Thursday, July 6, 2023

ECALYPTUS IS A TREE HERB 238. நீலகிரி தைலம் தரும் யூக்காலிப்டஸ் மரம்

 

நீலகிரி தைலம் தரும் 
யூக்காலிப்டஸ் மரம் 

நமக்குத் தெரிந்தவரை, இந்த மரத்திலிருந்து வடிப்பதுதான் நீலகிரி தைலம், ஆஸ்திரேலியா இதன் தாயகம், தமிழ் நாட்டில் இதனை தைலமரம் என்கிறோம், மிக வேகமாக வளரும் மரம், தண்ணீர் இல்லாத பொட்டல் காட்டில் கூட வளமாய் வளரும், தோப்புகளில் வளர்த்து  நான்கைந்து ஆண்டுகள் வளர்த்து விற்பனை செய்யக்கூடிய மரம் இந்த யூக்காலிப்டஸ் மரம்.    

தாவரவியல் பெயர் யூக்காலிப்டஸ் மரம் டெரிடிகார்னிஸ் (EUCALYPTUS TRETECORNIS)

தாவரக் குடும்பம்:மிரிட்டேசி (MYRTACEAE)

பொதுப் பெயர்கள்: பாரஸ்ட் ரெட்கம், புளுகம், பிளடட் கம், கிரேகம், மௌண்டைன்கம், குயின்ஸ்லேண்ட் ப்ளூகம், ரெட் அயன் கம், ஸ்லேட்டி கம் (FOREST RED GUM, BLUE GUM, BLOODED GUM, GREYGUM, MOUNTAIN GUM, QUEENSLAND BLUE GUM,  RED IRON GUM, SLATY GUM)

தாயகம்: கிழக்கு ஆஸ்திரேலியா

யூக்காலிப்டஸ் மரம் மரத்தை நாம் தமிழ்நாட்டில் தைல மரம் என்று சொல்லுகிறோம். எல்லோருக்கும் தெரிந்த உபயோகம். சிலர் நீலகிரி தைலம் மரம் என்பார்கள். தலைவலிக்கு கண்கண்ட தைலம் நீலகிரி தைலம்.

பந்தல் போட வேண்டுமென்றால் முதன் முதலில் தேடுவது சவுக்கு மரம்தான்.அதற்கென்றே பிறந்த மரம் அது. பந்தல்காலைப் பொருத்தவரை சவுக்கு மரம் என்பது ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி உயரம் பார்த்து அப்படியே நட வேண்டியதுதான். அதற்கு அடுத்தபடியாக மக்கள் தேடுவது தைல மரத்தைத்தான். காரணம் விலை. தைல மரம் மலிவானது. சவுக்கு கொஞ்சம் காஸ்ட்லி.

இதன் பொதுப் பெயர்களில் புளூகம் ரெட்கம் என்று சொல்லப்பட்டு வந்தாலும் நாம் அது பற்றி யோசித்தது கிடையாது. ஆனால் இப்போது இது பிளட் ரெட் ட்ரீஸ்” என்ற குழுவில் வருவதால் இது பற்றியும் நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இந்த மரத்தின் சிறப்பு வேகமாக வளர்வது. இன்னொன்று குறுக்காகவும் ருத்து வளர்வது. தண்ணீர் தட்டுப்பாட்டுக்கான வறண்ட பகுதிகளில் கூட வளரும். எப்படிப்பட்ட மோசமான மண்ணையும் தாங்கி வளரும்.

யூக்காலிப்டஸ் எண்ணெய்  என்று சொல்லப்படும் நீலகிரி தைலம் இதன் இலைகளில் இருந்து வடித்து எடுப்பது.

இந்த யூக்காலிப்டஸ் எண்ணெயில் மூன்று வகைகள் உள்ளன ஒன்று மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்துவது இரண்டு வாசனை திரவியமாய் பயன்படுத்துவது மூன்றாவது தொழிற்சாலைகளில் பயன்படுத்துவது.

இந்த நீலகிரி தைலம் உற்பத்தியில் உலக நாடுகளில் முதலிடம் வகிப்பது சைனா. உலகத்தில் மொத்த உற்பத்தியில் 75 சதவிகிதத்தை சைனா உற்பத்தி செய்கிறது. அத்துடன் சவுத் ஆப்பிரிக்கா, போர்ச்சுகல், ஸ்பெயின், பிரேசில், ஆஸ்திரேலியா ஆகிய  நாடுகளும் இந்த தைல உற்பத்தி செய்வதில் முக்கியமான நாடுகள்.

யூகாலிப்டஸ் தைல மரத்தின் பயன் பற்றி எழுத இன்னும் கூட நிறைய பக்கங்கள் தேவை. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை இது விலக்கப்பட்ட கனி, விலக்கப்பட்ட மரம்.

பல்வேறு மரங்களை ஆய்வு செய்து பார்க்கும் போது ஒரு கருத்து அல்லது உண்மையை பதிவு செய்ய விரும்புகிறேன்.

ஒரு நாட்டில் ஒரு மரம் மிகுந்த உபயோகமான மரம் இன்னொரு நாட்டில் அது இன்னல் தரும் களைமரமாக இருக்கலாம்.

இன்னொன்று எந்த மரங்கள் சுலபமாக, வேகமாக, எவ்வித கரிசனமும் இன்றி வளரும் எந்த மரமாக இருந்தாலும், அது நம் கவனத்தை ஏற்பதில்லை.

இன்னொரு செய்தி மிக பல ஆண்டுகளுக்கு முன்னால் அநேகமா 1992 93 ஆம் ஆண்டு வாக்கில் 30 மணி துளிகளுக்கு தைலமரங்கள் பற்றிய ஒரு டாக்குமென்டரி படம் எடுத்தேன். அதில் கூட இது போன்ற பல செய்திகளை பதிவு செய்துள்ளேன். மறைந்த என்னுடைய நண்பர்கள் கங்கைகொண்டான் எழுதிய கவிதை எனக்கு நினைவுக்கு வருகிறது "நெல் வயலில் ரோஜா செடி கூட களை தான்"

நான் நினைக்கிறேன் இந்தியாவிலேயே அதிகப்படியான விமர்சனங்களை வாரி சுமந்து கொண்டிருக்கும் மரம் யூக்காலிப்டஸ் மரம்தான். இதைவிட அதிகமான அளவு கல்லடி படுவது இன்னொரு மரம் அது உங்களுக்கு தெரியும் சீமைக்கருவை, அது பற்றி உங்கள் கருத்து என்ன ?

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...