Saturday, July 8, 2023

DWARF WILLOW TINIEST TREE IN THE WORLD. 242.உலகிலேயே சிறிய மரம் இதுதான் !

 

உலகிலேயே சிறிய மரம்
குள்ளமான வில்லோ !

உலகிலேயே சிறிய மரம் இது தான். இதன் பெயர் குள்ளமான வில்லோ மரம். இதன் உயரம் 1.6 சென்டிமீட்டர். ஆர்டிக் மற்றும் சப் ஆர்டிக் (ARCTIC AND SUB ARCTIC)சூழலில் வளரும் மரம்.

ஒன்னு புள்ளி ஆறு சென்டிமீட்டர் மட்டுமே உயரமாக இருக்கும் இந்த குள்ள வில்லோவை ஏன் ரம் என்று சொல்லுகிறார்கள் ? செடி என்று சொல்லலாமே ! உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். இதன் சிறப்பு அதிகப்படியான மிகையான குளிரைத் தாங்கி இருப்பதுதான்.

பொதுப்பெயர்: டுவார்ஃப் சாலிக்ஸ் வில்லோ (DWARF SALIX WILLOW)

தாவரவியல் பெயர்: சாலிக்ஸ் ஹெர்பேசியா (SALIX HERBACEAE)

தாவரக் குடும்பம்: சாலிகேசியே (SALICACEAE)

இந்தக் குள்ள வில்லோ மரங்கள் பரவி இருக்கும் இடங்கள் நார்த் அட்லாண்டிக், ஆசியா, ஐரோப்பா, கிரீன்லேண்ட், கனடா,  யூ எஸ் ஏ.

வாழிடம் மற்றும் வளரிடங்கள்: ஆல்பைன்,  சப் ஆல்பைன்,  மலை உச்சிகள், மலைப்பகுதிகள், குறிப்பாக ஐரோப்பியா மற்றும் வடஅமெரிக்காவின் உயரமான மலைப்பகுதிகள், குளிர்ச்சியான மற்றும் மண் ஈரம் காத்திருக்கும் மலைப்பகுதிகள், இதற்கு ஏற்புடைய சூழல்.

பயன்கள்: இந்த மரம் மருத்துவ பயனுடையது. பொதுவாக சாலிகேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்கள் அனைத்தும் மருத்துவ பயனுடையவை. அவசர கால உணவாகவும் (EMERGENCY FOODS) இதனை பயன்படுத்துகிறார்கள்.

வளைந்து நெளிந்து தரும் பண்புகள் இருப்பதால் இதன் தண்டுகளில் கூடைகள் செய்கிறார்கள். ஈரம் மிக்க பகுதிகளின் மண் கண்டத்தை நிலைப்படுத்த (STABILIZE THE WET SOIL)இதனை பயன்படுத்துகிறார்கள்.

பொதுவாக சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பல நூறு ஆண்டுகளாக மருத்துவத்தில் இதனை சிறந்த வலி நிவாரணியாக பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக முதுகுவலி, இடுப்புவலி, மூட்டுவலி ஆகியவற்றிற்கு சிறந்த வலி நிவாரணி இந்த குள்ள வில்லோ மரங்களின் இலை தழை, பட்டைகள் மற்றும் வேர்கள்.

இந்தியாவில் வில்லோ மரங்களை நமது வனப்பகுதிகளில் வளர்க்கிறார்கள். இமயமலையில் லாஹால் பள்ளத்தாக்கு பகுதியில்(LAHAUL VALLEY) விவசாயிகள் தங்கள் நிலங்களின் வளர்Kகிறார்கள். ஆனால் அவர்கள் வளர்ப்பது சாலிக்ஸ் ஃப்ரஜைலிஸ் (SALIX FRAGILIS)என்ற வகை மரம்.

சாலோ மற்றும் ஆசியர் மரங்கள்(SALLOWS & OSIERS)

வில்லோ மரங்களை சாலோ என்றும் ஆசியர் மரங்கள் என்றும் சொல்லுகிறார்கள். வில்லோ என்றால் இதில் 350 வகையான மரங்கள் இருக்கின்றன.

கிரிக்கெட் மட்டைகள் தயார் செய்யும் மரம்

காலம் காலமாக கிரிக்கெட் மட்டைகள் என்றாலே வில்லோ மரங்களில் தான் செய்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள். காஷ்மீர் பகுதியில் வில்லோ மரங்களில் ஏகப்பட்ட கிரிக்கெட் மட்டைகள் தயாராகின்றன. காஷ்மீரில் தயாராகும் இந்த கிரிக்கெட் மட்டைகளுக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட கிராக்கி உள்ளதாம். அதற்குக் காரணம் இங்கு வளர்க்கப்படும்  சாலிக்ஸ் ஆல்பா (SALIX ALBA)என்னும் வில்லோ மரங்கள்தான். இது பற்றி தனியாக ஒரு பதிவில் பார்க்கலாம். 

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...