வித்தியாசமான அழகு மரம்
விசிறி வாழை
(TRAVELLERS PALM)
1.தாவரவியல் பெயர்: ரேவி நலா மடகாஸ்கரியன்சிஸ் (RAVENALA
MADACASCARIENSIS)
தாவரக் குடும்பம்: ஸ்டெரிலிட்சியேசீ (STERELITSEACEAE)
பொதுப்பெயர்: டிராவலர்ஸ் பாம் (TRAVELLERS PALM)
பெரும்பாலும் பொது இடங்களில் வளர்க்கப்படும் அழகு மரம் இதனை அழகு
மரம் என்பதை விட அலங்கார மரம் என்று சொல்லலாம் முதன் முறையாக பார்ப்பவர்கள் நின்று
பார்த்துவிட்டு போகும் அளவுக்கு வித்தியாசமான அழகு மரம்.
பேரில் கூட ஒரு வித்தியாசம் உண்டு விசிறிப்பினை என்றும் ஆங்கிலத்தில்
டிராவலர்ஸ் ஃபார்ம் என்றாலும் இது பனைமரம் அல்ல பனைமரம் என்றால் இது அரிகேசி என்ற
தாவரக் குடும்பத்தை சேர்ந்ததாக இருக்கும்.
இதன் இலைகள் வாழை போல இருப்பதால் தமிழில் இதனை விசிறி வாழை என்றே
சொல்லுகிறார்கள். ஆனால் இது உண்மையில் இது வாழை இனத்தையும் சேர்ந்தது அல்ல. வாழை
என்றால் இது மூசேசி என்ற குடும்பத்தை சேர்ந்ததாக இருக்கும். ஆக இது வாழையும் அல்ல.
இதன் பூக்கள் பார்க்க பசுமையாக இருக்கும் ஆனால் இதன் விதைகள் கவர்ச்சிகரமான
நீல நிறத்தில் பளிச்சென்று இருக்கும் இயற்கையாக வேறு எந்த தாவரத்தின் விதியும்
அதிகமாக நீல நிறத்தில் இருக்காது என்று சொல்லுகிறார்கள் ஆனால் நீல விதை உள்ள மரம்
இந்த விசிறி வாழைமரம் என்பதில் இது ஒரு தனி சிறப்பு உடையது என்கிறார்கள்.
இந்த மரங்கள் வெப்ப மண்டல மற்றும் மித வெப்பமண்டல பகுதிகளில் வளரும்.
மடகாஸ்கரில் 100 அடி உயரம் வளரக்கூடிய மரங்களும் உள்ளன.
வரிசையாக உயரமாக விசிறி போல நிற்கும். மிக நீளமான இலை காம்புகளில் இதன் இலைகளும்
நீளமான வாழை இலை போல இருக்கும்.
இதன் இலை காம்புகள் அதிகபட்சமாக 36 அடி வரை கூட இருக்கும் அநேகமாக 36 அடி இலைக்காம்புகள் உள்ள மரம் உலகில் வேறு எந்த மரமும் இருப்பதாக
தெரியவில்லை.
சராசரியாக இந்த மரங்கள் 23 அடி உயரம் வரை
வளரும்.
ஒரு போனஸ் செய்தி: பேர்ட் ஆப் பேரடைஸ் என்ற பிரபலமான அழகுச் செடியும் கூட இதே தாவர குடும்பத்தை சேர்ந்ததுதான் என்பது.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU
CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED
INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment