நோய்களை குணப்படுத்தும் பழமரம் நுங்கு ஆப்பிள் |
தாவரவியல்
பெயர்:கிரைசோபில்லம் கேனிட்டோ (CHRYSOPHLLUM
CANITO)
தாவரக் குடும்பம்:
சப்போட்டேசி (SAPOTACEAE)
பொதுப் பெயர்கள்:கெய்மிட்டோ, கோல்டன் லீப் ட்ரீ, மில்க் புரூட், சாட்டிங் லீப், ஸ்டார் ஆப்பிள், வெஸ்ட் இந்தியன் ஸ்டார் ஆப்பிள்(CAIMITO,GOLDEN LEAF TREE,MILK FRUIT, SATIN LEAF, STAR APPLE,
WEST INDIAN STAR APPLE )
தாயகம்: கிரேட்டர் ஆன்டில்லஸ் (GREATER ANTILES IN
CARIBBEAN)
ஸ்டார் ஆப்பிள்
மரத்தின் பழங்கள் பிரபலமானவை. பரவலான நோய்களை பாரம்பரிய
மருத்துவத்தின் மூலம் குணப்படுத்தக் கூடியவை. நல்ல தரமான மரங்களையும் தரக்கூடியவை. மேலும் அழகான மரமாகவும் பயன்படுத்தக்கூடிய ஒரு பலநோக்கு மரம்.
இதன் இலைகளும்
அபூர்வமான அழகுடையவை மேற்புறம் கவர்ச்சிகரமான நீலப்பச்சை நிறத்திலும் அடிப்புறம் அழகான தாமிர
நேரத்திலும் பளிச்சிடும் மரங்கள், வெப்ப மண்டல மற்றும் மித வெப்பமண்டலப் பகுதிகளில் 8 முதல் 20 மீட்டர் வரை உயரமாக
வளரும்.
இந்த மரத்தின்
சிம்புகள் கூட மரங்களின் அழகை கூட்டும் விதமாக இருக்கும். இளம் சிம்புகளும் குச்சிகளும் செங்காவி மற்றும் இளஞ்சிவப்பு
நிறத்திலும் இருக்கும்.
பழங்கள், கோள வடிவில் ஐந்து முதல் பத்து சென்டிமீட்டர் குறுக்களவு கொண்டதாக, பசுமை நிறத்தில் தொடங்கி, ஊதா நிறம் கலந்து பின் முழுமையான ஊதா நிறமாகவும், சில வெண்மை நிறமாக மெத்தெனவும், உட்புறம் தளதளவென நுங்கு போலவும், பிசின் போன்ற பால் கலந்ததாகவும், 6 முதல் 11 விதைகள் உடையதாகவும், கொஞ்சம் நார்த்தன்மை கொண்டதாகவும், லேசான இனிப்புடனும், மனதை ஈர்க்கும் சுவையுடனும் இருக்கும்.
இந்த மரங்கள் இந்தியாவில் தமிழ்நாட்டில் நீலகிரி பகுதியில் உள்ளன. மரங்களில் பிப்ரவரி மார்ச் மாதங்களில் பழங்களை அறுவடை செய்யலாம். ஒரு மரத்திலிருந்து ஒரு ஆண்டில் 70 கிலோ வரை பழங்களை அறுவடை செய்யலாம்.
இந்த ஸ்டார்
ஆப்பிள், இந்தியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா மற்றும் நார்த்தன் ஆஸ்திரேலியா, தைவான், ஃப்ளோரிடா ஆகிய இடங்களில் வெப்ப
மண்டல மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் காணப்படுகின்றன.
ஸ்டார் ஆப்பிள்
பழத்தில், கணிசமான அளவு விட்டமின் சி, விட்டமின் ஏ, சுண்ணாம்பு சத்து, மற்றும் பாஸ்பரச்சத்தும் அடங்கியுள்ளன. இதன் பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புகள் மற்றும் பற்கள் சம்பந்தமான பிரச்சனைகள் ஏதும் வராது.
இவை தவிர உடல் எடை
குறைக்க சர்க்கரை நோய், ரத்தசோகை, ஆகியவற்றை கட்டுப்படுத்தும் ஆரோக்கியமிக்க பழமும் கூட இது.
பாரம்பரிய மருத்துவ
முறைகளின் மூலம் வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு, வயிற்று வலி, மலேரியா காய்ச்சல், தோல் மீது ஏற்படும் சரும நோய்கள், மற்றும் பெண்களின் பால் உறுப்பில் ஏற்படும் நோய்களையும் இதன்
மூலம் கட்டுப்படுத்துகிறார்கள்.
இந்த ஸ்டார்
ஆப்பிள் பழத்தை யாராவது சாப்பிட்டு இருந்தால் நான் இந்த பழம் பற்றி எழுதியது சரியா
என்று சொல்லுங்கள்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment