கேபேஜ் பாம் எனும் முட்டைக்கோஸ் பனை |
கேபேஜ்
பாம் என்னும்
பனையின் வேர்கள், மரத்தின் குருத்துப்பகுதி, இலைகள், அனைத்தையும் முட்டைக்கோஸ் வாசனையுடன் சாப்பிடலாம், பழங்கள் பறவைகளுக்கு உணவாகும், அமெரிக்காவுக்கு
சொந்தமான மரம்,
கார்டிலைன் ஆஸ்டிரேலிஸ்
(CORDYLINE AUSTRALIS)
பொதுப்பெயர்
கேபேஜ் பாம்(CABBAGE PALM)
தாவரக்
குடும்பம்: ஆஸ்பரேகேசி (ASPARAGACEAE)
தாயகம்: ஃபுளோரிடா (FLORIDA), ஃபுளோரிடா மற்றும் வட கரோலினாவின் அரசு மரம்.
வளர
இயல்புகள்:
கேபேஜ் பாம்
பனை மரங்கள் அதிகபட்சமாக 66 அடி
உயரம் வரை வளரும்.
இதன்
இலைகள் உருவிய வாள் போல
நீளமாக இருக்கும். கிளைகளின் நுனிப்பகுதியில் இலைகள் கொத்துக் கொத்தாக குவிந்திருக்கும்.
மரங்கள் 56 அடி உயரம் வரை வளரும். இதுவரை அதிகபட்சமாக 400 முதல் 500 ஆண்டுகள் என இந்த மரத்தின் வயது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்
அடி மரத்தின் சுற்றளவு அதிகபட்சமாக 30 அடி வரை இருக்கும்.
பயன்கள்:
இதன்
பழங்களை கேறுரு புறா, மற்றும்
நியூசிலாந்தின் இதர பறவைகளுக்கும் உணவாகிறது.
நாட்பட
உழைக்கும் படியான நார்களை இந்த மரங்களில் இருந்து எடுக்கிறார்கள். இதனை
நெசவுத் தொழிற்சாலைகளில் துணி
நெசவுக்கு பயன்படுத்துகிறார்கள்.
நங்கூரக்
கயிறுகள், மீன்வலைக்
கயிறுகள், கூடைகள், மற்றும் பலவகைப்
பொருட்கள் செய்ய உபயோகமாகிறது.
வளரிடங்கள்:
இது
பரவலான இடங்களில் வளரும். வனங்களின்
ஓரப்பகுதிகள், ஆற்றங்கரைகள், சேரும் சகதியாக இருக்கும்
நஞ்சை நிலங்கள் ஆகிய
இடங்களில் பிரச்சனை இன்றி வளரும். தோட்டங்கள், பூங்காக்கள், சாலைகள் ஆகியவற்றில் அழகுக்காக இந்த மரங்களை வளர்க்கிறார்கள்.
வட
அமெரிக்காவின் மேற்கு கடலோரப் பகுதிகள், கனடா,
பிரிட்டிஷ் உருவாக்கிய இடங்களில் இதனை
வளர்க்கிறார்கள்
பூக்கள்
ஆறு
முதல் 10 ஆண்டுகள்
வளர்ந்த மரங்கள் பூக்க ஆரம்பிக்கும். முதல் பூவுக்கு பின்னர் மரத்தின்
தலைப்பகுதியில் நிறைய கிளைக்கும்.
பூங்கொத்துக்கள்
6 முதல் 10 சென்டிமீட்டர் நீளம் இருக்கும். இந்த
பூக்களில் தேன் நிறைய இருக்கும். அதனால் இவை பூச்சிகளை அதிகளவில் கவர்ந்து இழுக்கும். இலைகள்
உருவிய வாள் போல்
இருக்கும். இதன் இலைகள் இளம்
பசுமை மற்றும் கரும்
பச்சை நிறமாக இருக்கும், 40 முதல் 100 சென்டிமீட்டர் நீளமும், 3 முதல் 7 சென்டிமீட்டர் நீளமாகவும் இருக்கும்.
பழங்கள்:
பழங்கள்
வெண்மை நிறமாக இருக்கும். ஐந்து முதல் ஏழு சென்டிமீட்டர் நீளமாக
இருக்கும்.
விதைகள்;
ஒவ்வொரு
பூங்கொத்திலும்
5000 முதல் 10 ஆயிரம் பூக்கள் இருக்கும். ஒரு
பெரிய பூங்கொத்தில்,
அதிகபட்சமாக 40 ஆயிரம்
விதைகள் வரை இருக்கும்.
கேபேஜ்
பாம் நியூசிலாந்துக்கு உரிய மரம் என்றாலும், இது தமிழ்நாடு
முழுக்க அழகு மரமாக பயன்படுத்துகிறார்கள்.
இதன்
படத்தைப் பார்த்தால் உங்களுக்கு தெரியும், இது என்ன மரம் என்று. இது பற்றி வேறு
ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் நன்றி வணக்கம்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED
INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment