பிராசிமம் ரத்த சிவப்பு மரம் |
(BROSIMUM BLOODWOOD TREE)
கினோ பிசின் தரும் பிளட் வுட் ட்ரீஸ் என்றும் ரத்த சிவப்பு மர வகைகளில் பிராசிமம் ரத்த சிவப்பு மரமும் ஒன்று, இது ஒரு பசுமை மாறாமரம், மரங்கள் கடினமானவை உறுதியானவை, இசைக்கருவிகள் மற்றும் உதிரி பாகங்கள் செய்ய, உதவுகிறது, எல்லா மரச் சாமான்களும் செய்யலாம், இந்த மரத்தின் பிசின் மருந்தாகப் பயன்படுகிறது, பலவிதமான நோய்களைக் குணப்படுத்துகிறது..
தாவரவியல் பெயர்: பிராசிமம் ரூபசென்ஸ் (BROSIMUM RUBESCENS)
தாவர குடும்பம்: மோரேசி (MORACEAE)
பொதுப் பெயர்கள்: பிளட்வுட், சாட்டின் வுட் (BLOOD WOOD, SATTIN WOOD)
பரவியிருக்கும் இடங்கள்: தென் அமெரிக்கா, பிரேசில், பொலிவியா, பெரு, வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, பனாமா, கோஸ்டாரிகா தென்அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் இந்த மரம் அதிகம் பரவியுள்ளது.
இந்த மரம் ஒரு பசுமை மாறாமரம் 40 மீட்டர் வரை உயரமாக மரத்தின் தலைப்பகுதி சிறிய அளவு பரந்து வளரும்.
மரங்கள் கடினமானவை உறுதியானவை மற்றும் நாள்பட உழைக்கும் தன்மை உடையவை ஒரு தரமான மரத்தின் உதவியோடு செய்யக்கூடிய எல்லா மர சாமான்கள் செய்யவும் இந்த மரம் பயன்படும்.
மரங்களில் இருந்து இயற்கையாக கிடைக்கும் பிசின்கள்
அனைத்திற்கும் பொதுவான பெயர் கினோ
பிசின்.
இந்த கினோ பிசின் முக்கியமாக பெயிண்ட் தயாரிக்க, மாத்திரை மருந்துகள் தயாரிக்க, ஒட்டும் பொருளாக, நோய்களை குணப்படுத்தும் மருந்துகள் தயார் செய்ய, கேக் சாக்லேட் ஐஸ்கிரீம் ஆகிவை தயார் செய்ய, நூல் துணிகள் மற்றும் தோல் பொருட்களுக்கு சாயம் ஏற்ற என பல்வேறு தொழில்களுக்கு உபயோகமாக உள்ளது.
இந்த மரத்திலிருந்து வடியும் பாலை பல நாடுகளில் மருந்தாகப் பயன்படுத்தி பல நோய்களை குணப்படுத்துகிறார்கள்.
இந்த
மரத்தின் மரக்கட்டைகள் முக்கியமாக வயலின், பியானோ போன்ற இசைக்கருவிகள், அவற்றிற்கான
உதிரி பாகங்கள், ரேடியோ தொலைக்காட்சி பெட்டிகள் போன்றவை செய்ய, பயன்படுத்தப்பட்டு
வருகின்றன.
இந்த மரங்களின் வைரப் பகுதி எல்லாம் சிவப்பு கலந்த பல நிறங்களில்
மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும். மர அங்காடிகளில் இதர மரங்களை விட அதிக விலைக்குப் போகும் என்பது
முக்கியமான தகவல்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment