Monday, July 10, 2023

BLACK WATTLE TREE OF CONSTRUCTION 245.கருப்பு வேட்டில் வீடுகட்டும் மரம்

 

கருப்பு வேட்டில்
வீடுகட்டும் மரம்
 

வேட்டில் என்றால் மிக வேகமாக எளிதாக வீடுகள் கட்டும் முறை என்று அர்த்தமாம். வெள்ளைக்காரர்கள் புதியதாக குடியேறும் இடங்களில் விரைவாக வீடுகள் அமைக்க உதவும் மரங்கள் என்பதால் கருவை மரங்களை ஆஸ்திரேலியாவில் கட்டுமான மரம்  என்று அர்த்தம்.

தாவரவியல் பெயர்:கேசியா மீரன்சி (ACACIA MEERANSII)

பொதுப் பெயர்கள்: பிளாக்வேட்டில், லேட்பிளாக்வேட்டில் கிரீன் வேட்டில்(BLACK WATTLE, LAKE BLACK WATTLE, GREEN WATTLE)

தாவரக் குடும்பம் ஃபேபேசி (FABACEAE)

தாயகம்: டாஸ்மேனியா, தென்கிழக்கு ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியாவில் கருப்பு வேட்டில் மரத்தை அருகி வரும் அல்லது அழிந்து வரும் மரம் என அறிவித்துள்ளார்கள்.

இதன் விதைகளை சாப்பிடலாம், இதன் காய்கள் காவி நிறமாக மாறும்போது அறுவடை செய்யலாம், இந்த விதைகளை வறுக்கும் போது சாக்லேட் மற்றும் காப்பி வாசனை கலந்து வீசுமாம்.

வியாபார ரீதியான பண்புகள் என பார்த்தால், ஒன்று அதிகமாக இருக்கும் டானின் சத்து, இன்னொன்று விறகாக பயன்படுத்துவது மற்றும் இதன் பிசினை சாம்பலுடன் கலந்து சிமென்ட் தயாரிக்க பயன்படுத்துவது.

இதன் பட்டைகளில் உறுதியான கயிறுகள் தயாரிக்கிறார்கள்.

குன்னவால் (NGUNNAWAL)  எனும் பழங்குடி மக்கள் இதன் பிசினை உணவாக சாப்பிடுகிறார்கள். பட்டைகளில் தயார் செய்யும் குடிநீரை செரியாமை பிரச்சினைக்கு  மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.

பரவி இருக்கும் இடங்கள்:

வட அமெரிக்கா, தென்மெரிக்கா, ஆசியா, அய்ரோப்பா, பசிபிக் தீவுகள் மற்றும் இந்து மகா சமுத்திரத் தீவுகள், ஆப்பிரிக்கா, மற்றும் நியூசிலாந்து.

இந்த மரம் நேராக நிமிர்ந்து வளரும். மரத்தின் பட்டைகள் மொழு மொழுவென இருக்கும்.

இலைகள் ஒற்றைக் காம்பில் இரட்டை இலைகளாக கருவை மரம் போல சிறுசிறு இலைகள் வரிசையாக இலைக்காம்பில்  அடுக்கப்பட்டிருக்கும்.

பூக்கள் மஞ்சள் மற்றும் லேசான மஞ்சள் நிறத்தில் உருண்டையாக இருக்கும். நல்ல வாசமுடையவைகளாக இருக்கும்.

காய்கள் கருப்பு மற்றும் சிவப்பும் செங்காவி நிறமும் கலந்த  நிறத்தில் இருக்கும். உள்ளூர் மரங்களுக்கு இவை உபத்திரவம் தருவதாக இருக்குமாம்.

இந்த மரங்கள் 10 மீட்டர் உயரமாக வளரும். உயரமான மரங்கள் வளரும் காடுகள் இதற்கு பொருத்தமானவை. சராசரியான மண்கண்டத்திலும் வறண்ட பகுதிகளிலும் இந்த மரம் சரிவர வளராது.

ஏராளமான விதைகளை உற்பத்தி செய்யும். இந்த விதைகள் மரத்தடியில் குவியலாகக் கொட்டி கிடக்கும்.

இதன் வேர்களில் ஏராளமான வேர்ச்செடிகளை உற்பத்தி செய்யும். கருப்புவாட்டில் மரங்களின் விதைகள் 50 ஆண்டுகள் வரை முளைப்புத்தன்மை இழக்காமல் இருக்கும். பல நாடுகள் இதனை களைச்செடியாக கருதுவதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் இதன் வேர்ச்செடிகள் மற்றும் இதன் விதைகள்.

இந்த மரங்கள் ஒற்றை அடிமரம் உடையதாக இருக்கும். பல அடிமரங்களை உடையதாகவும் வளரும். ஆறு முதல் 25 மீட்டர் வரை உயரமாக வளரும். அடி மரத்தின் குறுக்களவு அதிகபட்சம் 50 சென்டிமீட்டர் வரை இருக்கும். மரத்தின் தலைப் பகுதி தா இருக்கும், படர்ந்து இருக்கும், ஏறத்தாழ வட்ட வடிவமாக இருக்கும், முட்கள் இருக்காது, பட்டைகள் உறுதியாக வெடிப்புகளுடனும் காவி மற்றும் கருப்பு நிறமாக இருக்கும். இதன் இலைகள் ஆலிவ் பச்சை நிறத்தில் 20 சென்டிமீட்டர் நீளமாக இருக்கும்.

கருப்பு வேட்டில் மரம் பற்றிய இன்னும் சுவாரசியமான செய்திகள் ஏதாவது தெரிந்திருந்தால் எனக்கு சொல்லுங்கள் நன்றி 

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

No comments:

HOW TO ENHANCE PULICAT ECO SYSTEMS - பழவேற்காடு ஏரியின் சூழல் பிரச்சனைகளுக்கான எனது மூன்று ஆலோசனைகள்

  கடிதம்  2 பழவேற்காடு ஏரியின்   சூழல் பிரச்சனைகளுக்கான எனது மூன்று  ஆலோசனைகள் ! DR.P.SATHYASELAVAM, DR.SELVAM அன்பின் இனிய   நண்பர...