இரவேற்சின்னி மேற்கு தொடர்ச்சி மலை
பழமரம்GAMBOGE WESTERN GHATS
FRUIT TREE
இரவேற்சின்னி
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிக்கு சொந்தமான ஒரு பழமரம். இதன்
பழங்களை சாப்பிடலாம். இதன் பழத்தோலில் தோல்
பதனிடலாம். விதை எண்ணையை சமைக்க பயன்படுத்தலாம். இதன்
செடிகளை மங்குஸ்தான் பழ செடிகள் உற்பத்திக்கு வேர் செடிகளாக பயன்படுத்தலாம்.
தாவரவியல்
பெயர்::கார்சீனியா மோரெல்லா (GARCINIA
MORELLA)
தாவரக்
குடும்பம்: குளூசீனேசி (GLUCIACEAE)
பொதுப்பெயர்:
கேம்போஜ் (GAMBOGE)
பலமொழிப்
பெயர்கள்:
அசாமிஸ்:
குசிதெக்கேறா (KUZI
THEKERA)
தமிழ்:
இறவேற்சின்னி, மக்கி.(IRAVERSINNI,
MAKKI)
மலையாளம்:
இரவி, சிகிரி
(IRAVI, CHIGIRI)
கன்னடா:: அர்தலா (ARDALA)
சிங்களீஸ்:
கோகாட்டியா (KOKATIYA)
பயன்கள் (USES)
முதிர்ந்த
கனிந்த பழங்களை சாப்பிடலாம். ஆனால் புளிப்பு ஏக்கத்தப்பாக இருக்கும்.
இதன்
பழங்களை துண்டுதுண்டாக
நறுக்கி சூரிய ஒளியில் உலர்த்தி வெகு நாட்கள் வரை சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
பழங்களில்
புளிப்பு சுவை இருப்பதால் இதில் ஊறுகாய் தயார் செய்யலாம் அஸ்ஸாமின் போடோ இனத்து மக்கள், இளம்
காய்களை பறித்து
மீன் குழம்பு வைப்பதற்கு பயன்படுத்துகிறார்கள்.
இந்த
பழங்களை வேகவைத்து அதிலிருந்து ஒருவகை சட்டினி தயார் செய்கிறார்கள். உலர்ந்த
இதன் பல துண்டுகளைக்
கொடுத்து சீதபேதி மற்றும் வாயு தொல்லையினால் ஏற்படும் வலியினை
குணப்படுத்துகிறார்கள்.
இதன்
பட்டைகளை காயப்படுத்தினால் அதிலிருந்து மஞ்சள் நிற திரவம் ஒன்று வடியும், அந்த
திரவத்தின் பெயர் காம்போஜ் (GAMBOJE)என்பது. இதனை
உணவுப்பொருட்களுக்கு
பெயிண்ட் மற்றும் மருந்துகள் தயாரிப்பில் நிறம்
தருவதற்காக பயன்படுத்துகிறார்கள்.
இந்த இரவேற்சின்னி
பழச்செடிகளை
மங்குஸ்தான் பழச் செடிகள் உற்பத்திக்கு வேர்ச்செடியாக பயன்படுத்துகிறார்கள்.
கர்நாடகாவில் மலநாடு பகுதியில், தீர்த்தஹள்ளி மற்றும்
சிக்மகளூர் பகுதிகள் மீன்
சமைப்பதில் மிகவும் பிரபலமானவை. இதற்கு ஒட்டுளி (ODDULI)என்ற ஒரு
பொருளை பயன்படுத்துகிறார்கள். இந்த இரவேற்சின்னி
பழங்களை வேகவைப்பதன் மூலம் இந்த ஒட்டுளியை தயார்
செய்கிறார்கள்.. இந்த
ஒட்டுளியை
எவ்விதமான பிரசர்வேட்டிவ்ஸ்’சும்
சேர்க்காமல் பல ஆண்டுகள் கூட சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
பொதுப்பெயர்கள்:
இந்தியன் காம்போஜ், மைசூர் காம்போஜ், ஸ்ரீலங்கா காம்போஜ்..
மரங்கள்
பசுமை மாறா மரங்கள், 18 மீட்டர் உயரமாக வளரும்.
மரத்தின் பட்டைகள் காவி நிறத்துடன் கலந்த சாம்பல் நிறமாக இருக்கும். மரத்தை
காயப்படுத்தினால் அதிலிருந்து பளிச்சென்று மஞ்சள் நிறப் பால்
நிறைய வடியும்.
பூக்கள்
ஆண் பெண்
பூக்கள் தனித்தனியாக இருக்கும். பெண் பூக்கள் ஆண்
பூக்களை விடப்
பெரியதாக இருக்கும். பூக்கள் கணுக்களில் தோன்றும். டிசம்பர்
முதல் பிப்ரவரி வரையான
காலகட்டத்தில் பூத்துக்
காய்க்கும்.
மூன்று
சென்டிமீட்டர் குறிப்பிட உள்ள பழங்களாக இருக்கும். ஒவ்வொரு
பழத்திலும் நான்கு முதல் 12 விதைகள்
வரை இருக்கும். மே ஜூன் மாதங்களில் காய்க்கும். பறவைகள்
பிராணிகள் மற்றும் மனிதர்கள் மூலம் விதைகள் பரவுகின்றன.
பரவி
இருக்கும் இடங்கள்
இந்தியா
மற்றும் மலேசிய நாடுகளில், இந்த இரவேற்சின்னி பழ மரங்கள் பரவியுள்ளன தமிழ்நாட்டில்,
கோயம்புத்தூர் நீலகிரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பரவி இருக்கின்றன.
கர்நாடகாவில்
சிக்மகளூர் ஹாசன் மைசூர் வடகானரா தென்கானரா
மற்றும் ஷிமோகா ஆகிய இடங்களிலும், கேரளாவில் இடுக்கி கண்ணனூர் கொல்லம் கோழிக்கோடு மலப்புறம் பாலக்காடு
திருவனந்தபுரம் திருச்சூர் மற்றும் வீநாடு பகுதிகளிலும் பரவி உள்ளன.
ஆசியாவில்
இந்தியா பங்களாதேஷ் மலேசியா மியான்மர் சிங்கப்பூர் ஸ்ரீலங்கா மற்றும் தாய்லாந்து
பகுதிகளில் பரவியுள்ளன.
இந்தியாவில்
தமிழ்நாடு அசாம் கர்நாடகா மற்றும் கேரளா மேகாலயா ஆகிய மாநிலங்களில் இரவேற்சின்னி
பழமரங்கள் பரவியுள்ளன.
சித்த
மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் ஹோமியோபதி சேவா ரிக்வா யுனானி சீனமருத்துவம்
ஆகிய பாரம்பரிய மருத்துவ முறைகள் இரவேற்சின்னி பழமரத்தை மூலிகையாக பயன்படுத்துகின்றன.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment