Saturday, July 1, 2023

DURIAN FRUIT REVITALIZES YOUR SEXUAL LIFE 201. குழந்தை பாக்கியம் தரும் பழமரம் துரியன்

 

குழந்தை பாக்கியம் தரும்
பழமரம் துரியன் 


(DURIAN PAZHA MARAM, DURIAN, 
DURIO ZIBETHENUS, MALVACEAE)

தாவரவியல் பெயர்: துரியோ சிபிதீனஸ் (DURIO ZIBETHENUS)

தாவரக்குடும்பம் பெயர்: மால்வேசியே (MALVACEAE)

தாயகம்: தென்கிழக்கு ஆசியா

பொதுப்பெயர்: (DURIAN, DURIAN CAMPONG)

குழந்தை இல்லாதவர்கள் துரியன் பழத்தைக் தேடிப் போகிறார்கள்.  பழக்கடையில் கோவில் பிரசாதம் மாதிரி துரியன் பழத்தை பயபக்தியுடன் வாங்கிச் கொண்டு போகிறார்கள்.  துரியன் வேண்டும் என்றால் சொல்லி வைத்து வாங்க வேண்டும்.  முன்னதாக ரிசர்வ் செய்ய வேண்டும்.  ஆன்லைனில் கூட புக் செய்யலாம். 

கல்லார் - பர்லியாறு பழப்பண்ணையில் துரியன் பழங்கள்

கல்லார் - பர்லியாறு பழப்பண்ணையில், பல ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்திருக்கிறேன்.  பார்க்க மினி பலாப்பழம் மாதிரி இருக்கும்.  நாற்றம்தான் தாங்க முடியாது.  துரியன் பழம் சாப்பிட்டால் கண்டிப்பாய் குழந்தை பாக்கியம் உண்டாகும்  என்று நம்புகிறார்கள். அதனாலேயே கல்லார் பர்லியார் பழப் பண்னையில் ஒரே கூட்டம்.  பழம் இல்லை என்றால் கூட பரவாயில்லை.  மரத்தையாவது தொட்டுக் கும்பிடலாம்  என்று போகிறார்கள்.  கூட்டம் அலை மோதுகிறது. 

பர்லியாறு ஸ்டேட் ஹார்டிகல்ச்சர் பார்ம்’, ஊட்டி  கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.  மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் செல்லும் வழியில் அழைந்துள்ள சிறிய தோட்டக்கலைத்துறையின் பண்ணை.  திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 9.00 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிடலாம்.  ஐPலை ஆகஸ்டு ஆகிய இரண்டு மாதங்களில் இந்த பண்ணையில் துரியன் பழங்கள் கிடைக்கும்.

துரியன் பழங்களை ஆன்லைனில் வாங்கலாம்

ஆன்லைனில் கூட துரியன் பழங்கள் விற்பனை செய்கிறார்கள்.  ஒரு கிலோ 1200 ரூபாயிலிருந்து 1300 ரூபாய்வரை விலை செல்லுகிறார்கள்.  சிவப்பு தசை உள்ள துரியன் பழங்கள் இன்னும் அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.

அழுகிய வெங்காயம் மாதிரியான பழ வாசம்

பழங்களின் ராஜாவுக்கு சொந்த ஊர் தென்கிழக்கு ஆசியா.  இந்தப் பழத்தின் வாசனை எப்படி இருக்கும் ? அதற்கு மூன்று உதாரணங்கள் தருகிறார்கள். ஒன்று டர்பன்டைன். இரண்டு அழுகிய வெங்காயம். மூன்றாவது சாக்கடை: இதில் ஏதாவது ஒன்றுபோல இருக்கும். அந்தப் பழத்தை பயன்படுத்திய பின்னாலும் அதன் வாடை அந்த இடத்தில் பல நாட்கள் தொடருமாம்.  அதன் விதைகளை சாப்பிடலாம். ஆனால் சமைத்து சாப்பிட வேண்டும்.

பழங்களின் மீது முட்கள் இருப்பதால் அதற்கு துரியன் என பெயரிட்டார்கள்.  துரிஎன்றால் முள்.  துரிஎன்பது மலேசிய மொழி.

துரியனின் பல மொழிப் பெயர்கள்:

இந்தோனேசியா: தூரன் (DURAN)

ஐவானிஸ்: அம்பீட்டன் (AMBITAN)

சன்டானிஸ்: காடு (KADU)

மலேசியா: துரியன் கேம்பாங் (DURIAN KEMPONG)

பிலிப்பைன்ஸ்: துலியன் (DULIAN)

பர்மா: டு யின் (DU YIN)

கம்போடியா: தூ ரீன் (DU RIN)

லாவோஸ்: தோரியன் (DORIYAN)

தாய்லாந்து: துரியன் (DURIAN)

வியட்நாம்: சாவ் ரியங் (SAV RIYANG)

பார்க்க அசப்பில் மினி பலாப்பழம் போல இருக்கும்

துரியன் ஒர் ஆண்டில் ஒன்று அல்லது இரண்டுமுறை காய்க்கும்.  பூக்களின் மகரந்தசேர்க்கை முடிந்த மூன்றே மாதங்களில் பழம் தயாராகிவிடும். நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் வளர்ந்த மரங்கள் தான் காய்க்கத் தொடங்கும். 

சாரசரியாக ஒரு பழம் 30 செ.மீ நீளமும் 15 செ.மீ. விட்டமும் கொண்டதாக இருக்கும்.  ஒரு பழம் ஒன்று முதல் 3 கிலோ வரை கூட இருக்கும்.  பார்க்க அசப்பில் மினி பலாப்பழம் போலவே இருக்கும். 

ஆனால் பலாவுக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.  பழத்தின் மேல்தோல் பச்சையாக, மஞ்சளாக, இரண்டு கலந்த நிறமாக, சில இனம் காவிநிறமாக, சில சிவப்பு நிறமாகக்கூட இருக்கும்.

துரியன் பழமரங்களில், ரகங்கள் என பார்த்தால் தாய்லாந்தில் 300 ம், இந்தோனேசியாவில் 102ம் மலேசியாவில் 100ம் உள்ளன.  அதில் கீழ்கண்டவை மட்டுமே சாப்பிடுவதற்கு உரிய பழங்களைத் தரும் வகைகள் என தெரிந்தெடுத்துள்ளார்கள்.

துரியோ சிபிதீனஸ் (DURIAN ZIBETHINUS)

துரியோ டல்கிஸ் (DURIAN DUKIS)

துரியோ கிரேண்டிபுளோரஸ் (DURIAN GRANDIFLORUS)

துரியோ கிரேவியோலன்ஸ் ((DURIAN GRAVIYOLENS)

துரியோ குட்டின்சிஸ் (DURIAN KUTIGENSIS)

துரியோ மேக்ரந்தா(DURIAN MACRANTHA)

துரியோ ஆக்ஸிலியானஸ்  (DURIAN OXILIYANUS)

துரியோ செஸ்டுடினாரம் (DURIAN CHESTUDINARUM)

துரியன் பழம் சாப்பிட்டால் பிள்ளை பிறக்கும்

பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் எல்லாம் துரியன் பழங்களை விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.  அப்படி சாப்பிடும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இந்தியாவில் உள்ளது.  அதைப்போல, துரியன் பழங்களை இந்திய புனுகுப் பூனைகளுக்கும் ரொம்பப் பிடிக்குமாம். 

அதிலும் குறிப்பாக துரியன் வாசனை பூனையின் பெயரை துரியன் பழத்திற்கு வைத்திருக்கிறார்கள்.  இந்திய புனுகுப் பூனையின் அறிவியல் பெயர், விவரா சிபெத்தா (VIVERRA ZIBETHA).  துரியனின் தாவரவியல் பெயர் துரியோ சிபிதீனஸ். துரியன் பூக்கள் பெரியதாக இறகுகள் போல இருக்கும்.  கூடுதலாக தேன் சுரக்கும்.  மிகுதியான மகரந்தமும் தயாரித்து வைத்திருக்கும்.

ராட்சச தேனீக்களும் குகை வவ்வால்களும்

ஏபிஸ் டார்சேட்டா(APIS DORSATA) என்னும் ராட்சச தேனீக்களும் குகை வவ்வால்களில் ஈனிக்டெரிஸ்  வகைகளும் இந்த மகரந்த சேர்க்கைக்கு உதவியாக உள்ளன.

பல நூறு ஆண்டுகளில் பதியன், ஒட்டுகட்டுதல் போன்ற வழிகளில், தற்போது தாய்லாந்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட சாகுபடிக்கான துரியன் ரகங்கள் உள்ளன.

தாய்லாந்து ஆண்டுக்கு 7 லட்சம் டன் பழங்களை உற்பத்தி செய்து, உலகின் பெரிய துரியன் உற்பத்தியாளர் என்னும் பெருமை பெறுகிறது. சர்வதேச துரியன் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மே மாதம், தாய்லாந்து நாட்டில் சாந்தபுரி (SANTHAPURI) என்னும் இடத்தில் கொண்டாடப்படுகிறது.

துரியன் பழங்கள், நுகர்ந்தால் சொர்கம், முகர்த்தால் நரகம்

ரோஸ் பிஸ்கட், ஐஸ்கிரீம், மில்க் ஷேக், மூன்கேக்ஸ், கப்புசீனோ, யூல்லாக்ஸ் போன்றவைகளும் துரியன் பழத்திலிருந்து தயாரித்து விற்பனை செய்கிறார்கள். துரியன் பழங்களை பழங்களின் ராஜா என்று சொல்லுகிறார்கள். ஆனால் துரியன் பழங்கள், நுகர்ந்தால் சொர்கம், முகர்த்தால் நரகம் என்ற வாக்கியத்திற்கு மிகவும் பொருத்தமானது.

விமானங்களின் கேபின்கள், ஹோட்டல்கள், மற்றும் பொதுப் போக்கு வரத்துக்களில் தடை செய்யப்பட்டுள்ள ஒரே பழம் துரியன் மட்டும்தான்தான்.

கேரளாவின் பேக் வாட்டரிங் கால்வாய்கள்எல்லாவற்றின் கரையோரங்களிலும், துரியன் குடியேற ஆரம்பித்துள்ளது.  கூர்க், மகாராவுட்ரா மற்றும் கர்நாடகாவின் கடலோரங்களிலும், இப்போது துரியன் மெல்ல நுழைந்துள்ளது.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

   

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...