தமிழ்நாட்டின் ஊறுகாய் மரம் நாரத்தை. |
தாவரவியல்
பெயர் சிட்ரஸ் மெடிகா (CITRUS MEDICA)
பொதுப்பெயர்:
சிட்ரான் (CITRON)
தாவரக்
குடும்பம்: ரூட்டேசி (RUTACEAE)
இது ஒரு சிறிய நாரத்தை வகை மரம் மெல்ல வளரும் மரம், அல்லது பெருஞ்செடி என்று சொல்லலாம். நாரத்தைக்கும் எனக்கும் ஒரு நீண்ட கால தொடர்பு உண்டு. எனக்கு சின்ன வயதில் இருந்து நாரத்தங்காய் ஊறுகாய்க்கும் எனக்கும் ஒரு நெருங்கிய உறவு உண்டு. வெளியூரில் நான் படித்துக் கொண்டிருந்தேன். தினசரி மதிய உணவை கையில் எடுத்துக் கொண்டு செல்வேன். அப்போது என் அம்மா கொடுத்து அனுப்புவது தயிர்சாதமும் நாரத்தங்காய் ஊறுகாயும்தான். அது எத்தனை ஆண்டுகள் என்பதை என்னால் இப்போது சரியாக சொல்ல முடியாது. அந்த நாரத்தங்காயா இந்த நாரதங்காய் என்று என்னால் தெளிவாக சொல்ல முடியவில்லை. ஆனால் நாரத்தங்காய் என்றால் ஊறுகாய் தான் நமக்கு நினைவுக்கு வரும். என்னை இதற்கு பெயர் வைக்க சொன்னால் ஊறுகாய் மரம் என்று பெயரிடுவேன்.
பலமொழிப் பெயர்கள்
அசமிஸ்:
பீரா டெங்கா (BIRA TENGA)
பெங்காலி:
டாபா (TABA)
குஜராத்தி:
பிஜோரு (BIJORU)
ஹிந்தி:
கால்கால் (GALGAL)
கன்னடா:
மடலா (MADALA)
கொங்கணி:
மாவ்லிங்கா (MAULINGA)
மலையாளம்:
கனபட்டினராகம் (GANAPATINARAGAM)
மணீப்புரி:
ஹைஜாங்க் (HEIJANG)
மராத்தி:
மகாலுங்கா (MAHALUNGA)
மிசோ:
செர்ப்யூ (SERPUI)
நேப்பாளி:
பூமிரோ (BIMIRO)
ஒரியா:
பீஜாபுரா (BIJAPURA)
பெர்சியன்:
டூரன்ஸ்(TURANS)
பஞ்சாபி;
பிஜவ்ரி நிம்பு (BIJOURI
NIMBU)
சமஸ்கிருதம்:
பிஜாத்யா (BIJADHYA)
சிந்தி:லிமோ (LIIMO)
தெலுங்கு:
அம்லா கேசரா (AMLA KESARA)
துளு: மாப்ளபுளி (MAPALAPULI)
நினைத்தாலே இனிக்கும் என்பது தமிழில் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான சொற்றொடர். ஆனால் என்னைப் பொருத்தவரை நினைத்தாலே இனிப்பை நம்மால் உணர முடியவில்லை.ஆனால் ஊறுகாயை நினைத்தாலே புளிக்கும். வாயில் உமிழ்நீர் ஊற்றெடுக்கும்.
இதன்
தாவரவியல் பெயர் சிட்ரஸ் மெடிகா
என்பதால், இது மருத்துவப் பயன்
அதிகம் உடையதாக இருக்கும் என்று நினைக்கிறேன் இந்த நாரத்தையின் பல மொழி
பெயர்களை பார்க்கும்போது இது இந்தியா முழுக்க பரவி உள்ளது
என்றும் தோன்றுகிறது.
நாரத்தங்காய்
என்றால் இரண்டு உபயோகங்கள் தான் முக்கியமானவை. ஒன்று
உணவாய் பயன்படுத்துவது அல்லது உணவோடு பயன்படுத்துவது இரண்டாவது மருத்துவ பயன்கள்.
தாயகம்: நாரத்தையின்
தாயகம் இந்தியா, இமயமலையின் பள்ளத்தாக்குகள் மற்றும் அதன் மலையடி
வாரங்கள்.
வளரியல்புகள்
நாரத்தை, பசுமை மாறாம மரம், சுமார் 4 மீட்டர் உயரம் வரை வளரும். வீட்டுத் தோட்டத்திற்கு ஏற்ற மரம், வெப்பமண்டல மித வெப்பமண்டல பகுதிகளில் வளரும். நல்ல வடிகால் வசதி உள்ள ஆழமான இருமண் பாடான மண் கண்டத்தில் நன்கு வளரும். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் காய்க்கத்தொடங்கி 25 முதல் 30 ஆண்டுகள் வரை காய்க்கும். ஆண்டு முழுவதும் பூத்துக்குலுங்கி காய்க்கும். தனி மரங்கள் ஒரு ஆண்டில் 40 கிலோ வரை பழங்கள் தரும். சில மரங்கள் அதிகபட்சமாக 100 கிலோ வரை கூட பழங்கள் தரும்.
இதன் கிளைகளும் சிம்புகளும் எலும்புகள் மாதிரி உறுதியாக இருக்கும் இலை கணுகளில் நீளமான முட்கள் இருக்கும்.
பழங்கள்
உருண்டையாக அல்லது சற்று நீளவாக்கில் உருண்டை
வடிவாக இருக்கும். மேல் தோல் தடிமனாக இருக்கும் உள்ளிருக்கும் சுளைகள் சிறுசாக புளிப்பாக
இருக்கும். சில இனிப்பாகவும் இருக்குமாம்.
நாசியை
மிரட்டும்படியான வாசனை உடையதாக இருக்கும். நாரத்தை வகையைச் சேர்ந்த எல்லா வகைகளின்
பழங்களுக்கும் இப்படிப்பட்ட வாசனை உண்டு. பழங்கள் நான்கு முதல் ஐந்து கிலோ எடையுடையவைகளாக
இருக்கும். இன்னும் குறைவாக கூட சில சமயங்களில் இருக்கும்.
பெரும்பாலும்
இதன் பழங்கள் இளம் காய்களாக இருக்கும் போது அடர்த்தியான பசுமை நிறத்தில் இருக்கும்
முதிர்ந்த பின்னால் லேசாக மஞ்சள் நிறமாக மாறும்.
என்னென்ன சத்துக்கள் உள்ளன
கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், தயமின், பாஸ்பரஸ், மக்னிசியம், காப்பர் மற்றும் பல தாவர ரசாயனங்களும் இதில் அடங்கியுள்ளன.
நாரத்தையில்
இன்னொரு முக்கியமான சமாச்சாரம், அந்த பழத்தின் மேல் தோல்.நீங்கள் நாரத்தை
ஊறுகாய் சாப்பிட்டு இருக்கிறீர்களா ? அதில் தோல் பகுதி தான் அதிகம் இருக்கும்.
சுளைப்பகுதி கம்மியாகத்தான்
இருக்கும். எலுமிச்சை ஊறுகாயில் கூட பெரும்பகுதி அதன் தோல்
தான்.அதனால் எலுமிச்சம்பழத்தில் தோராயமாக அதன் தோல் 10 சதம் என்றால்
பழம் 90% இருக்கும்
ஆனால் நாரதத்தையில் அதன்
தோள் 70% சுளைப்பகுதி
30 சதவீதம்
மட்டுமே.
நாரத்தையின்
மருத்துவ குணங்கள், அதன் புதிய
தளிர் அல்லது தண்டுகள் இலைகள் பூக்கள் பழங்கள், அனைத்திலும் பலவிதமான
இயற்கை மருந்துகள் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள்.
ஆஸ்துமா
அல்லது நுரையீரல் சம்பந்தப்பட்ட பிணிகள், மூட்டு பிடிப்பு மூட்டு வலி,
மனரீதியான அழுத்தங்கள் அல்லது மனநோய்கள் அனைத்தையும் குணப்படுத்துவதற்கான
மருந்துகளை நெடுங்காலமாக இதில் தயாரித்து பயன்படுத்துகிறார்கள்.
இது
பற்றிய ஆய்வுகளைச் செய்யும் எனக்கு ஆச்சரியமான செய்தி ஒன்று கிடைத்தது. அது
பேய் பிசாசு என அலகைகளின்
தொந்தரவு அல்லது பாதிப்பு இருந்தால் கூட அவற்றையும் குணப்படுத்தும் இது என்ற பதிவு
செய்துள்ளார்கள். தினமும் நாரத்தை
ஊறுகாய் சாப்பிட்டால் காத்துகருப்பு பிரச்சினை வராது.
இதனை
அறிவியல் ரீதியாக
மூடநம்பிக்கை என ஒதுக்கி விடாமல் மன
ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வுகளை இது எப்படி என்று மேலும் ஆய்வு செய்ய வேண்டும்.
நாரத்தையின்
வேர்களில் இருந்து கஷாயம் அல்லது குடிநீர் தயாரித்து அதனை நுரையீரல் அல்லது மூச்சு
விடுவதில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய பயன்படுத்தலாம்.
மேலும்
முதுகு வலியினால் ஏற்படும் அவஸ்தைகளையும் குணப்படுத்த சீனா காரர்கள் இதற்காக ஒரு லேகியம் கிண்டு.கிறார்கள்
இவை தவிர மலேரியா ஜலதோஷம் சளி இருமல் ஆகியவற்றிற்கும்
இதன் பழங்களில் இருந்து மருந்துகள் தயார் செய்கிறார்கள்.
ரோமானியர்கள் இன்றும் கூட
உணவு வகைகளில் மனமூட்டியாக இதனை பயன்படுத்தி வருகிறார்கள்.
புதிய கன்றுகள்
விதைகளை
விதைத்தும், கிளைத்துண்டுகள் மற்றும் இலை துண்டுகளை கூட நடவு செய்து புதிய
கன்றுகளை உருவாக்கலாம். ஒரே விதையில் இருந்து இரண்டு அல்லது மூன்று கன்றுகள் கூட வளரும் (POLY-EMBRYONIC).
உணவு
வகைகள் தயாரிப்பு
உணவுகள்
தயாரிப்பில் இன்றைய நிலையில் எண்ணற்ற உணவுகளை இதில் தயாரிக்க முடியும்.
நமக்கு
தெரிந்த பிரதான உணவு வகை என்பது ஊறுகாய், பர்மலாட்டுகள் சாலட்,
கேக்குகள், மிட்டாய்கள், ஜூஸ், பலவகை சாப்ட்ரிங்ஸ்
தயாரித்தல், உணவு வகைகளில் மணமூட்டியாக
வித்தியாசமான வகைகளில்
பயன்படுத்தலாம்.
உணவே மருந்து என்பது தமிழ் கலாச்சாரம். நாரத்தை உணவு மருந்து இரண்டும் தான். நமது வீட்டு தோட்டத்தில் இருக்க வேண்டிய மரங்களின் பட்டியலில் நாரத்தையையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment