கிறிஸ்து ஏசுவின் சரித்திர மரம் ஜூடாஸ் |
ஜூடாஸ் என்ற
பெயர் உலகம் முழுவதும் பிரபலமான பெயர், கிறிஸ்து இயேசுவை
காட்டிக் கொடுத்து, அவரை
சிலுவையில் அறைய காரணமாக இருந்தவன் தான் ஜூடாஸ். தான்
செய்த காரியம் தவறு என உணர்ந்து ஒரு மரத்தில் அவனே தூக்கிலிட்டு கொண்டான் ஜூடாஸ். அதனால்
தான் இந்த மரத்தை ஜூடாஸ்
மரம் (JUDAS TREE) என்று அழைக்கிறார்கள். இது தெற்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவிற்கு
சொந்தமான மரம்.
அந்த
சூடாஸ் மரத்தின் பொது பெயர்கள், தாவரவியல் பெயர், மற்றும் அந்த மரம் எப்படி உபயோகமாகிறது,
என்றெல்லாம் பார்க்கலாம்.
இந்த
மரத்தின் பொது பெயர்கள், ஜூடாஸ் ட்ரீஸ், ரெட்பட் ட்ரீஸ், மெடிட்டரேனியன்
ரெட்பட், லவ் ட்ரீ (JUDAS TREE, RED BUD TREE,
MEDITARANEAN REDBUD TREE, LOVE TREE)
இதன்
தாவரவியல் பெயர் செர்சிஸ் சிலிகுவாஸ்ட்ரம்
(CERCIS SILIQUASTRUM), இதன்
பொதுப்பெயர் ஜூடாஸ் மரம்,
இதன்
தாவரக்குடும்பம்,ஃபேபேசி (FABACEAE)
ஜூடாஸ்
மரம் அழகான பூ மரம், உணவாக பயன்படும், மற்றும் உடல்
நோய்களை குணப்படுத்தும் மூலிகை மரம். எல்லாவற்றிற்கும் மேலாக கிறிஸ்து இயேசுவின்
சரித்திரம் உடன் சரித்திரத்துடன் தொடர்புடைய ஒரு மரம். சுற்றுச்சூழலை மேம்படுத்தும் மரமாக வளர்க்கப்படும்
மரம்
இந்தியாவில்
காஷ்மீர் நகரில் பல தோட்டங்களில் ஜூடாஸ் மரங்களை வளர்க்கிறார்கள்.
காஷ்மீரில் பொதுவான பூந்தோட்டங்கள் அனைத்திலும் ஜூடாஸ் மரங்களை பார்க்கலாம்.
முக்கியமாக
ஊதா நிறத்திலும் கொஞ்சம் சிவப்பு நிறமும் கலந்த மாதிரியான பூக்கள்
பிரமிக்கும்படியான அழகானவை. அடிமரம்
கிளைகள் சிறுசிறு சிம்புகள் என எந்த பாகுபாடும் இன்றி பூக்களை வைத்து யாரோ
அலங்காரம் செய்த மாதிரி இருக்கின்றன இந்த
மரங்கள்.
.ஒரு சில
மரங்களை பார்த்தவுடன் நமது தோட்டத்தில் வைத்தால் என்ன என்று தோன்றும் அப்படிப்பட்ட
மரங்களில் ஜூடாஸ் மரமும் ஒன்று.
ஜூடாஸ்
மரங்கள் இலை உதிர்க்கும் மரம், 10 மீட்டர்
உயரம் வரை வளரும். 12 சென்டிமீட்டர்
நீளமான அல்லது அதைவிட அகலம் அதிகமாக உள்ள சிறு
நீரகம் போன்ற வடிவம் உள்ள இலைகள்.
ஊதா ரோஜா மற்றும் சிவப்பு நிறம் கலந்த கண்களுக்கு விருந்து தரும் பூக்கள், பழைய கிளைகளில் இருந்து பூக்கும், பூக்கள் இதன் நெற்றுக்கள் ஏறத்தாழ பூக்களின், அல்லது அதைவிட கொஞ்சம் குறைவான அளவில் இருக்கும்.
பயன்கள்
மரத்தின்
வேர்கள் இலைகள் பழங்கள் விதைகள் இளம் தளிர்கள், பூக்கள்
அனைத்தும் உணவாக பயன்படுகிறது.
புளிப்பு
சுவை கொண்ட பழங்களின் தசை
வெண்மையாக, மாவு போலவும் நன்கு முற்றிய
கனிகளில், வைட்டமின் சி மற்றும் பி12 ஆகிய ஆகியவை நிறைந்து இருக்கின்றன.
இதிலிருந்து
தயார் செய்யும் பழச்சாறு லெமனேட் (LEMONADE)போல
சுவையாக இருக்கும்.
இதன்
பூக்களை சாப்பிடலாம், காய்கறியாகப்
பயன்படுத்தலாம்.
இந்த
மரத்தின் பலவிதமான பாகங்களையும் சிறந்த வலி நிவாரணியாக
பயன்படுத்துகிறார்கள். இதன் பட்டைகளைப்
பயன்படுத்தி தலைவலி மற்றும்
புளூ
காய்ச்சல் (FLU FEVER) ஆகியவற்றையும்
குணப்படுத்துகிறார்கள்.
வளரியல்புகள்
சுமார் 30 அடி உயரம் வரை வளரும் சிறிய மற்றும்
நடுத்தரமான பூமரம்,
வேண்டாம்
வேண்டாம் என்று சொல்லும் அளவு ஊதா நிற பூக்களை கொத்துக்கொத்தாய் பூத்துத் தள்ளும்.
இலைகள்
இதய வடிவில், ஆழ்ந்த பச்சை நிறமாக இருக்கும். இதன்
காய்கள் அடர்த்தியான சிகப்பு நிறத்தில் இருக்கும். ஆழமான
வடிகால் வசதி கொண்ட மண்ணில் நன்கு வளரும். சுக்காம்பாறைகள் நிறைந்த மண்ணில் கூட
வளரும்.
தட்பவெப்பநிலை
குளிர்ச்சியான
வெப்பநிலை உடைய இடங்களில் வறட்சியை தாங்கி வளரும் கடலோர பகுதிகளில் உள்ள
தோட்டங்களில் வளர்க்கலாம். உணவாக பயன்படும். இதன்
பூக்கள் சிறிய மற்றும் பெருஞ்சாலைகளில் நிழல் மரமாக வளர்க்கலாம்.
நகர்ப்புற
தோட்டங்களில் பூங்காக்களில் அழகு மரங்களாக வளர்க்கலாம்.
தொடக்க
காலங்களீல் இதன் மரங்களின் பூக்கள் வெண்மையாகத் தான் இருந்தன,
ஆனால். ஜுடாஸ்
தூக்கில் தொங்கிய பின் தான், இந்தப் பூக்கள்
சிவப்பாக ஊதா நிறமாக மாறியது என்று சொல்லுகிறார்கள்.
இந்தப்
பூக்களின் நிறமும் பைசாண்டின்
இன மன்னர்கள் (BYZANTINE
RULERS)அணியும் உடைய நிறமும் ஒன்று. இந்த ஊதா நிறம் செல்வம மற்றும்
அதிகாரத்தின் அடையாள
நிறம். பைசாண்டிய
மன்னர்கள் ஒரு காலத்தில் துருக்கியில் அரசாட்சி
செய்தார்கள், அந்த சமயம் மன்னர்கள்
மட்டுமே இந்த ஊதா நிறத்தில் மட்டுமே ஆடை அணிகலன்களை அணியலாம்.
பேரரசில் மட்டுமே இந்த ஆடை அணிகலன்களை அந்த நேரத்தில் அணியலாம். அப்படி ஒரு சட்டம்
அப்போது இருந்ததா இந்த சட்டம் பல நூற்றாண்டு வரை துருக்கி தேசத்தில் அமலில்
இருந்தது.
பாலஸ்தீனத்தின்
மூலிகை மரம்
ஜூடாஸ்
மரம் பாலஸ்தீனத்தில் பாரம்பரிய மூலிகை மரமாக அறிவிக்கப்பட்டுள்ளது அது போல இஸ்ரேல்
நாட்டில் பாதுகாக்கப்பட்ட மரமாகவும் இதனை அறிவித்துள்ளார்கள்.
ஜூடாஸ்
மரத்தின் சொந்த ஊர்
ஆப்கானிஸ்தான்
அல்பேனியா பல்கேரியா பிரான்ஸ் கிரீஸ் ஈரான் ஈராக் இத்தாலி லெபானான்
சிரியா பாலஸ்தீனம் துருக்கி மற்றும் யூகேஸ்லேவியா..
அறிமுகம்
செய்யப்பட்ட நாடுகள்
அல்ஜீரியா ஆஸ்திரியா
இந்தியா மொராக்கோ பாகிஸ்தான் போர்ச்சுக்கல் ருமேனியா
தெற்கு ஆஸ்ரேலியா தஜிகிஸ்தான் துனீசியா துருக்மேனிஸ்தான்
உக்கிரேன் மற்றும் உஸ்பெகிஸ்தான்.
அன்பின்
இனிய நண்பர்களே ஜூடாஸ் மரம் பற்றி கூடுதலாக சுவாரஸ்யமான செய்திகள் ஏதும்
உங்களுக்கு தெரிந்திருந்தால் எனக்கு சொல்லுங்கள் நன்றி
I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment