Wednesday, July 5, 2023

BALOGHIA BLOOD RED TREE 237.பலோஜியா ரத்த சிவப்பு மரம்


பலோஜியா
ரத்த சிவப்பு மரம்


தாவரவியல் பெயர்
: பலோஜியா அயனோபில்லா (BALOGHIA INOPHYLLA)

தாவரக் குடும்பத்தின் பெயர்: ஈப்பர்பியேசி (EUPHORBIACEAE)

பொது பெயர்கள் ஐவரி பிர்ச் ட்ரீ, ஸ்க்ரப் பிளட் வுட்,  பிரஷ் பிளட் வுட்(IVORY BIRCH WOOD, SCRUB BLOOD  WOOD, BRUSH BLOOD WOOD).

ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான ரத்த சிவப்பு மரம், அசப்பில் ரத்த சிவப்பான பிசின் டிக்கும்,  சுமார் 82 அடி உயரம் வரை வளரும், நடுத்தரமான மரம், மரங்களின் பட்டைகள் கூட சிவப்பாகவும் காவி மற்றும் சந்தன நிறம் கலந்தது போல கவர்ச்சிகரமாக இருக்கும், இலைகள் தடிமனாக பளபளப்பான பசுமை நிறத்திலும் இருக்கும்,

இந்த மரத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. நிறைய மரங்கள் காய்ந்த பிறகு அடுப்பில் வைத்தால் கூட எரியாது ஊதாங்கோலுடன் பாடாய்ப்பட வேண்டி இருக்கும்.

ஆனால் இந்த பலோரியா மரம் பச்சை மரங்களை பற்ற வைத்தால் கூட மளமளவெனப் பற்றி எரியும். அதற்கு காரணம் இந்த மரத்தில் இருக்கும் செந்நிற பிசின் தான் காரணம் என்று சொல்லுகிறார்கள்.

இந்த மரங்கள் நிறைந்த மழை காடுகளில் வசித்த பழங்குடி மக்கள், இதன் பிசினை டானிக்காகவும் உடல் நோய்களை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுத்தி இருக்கிறார்கள். மரச்சாமான்கள் மற்றும் துணிமணிகளுக்கு சாயம் ஏற்றவும் இதனை பயன்படுத்தி உள்ளார்கள்.

இந்த மரத்தை யாரும் விரும்பி வளர்ப்பது கிடையாது. அந்த பழக்கமும் இல்லை. ஆனால் மிக அழகான மரங்கள் என்று சொல்லுகிறார்கள்.

ஒரு காலத்தில் விலை மலிவு என்பதாலும் உற்பத்தி செலவு குறைவு என்பதாலும் இயற்கையான கச்சா பொருட்களுக்கு பதிலாக செயற்கையான பொருட்களை புதிது புதிதாக கண்டுபிடித்து பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

ஆனால் சமீபகாலமாக புதுப்புது நோய்கள் வந்து நம்மை பாடாய்படுத்த ஆரம்பித்த பிறகு, நமது கவனம் முழுக்க தற்போது இயற்கை பக்கம் திரும்பி உள்ளது. அதனால் தான் தொழிற்சாலைகளும் மீண்டும் தங்கள் பார்வையை மரங்கள் செடிகள் மூலிகைகள் குடியல் பக்கம் திருப்பி உள்ளன.

அதனால் பல நாடுகளிலும் மரங்கள் எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டன என்ற தகவல்கள் நமக்கு உபயோகமாக இருக்கும். அதனால்தான் உங்களுக்கு இந்த ஆஸ்திரேலிய மரத்தைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். அதுமட்டுமல்ல, இன்று அயல் நாடுகள் எல்லாம் கூட அடுத்த்த் தெரு மாதிரி ஆகிவிட்டன. நான் சொல்லுவது சரிதானே ?

 A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE  A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

  

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...