நுந்நெரா என்னும் பட்டன் மரம் |
தாவரவியல் பெயர்
அனோ ஜீசஸ் அக்யூமேனேடா (ANOEGEISSUS ACUMINATA)
தாவரக் குடும்பம்; காம்பிரிட்டேசி (COMBRETACEAE), அர்ஜுன் என்னும்
மருதமர குடும்பத்தைச் சேர்ந்தது.
பொதுப்பெயர்: பட்டன் ட்ரீ
தாயகம்: தெற்கு ஆசியா, அரேபியன் பெனின்சுலா, ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா, மியான்மர்
பரவி இருக்கும் இடங்கள்: இந்தியா, பங்களாதேஷ், மியான்மர், கம்போடியா,
தாய்லாந்து, மற்றும் வியட்னாம்.
தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், நீலகிரி, மற்றும்
திருனெல்வேலி ஆகிய பகுதிகளில் இந்த மரங்கள் தென்படுகின்றன.
பிறமொழிப் பெயர்கள்:
தமிழ்: நுந்நெரா, நமை, நும்மா
என மூன்று தமிழ் பெயர்களைச் சொல்லுகிறார்கள்(NUNNERA, NAMAI, NUMMA)
இந்தி: டாவ் (DHAU)
மலையாளம்: வெக்காளி (VEKKALI)
பெங்காலி: இட்சிரி (ITCHRI)
தெலுங்கு: பாசி சேட்டு (PASI CHETTU)
உருது பாசி (PASI)
நுந்நெரா என்று தமிழில் அழைக்கப்படும் இந்த
மரம் முக்கியமாக மரக்கட்டைகளுக்கானது. அழகு மரமாகவும், சாலை ஓரங்கள், பூங்காக்கள், மற்றும் ஆற்றங்கரைகளில் நடுவதற்குரிய மரம். சாதகமான சூழலில் 40 மீட்டர் உயரம் வரை கூட வளரும். இலையுதிர் மரவகையைச் சேர்ந்தது., தொங்கும்
கிளகள் கொண்டது. மரத்தின் பட்டை ஆழ்ந்த சாம்பல் னிறத்தில் இருக்கும். ஆண்டு முழுவதும்
பூத்து காய்க்கும்,
இந்த மரம் இந்தியா
பங்களாதேஷ் மியான்மர் தாய்லாந்து கம்போடியா லாவோஸ் வியட்நாம் ஆகிய நாடுகளில் பரவி
உள்ளது.
நுந்நெரா ஒரு சராசரியான மரமாக இருந்தாலும்
அதிக நாட்கள் உழைக்காமல் சுமாரான கட்டுமான வேலைகள் மேஜை நாற்காலி போன்ற
மரச்சாமான்கள் மற்றும் இசைக்கருவிகள் செய்யவும் இதனை பயன்படுத்துகிறார்கள்.
இதன் மருத்துவ
பண்புகளுக்காக உலகம் முழுவதும் பிரபலமான மரம் இது இதில் செய்யப்படும் மருந்துகள்
மூலமாக சொரி சிரங்குகள் மற்றும் இதர தோல் நோய்களை குணப்படுத்த முடியும்.
நுண்ணறாமரத்தின்
பட்டையிலிருந்து எடுக்கும் சாயத்தை கொண்டு நூல் மற்றும் துணிகளுக்கு நிறம் ஊட்டுகிறார்கள். வட கிழக்கு இந்தியாவில் திரிபுரா மாநிலத்தில் உழவு செய்யும் ஏர் கலப்பைகள் செய்ய இதன்
மரத்தை பயன்படுத்துகிறார்கள்.
இதனைப் பய்ன்படுத்தி பாரம்பரிய மருத்துவ
முறைகளின் மூலம் பல விதமான நோய்களை கட்டுப்படுத்துகிறார்கள். அவை சர்க்கரைநோய், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு, தொழுநோய், சொரியாசிஸ் சொறிநோய், தேள் மற்றும் பாம்பு கடி, இவற்றிற்கும் சிகிச்சை
அளிக்கிறார்கள்.
இன்னும் அனோஜீசஸ் தாவர
குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களை ஆய்வு செய்தால் பல நோய்களை குணப்படுத்தும் மூலிகைகள் கிடைக்கும்.
அன்பின் இனிய
நண்பர்களே பட்டன்மரம் என்றும் நுந்நெரா என்றும் அழைக்கப்படும் இந்த மரம் உங்கள் ஊரில் இருக்கிறதா அதை
பற்றி உங்களுக்கு புதிதாக விஷயங்கள் ஏதும் தெரிந்திருந்தால் எனக்கு சொல்லுங்கள், நன்றி வணக்கம்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment