சாரப்பருப்பு இல்லாத தின்பண்டங்களா ? |
CHERAUNJI A HEALTHY DRY FRUIT TREE |
தாவரவியல்
பெயர்: புச்னானியா லேன்சன்
(BUCHNANIA LANSAN)
தாவரக்குடும்பம்: அனாகார்டியேசி (ANACARDIACEAE)
சாரப்பருப்பு
இந்தியாவிற்கு சொந்தமான உலர்கொட்டை
மற்றும் மருத்துவ மரம், இயற்கையான மருத்துவ முறைகளுக்கு உதவும் பிரபலமான மரம். பொது
பெயர்: அல்மான்டெட் ட்ரீ,
செரோஞ்சி (ALMONDET TREE,
CHERONJEE)
பலமொழிப்
பெயர்கள்:
தமிழ்:
கொற்கை, சாரப்பருப்பு (KORKAI, SARAPARUPPU)
மலையாளம்:
மியூரல், பிரியாலம் (MURAL, PRIYALAM)
தெலுங்கு:
சாரா, சாரப்பருப்பு (SARA, SARAPARUPPU)
ஹிந்தி:
பியால், பியார் (PIYAL, PIYAR)
சாரப்பருப்பு
மரத்தை சேரஞ்சி மரம் என்றும் அல்மாண்டட் மரம் (CHAURANJEE
& ALMONDET TREE)என்றும் சொல்லுகிறார்கள்.
பரவி
இருக்கும் இடங்கள்:
லாவோஸ்
பர்மா தாய்லாந்து இந்தியா வியட்நாம் மற்றும் யுனான் ஆகிய இடங்களில் சாரபருப்பு
மரம் பரவியுள்ளன.
நடுத்தரமான
மரம் சாரப்பருப்பு மரம். நடுத்தரமான பசுமை மாறாமரம். அதிகபட்சமாக 18 மீட்டர் உயரம் வரை வளரும்.
இந்த
மரம் செங்குத்தாக நேராக வளரும். இதன் கிளைகள் ரோமங்களால் மூடி இருக்கும். இந்த
மரத்தின் பூக்கள் மிகவும் சிறியவை. அவை வெளியே பச்சை நிறமாக இருக்கும்.
ஜனவரி
முதல் மார்ச் வரையான
மாதங்களில் இவை பூக்கும். இதன்
பழங்கள் தொடக்க காலத்தில் பசுமையாக இருக்கும். அதன்
பின்னர் ஊதா நிறமாகவும் கருப்பு நிறமாகவும் மாறும்.
இந்த
பழங்கள் முதிர்ச்சியடைய நான்கு முதல் ஐந்து மாதங்கள் ஆகும் இவற்றை ஏப்ரல் மற்றும் மே
மாதங்களில் அறுவடை செய்யலாம்.
சாரப்பரப்பினை
அப்படியே சாப்பிடலாம். அவை
ஏறத்தாழ பாதாம் பருப்பு மாதிரி சுவையாக இருக்கும். உணவு
பதார்த்தங்களில் சேர்க்க அதனை மாவாக்கி
பயன்படுத்துகிறார்கள்.
சிறப்பான
அம்சங்கள், இந்தியாவில் தயாராகும் இனிப்பு வகைகள், தின்பண்டங்கள்
மற்றும் மிட்டாய்கள் தயாரிப்பில்(SWEETS,
SAVOURIES & CONFECTIONARIES) பாதாம் பருப்பிற்குப்
பதிலாக சாரப்பருப்பினை
பயன்படுத்துகிறார்கள்.
உணவுப் பொருட்கள் தயாரிப்பில் பெரும்பாலும் பாதாம் பருப்பிற்கு பதிலாக சாரப்பருப்பை பயன்படுத்தும் பழக்கம் நம்மிடையே உள்ளது.
மருத்துவ
பயன்கள்
வயிற்றுப்போக்கால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு சாரப்பருப்பு தந்து சிகிச்சை தருகிறார்கள்.
சாரப்பருப்பின்
இலைகளை சர்க்கரை நோயை குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள்.
வாயில்
ஏற்படும் புண்களை குணப்படுத்த இந்த மரத்தின் வேர்களை உபயோகப்படுத்துகிறார்கள். இதில் புண்களையும் காயங்களையும் குணப்படுத்தும் பண்புகள் உள்ளன.
மூக்கடைப்பு,
சுடுநீரில் இதன் எண்ணைத் துளிகளை
விட்டு அந்த ஆவியை பிடிப்பது மூலம் மூக்கு மற்றும் மார்பில் ஏற்படும் அடைப்பினை
சரி செய்யலாம்.
சருமப்
பாதுகாப்பு, சாரப்பருப்பு எண்ணையை உலர்ந்த
சருமத்திற்கு
ஈரப்படுத்தியாக (MOISTURIZER)பயன்படுத்தலாம். இது ஒரு
சரும பாதுகாப்பு மருந்தாகவும் பயன்படும் தைராய்டு சுரப்பிகளின் வீக்கத்தையும் சரி
செய்யும் பண்புகள் இதில் அடங்கியுள்ளன.
சாரப்பருப்பை
உணவில் சேர்த்துக் கொள்வது ஆண்மை பெருக்கியாக உதவும்.
சாரப்பருப்பில்
புரதம் நார்ச்சத்து விட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் கணிசமான அளவில் உள்ளன.
பரவி
இருக்கும் இடங்கள்
இந்தியாவின்
வடபகுதி மத்திய பகுதி மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள வெப்ப மண்டல காடுகளில்
இயற்கையாக சாரப்பருப்பு பரவியுள்ளன.
சாரப்பருப்பு
சாகுபடி
ஆழமான
நல்ல வடிகால்
வசதி கொண்ட இருமண்பாடான
மண் வகை இதற்கு ஏற்றது. வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப
மண்டல பகுதிகளில் சாரப்பருப்பு மரங்கள் நன்றாக வளரும்.
சாரப்பருப்பு
உற்பத்தி செய்யும் இந்திய மாநிலங்கள்
மத்திய
பிரதேசம் ஜார்கண்ட் சத்தீஷ்கர்
ஒரிசா அசாம் பீகார் உத்தர பிரதேசம் குஜராத் மேகாலயா மற்றும் மகாராஷ்டிரா
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment