வீடுகளில் வளர்க்க அழகு மரம் மூங்கில்பனை |
பறவைகளுக்கு பழங்கள் தருவதில் இது ஒரு வேடந்தாங்கல். இந்த மரத்தை வளர்ப்பதினால் அந்த இடத்தில் இருக்கும் காற்றை சுத்தப்படுத்தும். நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தாரால் நடத்தப்பட்ட சோதனையில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பாக சைலின் மற்றும் டொல்யூன் (XYLENE, TOLLUNE) போன்ற நச்சு வாயுக்களை காற்றிலிருந்து வடிகட்டி சுத்தம் செய்கிறது.
(BUTTERFLY PALM TREE)
தாவரவியல் பெயர்:
கிரை சாலிடோ கார்பஸ் லூட்டிசென்ஸ் (CHRYSALIDOCARPUS LUTESCENS)
தாவர குடும்பப்
பெயர்: அரிகேசியே (ARECACEAE)
பொதுப் பெயர்கள்:
கோல்டன் கேன் பாம், அரிக்கா பாம் ,
எல்லோ பாம், பட்டர்ஃபிளை பாம், பேம்பு பாம் ட்ரீ (GOLDEN CANE PALM, ARECA PALM, YELLOW PALM,
BUTTERFLY PALM, BAMBOO PALM TREE)
தாயகம்:இந்தியா
மற்றும் மடகாஸ்கர்.
பரவி இருக்கும்
இடங்கள்: அந்தமான் நிக்கோபார் தீவுகள், எல் சால்வடார், கியூபா, போர்ட்டோ ரிக்கோ,
கேனரி தீவுகள், தெற்கு ஃபுளோரிடா, ஹெய்ட்டி டொமினிகன்
ரிபப்ளிக், ஜமைக்கா, லீவர்ட் தீவுகள் மற்றும் வெனிசுலியன் ஆன்ட்டில்லஸ்.
வெப்ப மண்டல
மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் வளரும் அழகு குறுமரம். 6 முதல் 12 மீட்டர் உயரம் வளரும். பல அடிமர தண்டுகள்(MULTI-STEMS) உடையதாக வளரும். இதன் மட்டை இரண்டு முதல் மூன்று
மீட்டர் நீளமாக இருக்கும். பார்க்க மினி தென்னை மட்டை போல
தோற்றம் தரும். கோடை பருவத்தில் மஞ்சள் நிறமாக பூக்கும். மொத்தத்தில் இது வீடுகளில் வளர்க்க ஏற்ற அழகு மரம்.
பறவைகளுக்கு
பழங்கள் தருவதில் இது ஒரு வேடந்தாங்கல். இந்த மரத்தை வளர்ப்பதினால் அந்த இடத்தில் இருக்கும் காற்றை
சுத்தப்படுத்தும். நாசா விண்வெளி ஆராய்ச்சி
நிலையத்தாரால் நடத்தப்பட்ட சோதனையில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பாக சைலின்
மற்றும் டொல்யூன் (XYLENE,
TOLLUNE) போன்ற நச்சு வாயுக்களை
காற்றிலிருந்து வடிகட்டி சுத்தம் செய்கிறது.
உங்கள் வீடுகளில்
சுத்தமான காற்றுடன் வசிக்க வேண்டும் என்றால் மூன்று வகையான தாவரங்களை வளர்க்க
வேண்டும் என்கிறார் கமல் மீட்டில் என்னும் ஆராய்ச்சியாளர். கமல் மீட்டில் பரிந்துரை செய்யும் மூன்று தாவரங்களில் ஒன்று நமது
மூங்கில்பனை மற்ற இரண்டும் மாமியார் நாக்கு மற்றும் மணி பிளான்ட்(MOTHER IN LAW’S TONGUE & MONEY PLANT).
நல்ல வளமான, ஊட்டம் நிறைந்த, வடிகால் வசதி உள்ள மண்ணில் நன்கு
வளரும். ஓரளவு நிழல் உடைய பகுதிகளில் நன்கு
வளரும். நல்ல சூரிய ஒளியைக் கூட தாங்கும். ஆனால் அதிகப்படியான வெப்பம் இதன் இலைகளை கருகடித்து விடும்.
குளிர்ச்சியான
பருவநிலை உள்ள பகுதிகளில் இது பிரபலமான வீட்டுச் செடி. வீட்டின் உட்புறம் உள்ள மாசுகளை அகற்றி காற்றினை சுத்தப்படுத்தும்
சக்தி உடையது இந்த மூங்கில்பனை.
தொட்டிகளில்
வளர்க்க பொருத்தமான அழகுப் பனை. இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு
ஒருமுறை தொட்டிகளை மாற்ற வேண்டும்.
மூங்கில்பனை
தொட்டிகளை நேரடியாக சூரிய ஒளி வீசும் படியான இடங்களில் வைக்காமல் இருக்க வேண்டும். பகுதி நேரம் மட்டுமே சூரிய ஒளி படும் இடங்களில் இவற்றை வைத்து
வெற்றிகரமாக வளர்க்கலாம்.
தொட்டியில் ஈரம்
இருக்கும் அளவு தண்ணீர் தரலாம். வேர்ப்பகுதியில் தண்ணீரில் தண்ணீர்
தேங்கி நிற்க கூடாது. அதேபோல் அவற்றை அதிகம் காய விடவும்
கூடாது. அதிகம் காயவிட்டால் அதன் இலைகள் காவி
நிறத்தில் கருகத் தொடங்கிவிடும்.
மூங்கில் பனை
செடிகளை வீட்டில் வளர்த்தால் அங்கு செல்வ வளம் பெருகும், மன அமைதி கிடைக்கும், என்று நம்புகிறார்கள்.
மூங்கில்பனையை ஒரு
முறை கொண்டு வந்து வீட்டில் வைத்து விட்டால் 10 ஆண்டுகள் கவலைப்பட வேண்டாம், காரணம் இதன் வயது பத்து ஆண்டுகள்.
மூங்கில் பனை
வளர்ப்பதில் உங்களுக்கு சுவாரஸ்யமான தகவல்கள் ஏதும் தெரிந்திருந்தால் எனக்கு
சொல்லுங்கள், நன்றி வணக்கம்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY.
WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment