Friday, July 28, 2023

FIVE STAR HERB OF SIDDHA MAASIKAI 279.சித்த வைத்தியத்தின் சிகரம் தொட்ட மாசிக்காய் மரம்


சித்த வைத்தியத்தின்
சிகரம் தொட்ட மாசிக்காய்

 மாசிக்காய் தரும் ஓக் மரம்


மாசிக்காய் என்பது ஒரு காயே அல்ல என்பதுதான் நான் சொல்லும் முதல் செய்தி ! காய் அல்ல என்றால் என்னதான் அது ? சொல்லுகிறேன், அது ஒரு குளவிக்கூடு ! குளவிக்கூடா ? ஆமாம் தொடர்ந்து  படியுங்கள்.

மாசிக்காய் மரம்  எப்போதும் லைதழையுடன் இருக்கும் நடுத்தரமான மற்றும் பெரிய மரம், பசுமை மாறாமரம், இந்திய நாட்டிற்கு சொந்தமான மரம் தமிழ்நாட்டில் மாசிக்காய் என்ற பெயரில் சித்த மருத்துவ மூலிகைகளில்  சிகரம் தொட்ட மரம், பழைய இந்தியாவில் கால்நடைகளுக்கு மிகுதியாக பயன்பட்ட  தீவன மரம். ஆடு மாடுகளுக்கு தீவனம் அனைத்து மக்களுக்கும் மருந்து மரம்.

மாசிக்காய் மரங்கள் 18 முதல் 24 மீட்டர் உயரம் வளரும் 0.80 முதல் ஒரு மீட்டர் ஒரு குறுக்களவு கொண்டதாக வளரும்.

இலைகள் நீள் வட்டமாக ஆறு முதல் 15 சென்டிமீட்டர் நீளமாக பசுமையாக இருக்கும். பட்டைகள் சாம்பல் நிறம் காவி நிறமும் கலந்தது போல இருக்கும். முதிர்ந்த பட்டைகள் சட்டைகள் போல கழன்று விழும். ஆண் பெண் பூக்கள் தனித்தனி. ஆண் பூக்கள் பூச்சரமாக தொங்க பெண் பூக்கள் தனித்தனி பூக்களாக இருக்கும்.

ஏப்ரல் மே மாதங்களில் பூக்கும் இதன் பழங்கள் என்பதை கொட்டைகளாக இருக்கும். 2.5 சென்டிமீட்டர் குறுக்களவு கொண்டதாக இருக்கும். நவம்பர் டிசம்பர் மாதங்களில் இதன் கனிகள் முதிரும்.

இதன் மரங்கள் மெல்ல வளரும், மரத்தின் வைரப் பகுதி கடினமானதாக உறுதியானதாக, வலுவானதாக செந்நிறமும் காவி நிறமும் கலந்தது மாதிரியான நித்தில் இருக்கும்.

தாயகம்

இந்த மரம், இந்தியா பாகிஸ்தான் நேபாளம் பர்மா ஆகிய நாடுகளுக்கு சொந்தமான மரம்.

மாசிக்காய் மரங்கள் ஈரம் மிக்க வடிகால் வசதி கொண்ட, 1600 முதல் 2500 மீட்டர் உயரம் உள்ள குளிர்ச்சி மிக்க இடங்களில் வளரும். ஆண்டு சராசரி மழையாக ஆயிரம் முதல் 2300 மில்லி மீட்டர் மழை பெறும் இடங்களில் வளரும் மரம் து.

பயன்கள்

இந்த மரங்களில் விவசாய கருவிகள் செய்யலாம். கருவிகளுக்கு கைப்பிடிகள் செய்யலாம். இதன் தழைகள் தீவனமாக உபயோகமாகும். விறகாகவும் சார்கோல் தயாரிக்கவும் இதனை வெகுவாக பயன்படுத்துகிறார்கள்.

உள்ளூர்ப் பெயர்கள்

ப்ளூ ஜேக் க், அப்லேண்ட் வில்லோ ஓக், சேண்ட் ஜேக் ஓக் (BLUE JACK OAK, UPLAND WILLOW OAK, SAND JACK OAK) ஆகிய பெயர்களில் இதனை அழைக்கிறார்கள்.

பயன்கள்

இதன் விதைக் கனிகளை சாப்பிடலாம். இதனை உலர வைத்து மாவாக்கி அதிலிருந்து ரொட்டி போன்ற உணவுப் பொருட்களை தயார் செய்யலாம். இதன் விதைகளை வறுத்துப் பொடித்து மாவாக்கி காப்பித்தூள் மாதிரி பயன்படுத்தலாம்.

இமயமலைப் பகுதியில், இதன் தழைகள் மிக முக்கியமான தீவனமாக பயன்படுகிறது. இதன் பிசின்களில் தயாரிக்கும் மருந்துகளில், சளி இருமல் தொடர்பான உடல் உபாதைகளை குணப்படுத்தவும், வலி நிவாரணியாகவும், பயன்படுத்துகிறார்கள்.

பாரம்பரிய வைத்திய முறைகளில், இது ஒரு முக்கியமான மூலிகை.

ஏற்ற மண் வகை

இந்த மரங்கள் இருமண் பாடான மண், மற்றும் களிமண் பாங்கான மண்ணிலும் ஓரளவு உவர் மண்ணிலும் வளரும்.

ஊடுபயிராக இமயமலைப் பகுதிகளில் இந்த மரங்களின் ஊடாக மஞ்சள் மற்றும் இஞ்சி பயிரை சாகுபடி செய்கிறார்கள் இந்த மரங்களின் ஊடாக செய்யும் மஞ்சள் மிஞ்சியும் நல்ல மகசூல் தருகின்றன என்கிறார்கள்.

நிலங்களை மேம்படுத்துதல்

இந்த ஓக் மரங்கள், வேல மரங்கள், மற்றும் பைன் மரங்களையும் இந்தப் பகுதியில் சுரங்கங்களில் தோண்டி போட்ட மண் பகுதியை சீர் செய்ய மேம்படுத்த  நடுகிறார்கள்.

பொதுப் பெயர்கள்:  பஞ் ஓக்,  இமாலயன் ஓக்,  பிளாக் ஜாக் ஓக், ஒயிட் ஓக்(BANJ OAK, HIMALAYAN OAK, BLACK JACK OAK, WHITE OAK)

ந்த  ஓக் மரத்தின் காய்களைத்தான் நாம் மாசிக்காய் என்கிறோம்.து சித்த மருத்துவத்தில் மிக முக்கியமான மூலிகை.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மிகையான ரத்தப்போக்கு, கருப்பையில் இருக்கும் நச்சுக்களை நீக்கி அதனை பலப்படுத்துதல், ஆசனவாய் புண்களை குணப்படுத்துதல், சரும பாதுகாப்பு, வயிற்றுப்போக்கு, சுவாச மண்டலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்தல், இப்படி பல்வேறு மருத்துவப் பயன்கள் கொண்டது மாசிக்காய் என்பவை சித்த மருத்துவக் குறிப்புகள்.

ஒரு முக்கியமான செய்தியை, நான் உங்களுக்கு சொல்ல வேண்டும் மாசிக்காய் என்பது இந்த மரத்தின் காய் என்று நிறையபேர் நினைத்து இருப்பார்கள். நானும் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். அப்படி அல்ல. இதன் இலைகளில் ஒரு வகையான குளவிகள் கட்டும் கூடுகள்தான் இது.

அதைத்தான் நாம் மாசிக்காய் என்று சொல்லுகிறோம் அந்த குவிகள் ஐந்து முதல் ஆறு மாதங்கள் இந்த இலைகளில் ஒரு கூடுகட்டி, அதற்குள் முட்டையிட்டு, குஞ்சு பொரித்து, பின்னர் அதில் இருந்து வெளியேறிவிடும் அந்த கூடுகள் பார்க்கக் காய்கள் போல இருக்கும்.  அந்த குவிகளின் கூடுகள் தான் மாசிக்காய் என்பது.

கொர்கஸ் இன்கானா (QUERCUS INCANA)என்னும் ஓக் மரத்தின் இலைகளில் ஒருவகை குளவிகளால் உருவாக்கப்படுவது தான் மாசிக்காய் என்கிறார்கள் இதனை ஓக் ஆப்பிள் என்றும் சொல்லுகிறார்கள்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

  

1 comment:

Yasmine begam thooyavan said...

மாசிக்காய் பற்றி அறிந்தேன். அதிசியித்தேன் இது காய் அல்ல கூடு என்று. மருத்துவ குணம் நிறைந்த மாசிக்காய் பற்றி எப்போவோ கேள்வி பட்டதொடு சரி. பிறந்த குழந்தைக்கு இதை கல்லில் உரசி தருவது வழக்கம். ஆனால் இத்தனை மருத்துவ பயன்களா? என்றால் நம்பவா முடியும்? நம் அருகாமையில் இருக்கும் இந்த மாசிக்காய் பற்றி நமக்கு அறியாமலே போயிருக்கும் தங்கள் கட்டுரையை படிக்கவில்லையேன்றால். அருமை தோழரே.
By
எழுத்தாளர் யாஸ்மின்பேகம்தூயவன்

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...