Saturday, July 8, 2023

CANARY ISLAND DATE PALM 241.கேனரித்தீவு பேரீச்சை

 

  

கேனரித்தீவு
பேரீச்சை

பொதுப்பெயர்: கேனரி ஐலேண்ட டேட்பாம்

தாவரவியல் பெயர்: (PHOENIX CANAERIENSIS)

தாவர குடும்பம்: அரிகேசி (ARECACEAE)

ஸ்பானிஷ் மொழி பேசும் நாடுகளில் பல்மீரா கேனரியா (PALMERA CANARIA)என்பதை இதன் பொதுப்பெயர்.

ஐரோப்பியன் யூனியனை சேர்ந்தவை தான் இந்த கேனரித்தீவுகள், இவை அட்லாண்டிக் சமுத்திரத்தின் தீவுகள், இவை ஆப்ரிக்க எல்லயிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

கேனரித்தீவுகளுக்கு சொந்தமான இந்த பேரீச்சை பனை உலகம் முழுவதும் பரவியுள்ளது. கேனரித்தீவு பேரீச்சை என்று இதனை அழைக்கிறார்கள். இவை ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தீவுகள். இந்த தீவுகளின் மொத்த பரப்பளவு 7,493 சதுர கிலோமீட்டர் மட்டுமே.

கேனரித்தீவுகள் என்றால் முக்கியமாக ஏழு தீவுகளைத்தான் குறிக்கும். இவை தவிர பல சிறு தீவுகளும் இதில் அடங்கும்.

ஆப்பிரிக்கா, தென் மெரிக்கா, வட அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நான்கு கண்டங்களில் ஏறத்தாழ நடுப்பகுதியில் அமைந்துள்ளது இந்த கேனரித் தீவுகள்.

கேனரித்தீவு பேரீச்சையின் வளரியல்பு

தனித்தனி மரங்களாக, அதிகபட்சம் 66 அடி உயரம் வளரக்கூடியவை, 75 முதல் 125 அழகான மட்டைகளைக் கொண்டிருக்கும்.

பழங்கள் கோள வடிவில் மஞ்சள் முதல் ஆரஞ்சு நிறங்களில் ஒரு சென்டிமீட்டர் குறுக்களவு  கொண்டவைகளாய்,  உண்ணக்கூடிய பழத்தசையுடன்,  பெரிய ஒற்றைக் கொட்டையுடன் இருக்கும். பழங்கள் பேரிச்சை போல அவ்வளவு சுவையாக இருக்காது.

கேனரித்தீவு பேரீச்சை மரங்கள் அதிக குளிர் இல்லாத இடங்களில் சாகுபடி செய்யலாம். வெப்பநிலை 10 முதல் 12 டிகிரி சென்டிகிரடுக்கு கீழே குறையாமல் இருக்க வேண்டும்.

கேனரி பேரிச்சை மரங்கள் மிகவும் மெல்ல வளரும். இதனை விதைகள் மூலமாக மட்டுமே புதிய கன்றுகளை உருவாக்க முடியும்.

கேனரி தீவுகளில் லா குபேரா (LA GOMERA)என்ற தீவில் மட்டுமே இந்த மரத்திலிருந்து சாறு இறக்கி அதில் பாகு தயார் செய்கிறார்கள். 

பரவி உள்ள இடங்கள்

இந்த கேனரித்தீவு பேரீச்சை மரங்கள் அழகு மரங்களாக உலகம் முழுவதும் பரவி உள்ளன. ஆயினும் அமெரிக்காவில் ஃப்ளோரிடா மற்றும் மெக்சிகோ வளைகுடா பகுதிகளிலும் அதிகம் பரவியுள்ளன.

கேனரித்தீவு பேரீச்சை மரங்களில் அதன் பழங்கள், நேரடியாக மரங்களோடு பொருந்தி உள்ளவையாக இருக்கும். சாதாரண பேரிச்சை மரங்களில் பழக்குலைகள் தனியாக ஒரு காம்புடன் தொங்கிக் கொண்டிருக்கும். ஆச்சரியமான வித்தியாசம், ஆனால் இந்த பழங்கள் சிறியவை சுவை அதனுடன் ஒப்பிட முடியாது.

கேனரி ஐலேண்ட் பெயர் காரணம்

கேனரி ஐலண்ட் என்ற பெயர் ஏன் வந்தது உங்களைப்போல எனக்கும் ஆர்வமாக இருந்தது. தெரிந்து கொண்டபோது உண்மையாக ஆச்சரியமாக இருந்தது.து எதிர்பாராத ஒரு செய்தியாக இருந்தது. அந்த காரணத்தை சொல்கிறேன். கேனரி என்பது ஒரு லத்தின் மொழிச் சொல். லத்தீன் மொழியில் இதனை இன்சுலா கேனரியா (INSULA CANARIYA)என்கிறார்கள் அப்படி என்றால் நாய்களின் தீவு என்று அர்த்தமாம்.

நாய்களின் தீவுகள் என்று சொல்லப்படும் கேரித்தீவுகளில் இருக்கும் இன்றைய மொத்த நாய்களின் எண்ணிக்கை 5,92,322, இவற்றுள் ஒரு லட்சத்து 1,01,043 வேட்டை நாய்கள், 27,833 நாய்கள் மிகவும் அபாயகரமான நாய்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம்.

இதில் சொல்லப்பட்ட செய்திகள் புதியதாக உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நான் நம்புகிறேன். உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள், பதிவிடுங்கள், அன்புகூர்ந்து, நன்றி  வணக்கம்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

 

1 comment:

V.Sambasivam said...

Very useful information. I forwarded to many of my friends.
Sambasivam

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...