Wednesday, July 5, 2023

AUSTRALIAN BUSINESS TREE RED GUM MARRI 233. ஆஸ்திரேலிய சிவப்பு பிசின் தைல மரம்

 

ஆஸ்திரேலிய சிவப்பு பிசின்
தைல மரம் 

சிவப்பு பிசின் தைலமர காய்கள் 

மேற்கு ஆஸ்திரேலியாவின் அழிந்துவரும் மரம் என அறிவிக்கப்பட்ட மரம், பழங்குடி மக்களின் மரம், வியாபார ரீதியில் பயன்படுத்த  சிவப்பு நிற பிசின் தரும் மரம், பாரம்பரிய மருத்துவத்திற்கு கைகொடுக்கும் மரம், வீட்டிலும் வெளியிலும் பயன்படுத்தும்  மரச்சாமான்கள்  செய்ய  மரக்கட்டைகள் தரும் ஒருவகையான யூகாலிப்டஸ் மரம். இதனை மர்ரிமரம்  (MARRI TREE) என அழைக்கிறார்கள்.

தாவரவியல் பெயர்: கொரிம்பியா கேலோபில்லா (CORYMBIA CALOPHYLLA)

தாவரக் குடும்பப் பெயர்: மிர்டேசியே (MYRTACEAE)

ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியில் வசிக்கும் மூங்கார் என்ற பழங்குடி மக்களின் கலாச்சாரத்துடன் மிகவும் தொடர்புடைய மரம் இது.

இந்த மரத்திலிருந்து அடர் சிவப்பு நிறத்தில் வடியும் பிசின் வணிக ரீதியில் பயன்படுகிறது. பாரம்பரிய மருத்துவத்தில் பரவலாக இந்த பிசின் பயன்படுத்தப்படுகிறது. இதன் பெயரால் தான் இதனை சிவப்பு பிசின் தைல மரம் என்று சொல்லுகிறார்கள்.

இந்த சிவப்புப் பிசினில் கணிசமான அளவு டேனின்சத்து அடங்கியுள்ளது. அதனால் கங்காருவின் தோலினை பதப்படுத்த இந்தப் பிசினைப் பயன்படுத்துகிறார்கள்.

மேலும் இதில் நோய்க்கிருமிகளின் எதிர்ப்பு சக்தி இருப்பதால் உடலில் ஏற்படும் புண்கள் மற்றும் காயங்களை குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள்.

இந்தப் பிசினை தூளாக்கி அதனை தண்ணீரில் கரைத்து கரைசலாக்கி அதனை கொப்பளிப்பதன் மூலம் வாய்ப்புண்ணை குணப்படுத்துகிறார்கள்.

இதன் மரங்கள் சுமாரான தரம் உடையவைதான். ஆயினும் வீடுகள் கட்ட, பெட்டிகள் செய்ய, படகுகள் கட்ட, என்று பயன்படுத்துகிறார்கள்.

மரங்கள்  நல்ல உயரமாக வளரும். அதிகபட்சமாக 233 அடி உயரம் வரை  உள்ள மரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பூக்கள் வெள்ளை மற்றும் ஊதா வண்ணத்தில் பூக்கின்றன. இதன் காய்கள் வித்தியாசமான வடிவத்தில் உள்ளன. இதன் கொட்டைகள் காக்காட்டு (COCKATOO) என்னும் ஒரு வகை கிளிகளுக்கு உணவாகின்றன.

இருமண்பாடான களிமண் முதல் மணற்சாரியான மண்வகை மற்றும் சரளை மண்வரை எல்லா மண் வகைகளிலும் இந்த மரங்கள் வளருகின்றன. ஆஸ்திரேலியக் காடுகளின் பிரதான மரங்கள் என்பவை  ஆறுவகை யூகாலிப்டஸ் மரங்கள்தான், அவற்றில் ஒன்றுதான் நமது கொரிம்பியா கேலோபில்லா தைலமரம்.

இந்த மரம் வடிக்கும் பிசினில் அதிகஅளவு டேனின்சத்து அதிகம் உள்ளது. இதில் நோய்த்தடுப்பு சக்தி அடங்கியுள்ளது. பெருங்காயங்களில் ஏற்படும் ரத்தக் கசிவை தடுக்க, சீதக்கடுப்பைத் தடுக்க, கங்காரு உட்பட பலவித பிராணிகளின் தோல்களை பதப்படுத்த, மருந்துகள், மாத்திரைகள் தயாரிக்க, இந்த கினோ பிசினை வியாபார ரீதியில் பயனாகிறது.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...