ஃபிடில் இலை அழகு அத்திமரம் |
FIDDLE LEAF FIG INDOOR FRIENDLY |
லிராட்டா அத்தி மரங்களை
ஃபிடில் இலை அத்தி (FIDDLE
LEAF FIG) என்றும்
சொல்லுவார்கள், இது ஆப்ரிக்காவை சொந்த மண்ணாகக் கொண்டது,
இதனை அழகு மரமாகவும் வளர்க்கலாம், சுற்றுச் சூழலை
மேம்படுத்துவதற்காக வளர்க்கலாம், இதன் பழங்கள், இலைகள், வேர்கள்
ஆகிவற்றில் பாரம்பரிய மருந்துகள்(TRADITIONAL
MEDICINES) செய்கிறார்கள், இதன் பழங்கள் அவ்வளவு சுவையாக இருப்பதில்லை. இந்த லிராட்டா அத்தி
மரங்கள், வெப்ப
மண்டல மற்றும் மித வெப்பமண்டலப் பகுதிகளில்(TROPICAL & SUBTROPICAL) பல நாடுகளில் பரவியுள்ளது,
பொதுப் பெயர்கள்: பேஞ்சோ ஃபிக், ஃபிடில் லீஃப் ஃபிக் (BANJO FIG, FIDDLE LEAF FIG)
தாவரவியல் பெயர்: ஃபைகஸ் லிரேட்டா (FICUS LYRATA)
தாவர குடும்பம்: மோரேசி (MORACEAE)
தாயகம்:ஆப்ரிக்கா (AFRICA)
முக்கியமாக லிராட்டா அத்தி மரங்கள் சுற்றுச்சூழலில்
(ENVIRONMENT) இருக்கும் மாசுக்களையும்
நச்சுக்களையும் (POLLUTION
& TOXINS) திறம்பட அகற்றுகிறது. வீடுகளில் அல்லது வசிப்பிடங்களில்
வெளிப்படும் கரியமிலவாயுவை(CARBONDIOXIDE) விரைவாக ஆக்சிஜனாக மாற்றுகிறது.
இதிலிருந்து தயரிக்கும் பாரம்பரிய மருந்துகள்
ரத்த சர்க்கரை அளவையும், கொலஸ்ட்ரால் (BLOOD
SUGAR & CHOLESTROL) அளவையும் குறைக்க உதவுகிறது.
லிராட்டா அத்தி மரம் மோரேசி தாவரக்
குடும்பத்தைச் சேர்ந்தது, இதனை மல்பெரி குடும்பம் என்று
சொல்லுவார்கள் இந்த குடும்பத்தில் உள்ள மொத்த மர வகைகள் பெருஞ்செடிகள் மற்றும்
மரக்கொடிகள் என்பவை மொத்தம் 1000 தாவரங்கள் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள். மோரேசி குடும்பத்தின் பெரும் பிரிவு அத்தி.
இதில் உள்ளவை 700 முதல் 1000 தாவரங்கள்.
வளரியல்புகள் (DESCRIPTION)
இந்த பிடில் இலை அத்தி மரங்கள் வளர சூரிய ஒளி முழுமையாக இருக்க
வேண்டும். ஓரளவு லேசான நிழலை தாங்கி வளரும். சுமாரான அளவு தண்ணீர் கொடுத்தால்
போதுமானது.
அழகான இலைகளை உடைய இவை சிறு மரங்கள். அழகு மரங்களாக வீட்டில் வளர்க்கலாம். 15 முதல் 30 மீட்டர் உயரமாக வளரும்.
இதன் இலைகள் பார்க்க பிடில் இசை கருவி போல வித்தியாசமான வடிவத்தில்
இருப்பதால் இதனை பிடில் லீஃப் அத்தி என்று
சொல்லுகிறார்கள்.
அடிமரம் ஒற்றை மரமாக இருக்கும். பட்டைகள் சாம்பல் நிறமாக ஆழமில்லாத
வெடிப்புகளுடன் இருக்கும்.
இலைகள் பளபளப்பான அடர்த்தியான பச்சை நிறத்தின் ஊடாக இலையின்
நரம்புகள் மஞ்சள் நிறமாக இருக்கும். இலைகளின் ஓரப்பகுதி அலை அலையாக வளைவுகளுடன் இருக்கும்.
இருப்பிடம் (HABITAT)
வெப்ப மண்டல ஆப்பிரிக்காவின் தாழ்வான நிலப்பகுதிகளில் உள்ள
மழைக்காடுகளில் லிரேட்டா அத்தி மரங்கள் பரவியுள்ளன.
பயிர்ப்பரவல்
(PROPAGATION)
ஒன்று முதல் இரண்டு ஆண்டு வயது உடைய கிளைகளில் போட்ட பதியன் செடிகள், மற்றும் கிளை
குச்சிகள் ஆகியவற்றை நட்டு புதிய கன்றுகளை உருவாக்கலாம்.
பயன்கள் (USES)
வித்தியாசமான வடிவத்தில் உள்ள இலைகளைக் கொண்ட இந்த அத்தி மரங்களை அழகு மரங்களாக வளர்க்க விரும்புகிறார்கள். வீடுகளில்
தொட்டிச் செடிகளாகக் கூட இவற்றை வளர்க்கிறார்கள்.
வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டலப் பகுதிகளில் லிராட்டா அத்தி மரங்களை பெருந்தோட்டங்களில்
அழகு மரங்களாக வளர்க்கிறார்கள். குளிர்ச்சியான
வெப்பநிலை கொண்ட பகுதிகளில் அந்த மரங்களுக்கு போதுமான வெப்பமும் சூரிய ஒளியும்
கிடைக்காத போது அந்த அத்தி மரங்கள் பூப்பதும் இல்லை காய்ப்பதும் இல்லை.
பரவி இருக்கும் இடங்கள் (DISTRIBUTION)
லிராட்டா அத்திமரங்கள் ஆப்பிரிக்கா,
மொனிகன் ரிபப்ளிக், ஜெர்மனி, ஜப்பான் போர்ட்டோ ரிக்கோ, மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளில் பரவி உள்ளன. இதுபற்றிய கூடுதல் தகவல் ஏதும் தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள், நன்றி,
வணக்கம்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
2 comments:
புதிய தகவல் பெற்றேன்...
மிக்க மகிழ்ச்சி ....
இதுபோன்று இன்னும் ஆயிரமாயிரம் தகவல்களை தங்களிடமிருந்து அறிந்துகொள்ள ஆவலுடன் உள்ளேன்.
நன்றி ஐயா.வணங்குகிறேன்.
மரம் இராஜாவின் பணிவான வணக்கங்கள்.
Post a Comment