Tuesday, July 4, 2023

BEST MULTIPUPOSE TREE AFRICAN KINO GUM 230. முக்கிய தீவனமரம் ஆப்பிரிக்கன் கினோ பிசின் மரம்

 

ஆப்பிரிக்கன் கினோ
பிசின் மரம்


தாவரவியல் பெயர்: டெரோகார்பஸ் எரிநேசியஸ்
 (PTEROCARPUS ERENACEUS)

தாவரக் குடும்பம்: ஃபேபேசி (FABACEAE)

பொதுப் பெயர்கள்: பார்வுட் ,ஆப்ரிக்கன் கினோ ட்ரீமுனிங்கா, வேணி, முக்குவா (BAR WOOD,AFRICAN KINO TREE,MUNINGA, VENI, MUKWA  )

தாயகம்: மேற்கு ஆப்பிரிக்கா

சிவப்பு நிற கினோ பிசின் தரும். மஞ்சள் முதல் ரோஜா பூ நிற கட்டைகள் தரும். எரிபொருளுக்கான சார்கோல், தோல் மற்றும் துணிகளுக்கு போடும் சாயம், கால்நடைகளுக்கு தீவனம், மற்றும் பாரம்பரிய மருத்துவ சிகிச்சைகள் தர மருந்தாக இலைகள், பட்டைகள், மற்றும் வேர்கள் தரும் மரம்.

நம்ம ஊரில் இருக்கும் வேங்கை மரமும் இதுவும் ஒரே தாவர குடும்பத்தை சேர்ந்தவை. நம்ம ஊர் வேங்கை மரமும் கினோ பிசின் தரும். அதனால் அதன் பெயர் இந்தியன் கினோ மரம். அதுபோல இந்த மரத்தின் பொது பெயர் ஆப்பிரிக்கன் கினோ மரம்.

மாலி என்னும் ஆப்பிரிக்க நாட்டில் மிக முக்கியமான தீவன மரம் இது. கிட்டத்தட்ட அங்கு சுமார் 75% தீவனத் தேவையை நிறைவு செய்கிறது.

ஆப்பிரிக் கினோ மரத்திற்கு ஏற்றுமதி சந்தைகளில் பெரிய வாய்ப்பு இல்லை. எனிலும் உள்ளூரில் பரவலாக பயனாகிறது கட்டுமான வேலைகள் மற்றும் மேஜை நாற்காலி போன்ற மரச்சாமான்கள் செய்வதற்கு பயன்படுகிறது.

மருத்துவப் பயன்கள், ஆப்பிரிக்காவின் பாரம்பரிய மருத்துவத்தில் இந்த மரம் முக்கிய பங்கு வகிக்கிறது. வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு, காய்ச்சல் கொனேரியா, கண்நோய்கள், தொழுநோய் உடற்புண், காயங்கள், மற்றும் சிபிலிஸ் மாதிரியான பாலியல் நோய்கள் ஆகியவற்றைக் குணப்படுத்தும். இவை தவிர இதனை ஆண்மை பெருக்கியாகவும் பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்கள்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...