பச்சையாகவும், சமைத்தும், வேறு வடிவங்களில் பக்குவப்படுத்தியும் உலர வைத்தும், பல நாடுகளில் சாப்பிடுகிறார்கள்.

வீட்டுத் தோட்டத்திற்கு உரிய மரமாக இதனை கொண்டாடுகிறார்கள். பறவை மற்றும் வன விலங்குகளும் கூட இந்த சீமைஅத்தி பழங்களை சிரம் மேல் வைத்து கொண்டாடுகின்றன.

பூச்சிகள் மற்றும் நோய்கள்

காய்ச்ச மரத்துக்கு கல்லடி என்பது போல இந்த சீமைஅத்தி மரங்களை ஏகப்பட்ட பூச்சிகள் மற்றும் நோய்கள் தொந்தரவு கொடுக்கின்றன.

பூச்சிகளில், அசுவினி, செதில் பூச்சிகள், வேர்முண்டு நீர்ப்புழுக்கள், சிலந்தி உண்ணிகள் மற்றும் மாவு பூச்சிகள் ஆகியவை தாக்குகின்றன. நோய்களில் இலைக்கருகல் நோய், இலைப்புள்ளி நோய், துருநோய் போன்றவைகளும் இந்த அத்திப்பழ மரங்களை தாக்கி சேதம் விளைவிக்கின்றன.

அன்பின் இனிய நண்பர்களே, இந்த சீமைஅத்தி பற்றிய கூடுதலான தகவல் ஏதும் உங்களுக்கு தெரிந்திருந்தால், எனக்கு சொல்லுங்கள். இதில் ஏதும் சந்தேகம் இருந்தால் என்னை கேளுங்கள் நன்றி.

 A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...