பாலைவன ரத்த சிவப்பு மரம்
(DESERT BLOOD WOOD TREE)
வணிகரீதியில்
முக்கியத்துவம் வாய்ந்த மரம், கினோ பிசினை தரும் மரங்களில் முக்கியமானது, ஆஸ்திரேலியாவின் பாலைவனப் பகுதிகளிலும் தாழ்வான
மலைச்சரிவுகளிலும் வளரும், இந்தப் பிசினை
பழங்குடிகள் மூலிகையாக பயன்படுத்துகிறார்கள், கங்காரு உட்பட பல பிரணிகளின் தோலினைப் பதனிட இந்தப் பிசின் பயனாகிறது,
தாவரவியல் பெயர்: கொரிம்பியா ஒபேக்கா (CORYMBIA OPACA)
தாவர குடும்பத்தின்
பெயர்: மிர்டேசி (MYRTACEAE)
தாயகம்
ஆஸ்திரேலியா.
வணிகரீதியில்
முக்கியத்துவம் வாய்ந்தது, கினோ பிசினை தரும் மரங்களில்
முக்கியமானது, இந்த டெசர்ட் பிலட்வுட் என்று சொல்லப்படும்
பாலைவன ரத்த சிவப்பு மரம்.
இந்த
மரத்திலிருந்து சேகரிக்கப்படும் புஷ்கோகனம் என்பவை மத்திய ஆஸ்திரேலியாவில் வசிக்கும்
பழங்குடி மக்களின் மிக முக்கியமான உணவில் ஒன்று இது.
இந்த மரங்கள்
ஆஸ்திரேலியாவின் பாலைவன பகுதிகளிலும், வண்டல் மண் பிரதேசங்களிலும், தாழ்வான மலைச்சரிவுகளிலும் வளர்கின்றன.
5.8 முதல் 10 மீட்டர் உயரம் வரை வளரும், இந்த மரங்கள் முரட்டு தன்மை உடைய பட்டைகளைக் கொண்டவை, மேலும் அந்த பட்டைகளின் ஊடாக இரத்த சிவப்பு நிறத்தில் இந்தப் பிசின் வடியும்.
மரத்திலிருந்து
பட்டைகளை செதுக்கி எடுக்கும்போது அந்த மரத்தில் ஏற்படுத்தும் காயங்களின் மூலமாக
இந்த சிவப்பு கினோபீசின் வடியும். இந்த கினோபிசின் வழிவது காயங்களில்
இருந்து வடியும் ரத்தம் போலவே இருக்கும்.
இந்த மரத்தின் கினோ
பிசினை பழங்குடி மக்கள் பலவிதமான நோய்களை குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள் அது
மட்டும் இன்றி அவர்கள் கங்காரு மற்றும் இதர பிராணிகளின் தோலினை பதப்படுத்தவும்
இந்த பிசினை பயன்படுத்துகிறார்கள்.
பல்வேறு மரங்கள்
மற்றும் தாவரங்களிலிருந்து சேகரிக்கப்படும் தாவர வகை பிசின்களுக்கான பொதுவான பெயர்
கினோபிசியின் என்பது.
பொதுவாக ரத்த
சிவப்பு மர வகைகள் இந்த கிலோ பிசினை தருகின்றன, குறிப்பாக யூக்கலிப்டஸ் என்னும் தாவர குழுமத்தில் உள்ள சில மர வகைகளும், டெரோகார்ப்பஸ் என்னும் தாவர குழுமத்தில் இருக்கும் சில மர வகைகளும் இந்த ரத்த
சிவப்பு மரங்கள் என்று சொல்லுகிறார்கள்.
நம்ம ஊர் செஞ்சந்தனம், வேங்கை மற்றும் சவுக்கு ஆகிய மரங்களும் இந்த பிளட் வுட் ட்ரீஸ் என்ற வகைக்குள் அடங்கும். அதனால் இந்த மரங்களில் எடுக்கும் பிசின்
கூட கினோ பிசின் என்று விற்பனை ஆகிறது என் நினைக்கிறேன். இதுபற்றி உங்களுக்கு
தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment